$
Home remedies for body odour: உடல் துர்நாற்றம் இன்று பலரும் அனுபவிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். குறிப்பாக, வெளியில் சென்று வீட்டிற்கு வந்த பின்னர் நம் உடலிலிருந்து வெளியேறும் செட்ட வாசனையை பலரும் விரும்ப மாட்டார்கள். இது பெரும்பாலும் வியர்வை என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உடலிலிருந்து வெளியேறும் வாசனையானது உடலின் வெப்பநிலையை சீராக்க உதவும் ஒரு இயற்கையான செயல்முறையாகக் கருதப்படுகிறது. எனினும் இந்த விரும்பத்தகாத வாசனையைத் தவிர்க்க சில இயற்கை வைத்தியங்கள் உள்ளது. இந்த வகை குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் வாசனையைத் தவிர்ப்பதுடன் நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இதில் உடல் துர்நாற்றத்திற்கான சில எளிய வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
உடல் துர்நாற்றத்திற்கான காரணங்கள்
உடலில் சருமத்தின் மேற்பரப்பில் வியர்வை மற்றும் பாக்டீரியாவின் தொடர்பு காரணமாக உடல் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதில் உட்லைல் உள்ள வியர்வை சுரப்பிகள் ஆனது நீர், உப்புகள், கரிம சேர்மங்கள் போன்ற கலவையை சுரக்கிறது. ஆய்வு ஒன்றில் இந்த வியர்வையின் காரணமாக பாக்டீரியாவின் வளர்ச்சிக்கு ஏற்ற ஈரப்பதமான சூழலை வழங்குகிறது. இந்த பாக்டீரியாக்கள் வியர்வையின் கரிம கூறுகளை சிதைக்கும் போது அவை வலுவான வாசனையை வெளிவிடுகிறது. இது தவிர, மரபியல், உணவு மற்றும் ஹார்மோன் அளவுகள் போன்ற காரணிகளும் உடல் துர்நாற்றத்தின் தீவிரத்தை பாதிக்கும் நிலை ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: யூரிக் ஆசிட் லெவலைக் குறைக்க இந்த ட்ரிங்ஸ் குடிங்க போதும்
உடல் துர்நாற்றத்தைப் போக்கும் வீட்டு வைத்தியங்கள்
தேங்காய் எண்ணெய் பேக்
தேங்காய் எண்ணெயுடன் சில அத்தியாவசிய எண்ணெய்களைக் கலந்து பயன்படுத்தலாம். இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியா வளர்ச்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் அத்தியாவசிய எண்ணெய்கள் அதன் இனிமையான வாசனை மற்றும் கூடுதல் பாக்டீரியா எதிர்ப்பு நன்மைகளைத் தருகிறது.

பயன்படுத்தும் முறை
- ஒரு சிறிய ஜாடி ஒன்றில் தேங்காய் எண்ணெய் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களை சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த பொருள்களை நன்கு கலக்கி, விரலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அளவு கலவையை எடுத்து, அக்குளில் தடவலாம்.
- கலவையை முழுமையாக உறிஞ்சும் வரை தேய்க்க வேண்டும்.
தக்காளி பேக்
தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்துவது கெட்ட வாசனையை நடுநிலையாக்குவதுடன், பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைப்பதற்கும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
- ஒரு தடிமனான பாத்திரத்தில் 1 தக்காளியை பேஸ்ட்டாக்கி வைத்துக் கொள்ளவும்.
- இந்த தக்காளி விழுதை, குளித்த பிறகு அக்குள் அல்லது துர்நாற்றம் வீசக்கூடிய பகுதிகளில் ஒரு மெல்லிய அடுக்காக தடவலாம்.
- இதில் தக்காளி விழுது தோலில் முழுமையாக உலர அனுமதிக்க வேண்டும்.
- சில மணி நேரம் கழித்து, இதை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இரும்பு போல வலுவான பற்களுக்கு வேப்பங்குச்சி யூஸ் பண்ணுங்க!
வேப்ப இலை பேக்
வேப்ப இலையானது அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் விளைவுகளுக்காக நன்கு அறியப்பட்டதாகும். இந்த பண்புகள் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும், உடல் துர்நாற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
- முதலில் வேப்ப இலைகளை மிக்ஸி ஜார் ஒன்றில் நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு இந்த பேஸ்ட்டை அக்குள் அல்லது துர்நாற்றம் வீசும் மற்ற பகுதிகளில் தடவலாம்.
- இந்த கலவையானது சருமத்தில் முழுமையாக உலர அனுமதிக்க வேண்டும்.
- இதை அப்படியே சில மணி நேரம் வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

கிரீன் டீ பேக்
கிரீன் டீயில் பாலிஃபீனால்கள் உள்ளது. மேலும் இவை பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்புகள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது.
பயன்படுத்தும் முறை
- ஒரு பச்சை தேயிலை பேக்கை சூடான நீரில் 3-5 நிமிடங்கள் வைக்க வேண்டும்.
- அதன் பிறகு, தேநீரை முழுமையாக குளிர்வித்து, அதை அக்குள் அல்லது துர்நாற்றம் வீசக்கூடிய மற்ற பகுதிகளில் ஊற்ற வேண்டும்.
- சிறிது நேரம், இதை சருமத்தில் இயற்கை உலர வைத்து பிறகு தண்ணீரில் கழுவலாம்.
இது போன்ற எளிமையான வழிகளில் உடல் துர்நாற்றத்தை இயற்கையான முறையில் போக்கலாம். எனினும் சருமம் உணர்திறன் மிக்கது என்பதால் சரும எரிச்சல், அரிப்பு, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த பொருள்களைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Snoring Tips: குறட்டையால் தூக்கம் கெடுதா? நிம்மதியா தூங்க இத பண்ணுங்க போதும்
Image Source: Freepik