What reduces cancer risk the most: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, உணவுமுறை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாக பாதிக்கிறது. இது உடல் எடை அதிகரிப்பு, இதய நோய், புற்றுநோய் மற்றும் பிற நாள்பட்ட நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த வரிசையில் புற்றுநோய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
எந்த ஒரு உணவும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்றாலும், சில ஆரோக்கியமான சேர்க்கைகளின் உதவியுடன் புற்றுநோய் அபாயத்தை வெகுவாகக் குறைக்க முடியும். அதன் படி, நன்மை பயக்கும் சேர்மங்களைக் கொண்ட குறிப்பிட்ட உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பது புற்றுநோய் வளர்ச்சியைக் குறைக்கலாம் என்று பல ஆய்வுகளில் குறிப்பிடுகிறது. ஹார்வர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டகிராம் பதிவில் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும் மூன்று பானங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Cancer prevention: பெண்களின் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்!!
கேன்சரைத் தடுக்க குடிக்க வேண்டிய பானங்கள்
டாக்டர் சௌரப் அவர்கள் கூறியதாவது,”புற்றுநோய் தடுப்பில் முக்கிய காரணியாக இருக்கக்கூடிய, இயற்கையாகவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் வீக்கத்தைக் குறைக்க மூன்று அறிவியல் ஆதரவு பானங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், சிறிய பழக்கவழக்கங்கள் நீண்டகால பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்று வலியுறுத்துகிறார்.
முக்கிய கட்டுரைகள்
பச்சை ஸ்மூத்தி
கீரை அல்லது காலே போன்ற இலைக் கீரைகளை செலரி, வெள்ளரிக்காய் மற்றும் சிறிது இஞ்சியுடன் சேர்க்க வேண்டும். இந்த பானம் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இலைக் கீரைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த பச்சை ஸ்மூத்தியானது தோல், இதயம், கண்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
பச்சை தேயிலை
“கிரீன் டீ ஆனது கேட்டசின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்ததாகும். மட்சா என்பது கிரீன் டீயின் செறிவூட்டப்பட்ட வடிவமாகும். மேலும் இது கூடுதல் சக்தி நிறைந்ததாகும்” என்று டாக்டர் சேதி கூறியுள்ளார். கிரீன் டீ அருந்துவது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
மஞ்சள் பால்
மஞ்சளில் உள்ள முக்கிய கலவையான குர்குமின், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும், புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துவதற்கு பாதாம் பால் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்ப்பது நன்மை பயக்கும் எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதற்காக சில ஆரோக்கியமான உணவுகளின் பட்டியலையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர்
ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற சிலுவை காய்கறிகளில் சல்ஃபோராபேன் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களை குறிவைத்து கொல்லும் ஒரு கலவை ஆகும்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Cancer Foods: உஷார்! இந்த உணவெல்லாம் காலையில் சாப்பிட்டா வாய் புற்றுநோய் கன்ஃபார்ம்
பெர்ரி
பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், புற்றுநோய் வளர்ச்சியை மெதுவாக்கவும் உதவுகிறது.
பூண்டு
இதில் அல்லிசின் எனப்படும் சக்திவாய்ந்த சேர்மம் உள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் விளைவுகளை அதிகரிக்க சமைக்கும் முடிவில் பூண்டைச் சேர்க்க மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கலவையானது புற்றுநோய் செல் வளர்ச்சியை அடக்குவதாகக் கூறப்படுகிறது. சிறந்த உறிஞ்சுதலுக்காக கருப்பு மிளகுடன் இதை உட்கொள்வது நன்மை பயக்கும்.
நட்ஸ்
பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற நட்ஸ்களில் வைட்டமின்கள், புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளால் நிறைந்துள்ளது. இவை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
உணவுமுறையைத் தாண்டி பல்வேறு காரணிகள் புற்றுநோய் அபாயத்தைப் பாதிக்கும் என்றாலும், பல உணவுகள் புற்றுநோய் செல்களின் பரவல் மற்றும் வளர்ச்சியை மெதுவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Cancer Fighting Foods: புற்றுநோயை தடுக்கும் சூப்பட் ஃபுட்ஸ் இதோ..
Image Source: Freepik