National Dengue Day 2025 home remedies to get rid of mosquitoes: நாம் பெரும்பாலும் கொசுக்கள் கடிப்பதை சாதாரணமாக எண்ணுகிறோம். ஆனால் கொசுக்களால் ஏற்படும் கொடிய நோய்களில் மலேரியா, டெங்கு போன்றவை அடங்குகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் ஆனது ஏடிஸ் எஜிப்டி என்ற கொசு கடிப்பதால் ஏற்படக்கூடியதாகும். பொதுவாக, கொசுக்கள் இரவு முழுவதும் தூங்க விடாமல் அமைதியைக் கெடுக்கிறது. ஆனால், டெங்கு கொசுக்களானது அதிக காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மக்கள் நீண்ட நேரம் படுக்கையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களை எச்சரிக்கும் வகையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே 16 ஆம் நாள் தேசிய டெங்கு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
2010 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சகத்தால் இந்த டெங்கு தினம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நாளுக்காக ஒரு சிறப்பு கருப்பொருளானது தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு தேசிய டெங்கு தினத்தின் கருப்பொருளாக, "முன்கூட்டியே செயல்படுங்கள், டெங்குவைத் தடுக்கவும்: சுத்தமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை” என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்க, கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது முக்கியமாகும். இதில் கொசுக்களை நீக்குவதற்கு உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம். இதன் மூலம் கொசுக்கள் வருவதைத் தடுத்து டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொசுபத்திலாம் வேணாம்! வீட்டிலேயே தயார் செய்த இந்த கொசு விரட்டிகளை யூஸ் பண்ணுங்க
கொசுக்களிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்கள்
கிராம்பு மற்றும் எலுமிச்சை பயன்பாடு
நம் வீட்டிலேயே பாதுகாப்பான முறையில் கொசுக்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு உதவும் எளிய வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக கிராம்பு மற்றும் எலுமிச்சை அமைகிறது. இந்த ரெமிடியைத் தயார் செய்வதற்கு எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதில் சில கிராம்பு துண்டுகளைப் போட வேண்டும். எலுமிச்சை மற்றும் கிராம்பின் நறுமணம் வீட்டில் சுற்றித் திரியக்கூடிய கொசுக்களை விரட்டுகிறது. குறிப்பாக, இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்திருப்பதே காரணமாகும். இந்த செய்முறை, கொசுக்களுக்கு எதிராக அற்புதங்களைச் செய்கிறது.
முக்கிய கட்டுரைகள்
வேப்ப எண்ணெயின் பயன்பாடு
கொசுக்களிலிருந்து விடுபட வேப்ப எண்ணெய் சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு வேப்ப எண்ணெயை தண்ணீரில் கலந்து கொசுக்கள் மீது தெளிப்பது போல தெளிக்க வேண்டும். ஏனெனில், வேம்பில் உள்ள ஆரோக்கியமான பண்புகளே காரணமாகும். இந்த தெளிப்பின் விளைவை அதிகரிப்பதற்கு வேப்ப எண்ணெயுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் எண்ணெயையும் தண்ணீரில் சேர்த்து பயன்படுத்தலாம்.
கொசு வலையைப் பயன்படுத்துவது
டெங்குவைப் பரப்பக்கூடிய கொசுக்கடியிலிருந்து விடுபட விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த மற்றும் எளிய தீர்வாக கொசு வலையைப் பயன்படுத்துவது அடங்கும். இதற்கு படுக்கையைச் சுற்றி ஒரு கொசு வலையைத் தொங்கவிட வேண்டும். பகலில் தூங்க வேண்டிய நிலை இருந்தாலும் கூட, கொசு வலையால் மூடப்பட்ட படுக்கையில் தூங்குவது அவசியமாகும். கொசுக்கள் தூங்கும்போது நீண்ட நேரம் இரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதால், அதை ஒருவர் உணர முடியாத நிலை ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலையில், கொசு வலையில் தூங்குவதால், கொசுக்கள் எளிதில் நம்மை அடைய முடியாது.
இந்த பதிவும் உதவலாம்: Mosquito Bites Remedies: கொசுக்கடி அரிப்பை ஆற்றும் சூப்பரான வீட்டுவைத்தியங்கள் இதோ!
பூண்டு பயன்பாடு
கொசுக்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க நம் வீட்டில் உள்ள எளிய சமையல் பொருளாக விளங்கும் பூண்டுவைப் பயன்படுத்தலாம். இது கொசுக்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம் ஆகும். கொசுக்களை விரட்ட, பூண்டு ஒரு சிறந்த தேர்வாகும். இதற்கு தண்ணீரில் பூண்டு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் இந்த தண்ணீரை ஒரு மணி நேரம் தனியாக விட்டுவிட்டு, பின்னர் கொசுக்களை விரட்ட அதன் மீது தெளிக்கலாம். இது கொசுக்களை விரட்ட வழிவகுக்கிறது.
கற்பூரத்தை எரிப்பது
கொசுக்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ள தேர்வுகளில் ஒன்றாக கற்பூரம் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொசுக்களை விரட்ட இரண்டு வழிகளைத் தேர்வு செய்யலாம். இதில் முதல் தேர்வாக, வீட்டில் 10 முதல் 20 நிமிடங்கள் கற்பூரத்தை எரிக்க வேண்டும். இதைச் செய்யும் போது, ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இது கொசுக்களை அழிக்க உதவுகிறது. இதன் மற்றொரு வழியாக கற்பூரத்தை 1 முதல் 2 நாட்கள் தண்ணீரில் ஊற வைப்பது அடங்கும். பிறகு, இந்த கற்பூர நீரை கொசுக்களை விரட்ட ஒரு தெளிப்பாகப் பயன்படுத்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தேசிய டெங்கு தினம் ஏன் கொண்டாடப்படுகிறது.? வரலாறு, முக்கியத்துவம், கருப்பொருள் இங்கே..
Image Source: Freepik