Home Remedies To Get Rid Of Dark Underarms: இன்று பலரும் வெளிப்புற அழகிற்கு மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். ஆனால் புற அழகை கவனம் செலுத்த மறந்து விடுகின்றனர். அந்த வகையில், ஒப்பனைப் பிரச்சனையாக அக்குள் கருமை இன்று பலரும் சந்திக்கும் பிரச்சனையாக மாறிவிட்டது.
ஆனால் அக்குள்களில் படிந்திருக்கும் கருமையை நீக்குவது மிகவும் அவசியமாகும். அக்குளை நன்றாக சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வீட்டிலேயே உள்ள சில இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி அக்குள் கருமையை நீக்க முடியும். இதில் வீட்டிலேயே அக்குள் கருமையை நீக்க உதவும் சில வழிகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Betel Leaf Oil: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் மந்திர எண்ணெய்! ஈஸியான முறையில் இப்படி செய்யுங்க
அக்குள் கருமையை நீக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
பேக்கிங் சோடா
அக்குள் கருமையை நீக்குவதற்கு பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் இரண்டையும் சேர்த்து கலவையை உருவாக்க வேண்டும். இதை அக்குள் பகுதியில் தடவி வர, இறந்த சரும செல்களை நீக்கவும், கருமையை அக்குள் பகுதியிலிருந்து மெதுவாக உரிக்க வேண்டும்.
மஞ்சள்
தயிருடன் மஞ்சள் கலந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி அக்குள் கருமையை நீக்கலாம். இதற்கு மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளே காரணமாகும். மேலும், இந்த கலவை கருமையை நீக்குவதுடன், சருமத்தைப் பிரகாசமாக வைக்க உதவுகிறது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் நிறைந்துள்ளது. இவை இயற்கையாகவே அக்குள் கருமையை நீக்க உதவுகிறது. இதற்கு உருளைக்கிழங்கு தோலை சீவி, துருவி சாறாக எடுத்துக் கொள்ளலாம். இந்த சாற்றை காட்டன் துணியின் உதவியுடன், அக்குள் பகுதியில் தடவி 15-20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி விடலாம்.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சைச் சாற்றில் சிட்ரிக் அமிலம் போன்ற இயற்கையான ப்ளீச்சிங் பண்புகள் நிறைந்துள்ளது. இவை கருமையான அக்குள் சருமத்தை ஒளிரச் செய்ய உதவுகிறது. இதற்கு 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து அக்குளில் தடவ வேண்டும். இதை 20 நிமிடங்கள் வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி வர அக்குளின் கருமையை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயின் இதமான மற்றும் ப்ளீச்சிங் பண்புகள் அக்குள் கருமையை நீக்க சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு வெள்ளரிக்காயை வட்ட வடிவில் நறுக்கி, குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த வெள்ளரிக்காயை எடுத்து அக்குள் பகுதியில் 15 நிமிடங்கள் வரை வைத்து பின் கழுவலாம். இவ்வாறு செய்து வர, அக்குள் கருமை நீங்கி சருமம் பொலிவு பெறும்.
கற்றாழை
பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கற்றாழையைக் கொண்டு அக்குள் கருமையை நீக்கலாம். இதற்கு கற்றாழையின் ஜெல்லை எடுத்து, அக்குளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதைத் தினமும் 15 நிமிடங்கள் செய்து வந்தால் கருமையை நீக்கலாம்.
கடலை மாவு
கடலை மாவு, தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் கலவை அக்குள் கருமையை நீக்க உதவுகிறது. இது ஒரு சிறந்த தோலுரித்தலாக செயல்படுகிறது மற்றும் பளிச்சென்ற ஃபேஸ்பேக்கை உருவாக்குகிறது.
ஆரஞ்சு தோல்
எலுமிச்சையைப் போன்று ஆரஞ்சு பழமும் கருமையைப் போக்கும் திறனைக் கொண்டுள்ளது. அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அதனுடன் பால் மற்றும் ரோஸ் வாட்டரைச் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இதை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் அக்குள் பகுதியில் காணப்படும் கருமையை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Oral Hygiene: வாய்வழி சுகாதாரத்தைப் பராமரிக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க
Image Source: Freepik