Mosquito Control: கொசுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்கனுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
Mosquito Control: கொசுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் இருக்கனுமா? இதை ஃபாலோ பண்ணுங்க!


Mosquito Control at Home: கோடை காலத்தில் பெய்யும் பருவமழை உங்களை நோய்வாய்ப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் கொசுக்களும் உங்களை மிகவும் தொந்தரவுப்படுத்தும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கொசுக்களால் தான் மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பிரச்சனைகள் வருகின்றன.

மாலையில் தற்செயலாக ஒரு சின்ன கேப் கிடைத்தால் கூட, வீடு முழுவதும் கொசுக்கள் தொற்றிக் கொள்ளும். வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட, சிலர் சுருள்களைப் பயன்படுத்துகிறார்கள், சிலர் திரவங்கள் மற்றும் ஸ்ப்ரேக்களை தெளிக்கிறார்கள். இருப்பினும், இந்த விஷயங்களால் பலன் கிடைப்பதில்லை, கொசுக்கள் எப்படியாவது வந்து தொந்தரவு செய்யத்தான் தொடங்குகின்றன.

கொசுக்கள் வீட்டுக்குள் வராமல் இருக்க என்ன செய்வது?

கொசுக்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடனே, அவற்றை அகற்றுவதிலேயே அனைவரின் மனமும் கவனம் செலுத்துகிறது. மழைக்காலத்தில் கொசுக்கள் உற்பத்தியும் அதிகமாக இருக்கும், இந்த காலக்கட்டத்தில் கொசுக்களால் பலவகை நோய்கள் பரவுகின்றன. எனவே கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

கொசுக்களை விரட்டும் வீட்டு வைத்தியம்

காபி தெளிப்பு

இன்றைய வாழ்க்கைமுறையில் காபி இல்லாத வீடுகளே இருக்காது. மக்கள் விரும்பும் அளவுக்கு கொசுக்கள் காபியை விரும்புவதில்லை. வீட்டில் உள்ள கொசுக்களை விரட்ட பாட்டிலில் தண்ணீர் எடுத்து அதில் 1 ஸ்பூன் காபி கலந்து தெளிக்கவும். காபி ஸ்ப்ரே மூலம் கொசுக்களை எந்த நேரத்திலும் ஒழித்து விடுவீர்கள். உங்கள் வீட்டிலோ அல்லது சுற்றுப்புறத்திலோ எங்கு தண்ணீர் தேங்குகிறதோ, அங்கே காபி தூள் அல்லது காபி தூள் கலந்த பொடியை தெளிக்கலாம்.

பூண்டு

கொசுக்களை விரட்டவும் பூண்டு ஒரு நல்ல வழி. இதற்கு, 2 முதல் 4 கிராம் பூண்டுகளை லேசாக நசுக்கி, 1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீரை ஆறவைத்து ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கவும். இந்த பூண்டு தண்ணீரை மாலையில் வீடு முழுவதும் தெளிக்கவும். இந்த தண்ணீரை வீட்டின் மூலைகளில் ஊற்றினால், கொசுக்கள் முற்றிலும் வீட்டை விட்டு வெளியேறும்.

சோயாபீன் எண்ணெய்

இது சற்று விசித்திரமாகத் தோன்றலாம், சோயாபீன் எண்ணெயைக் கொண்டு கொசுக்களை விரட்டுவது மிகவும் எளிதான ஒன்று. இதற்கு 5 முதல் 7 பருத்தி உருண்டைகளை எடுத்து அதில் சோயாபீன் எண்ணெய் தடவவும். இதற்குப் பிறகு, இந்த பருத்தி பந்துகளை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கவும். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் கொசுக்கள் உற்பத்தியாகாது.

புதினா எண்ணெய்

புதினா வாசனையால் கொசுக்கள் எரிச்சலடைகின்றன. கொசுக்களை விரட்ட புதினா எண்ணெயை வீடு முழுவதும் தெளிக்கவும். நீங்கள் விரும்பினால், சில புதினா இலைகளை வீட்டின் வெவ்வேறு மூலைகளில் சேமித்து வைப்பதன் மூலமும் கொசுக்களை அகற்றலாம்.

வேப்ப எண்ணெய்

உங்கள் வீட்டிலிருந்து கொசுக்களை விரட்ட வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். இது தவிர, வேப்ப எண்ணெயை உடலின் பல்வேறு பகுதிகளில் தடவலாம். இப்படி செய்வதால் கொசுக்கள் உங்களை விட்டு விலகி இருக்கும்.

Image Source: FreePik

Read Next

Body odour remedies: உடல் துர்நாற்றத்தை போக்க இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்