Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க

  • SHARE
  • FOLLOW
Homemade Kashayam: அதிக காய்ச்சலுடன் சளி, இருமலா? டக்குனு சரியாக இந்த கஷயாத்தை குடிங்க


இதற்காக, நாம் மருத்துவர்களை நாடி மருந்துகள் மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே சில எளிய முறைகளை வீட்டிலேயே கையாளலாம். இவ்வாறு வீட்டிலேயே சிலவற்றைச் செய்வதன் மூலம் எளிய பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். மேலும், பிரச்சனை அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Food Poisoning Remedies: ஃபுட் பாய்சனைக் குணப்படுத்த உதவும் சூப்பரான வீட்டு வைத்தியம்

காய்ச்சல் குணமாக உதவும் கஷாயம்

காய்ச்சல் வந்து விட்டால், முதலில் நாம் எடுத்துக் கொள்வது பாராசிட்டாமல் தான். ஆனால், மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட வீட்டிலேயே தயார் செய்யப்படும் கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், காய்ச்சலை விரட்டியடிக்கிறது.

சளி, இருமல் மற்றும் காய்ச்சல் குணமாக கஷாயம் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்

  • வேப்பங்குச்சி (வேப்பம் ஈர்க்கு) - 7 (இலையை அகற்றி விட்டு கிடைக்கும் குச்சிகள்)
  • மிளகு - அரை ஸ்பூன்
  • சீரகம் - அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • இஞ்சி - 1 இன்ச்
  • கறிவேப்பிலை குச்சி (கறிவேப்பிலை ஈர்க்கு) - 7
  • உப்பு - ஒரு சிட்டிகை

இதில் கஷாயத்திற்கு உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். இது கஷாயத்தின் கசப்பு சுவை தெரியாமல் இருக்க சேர்க்கப்படுகிறது. அதே சமயம் கசாயத்தை வடிகட்டிய பின் தேனையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux: இரவில் ஆசிட் ரிஃப்ளக்ஸால் அவதியா? உடனே இதெல்லாம் செய்யுங்க

கஷாயம் தயார் செய்யும் முறை

  • கஷயாம் தயார் செய்ய முதலில் சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள், மிளகு போன்ற அனைத்தையும் சிறிய உரலில் சேர்த்து தட்டிக் கொள்ள வேண்டும்.
  • இதில் ஈர்க்குகளையும் சேர்த்து நன்றாகத் தட்டிக் கொள்ளலாம்.
  • இந்த விழுதுகள் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வரும்.
  • இதை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
  • இந்த தண்ணீர் அரை டம்ளராக சுண்டியவுடன், வடிகட்டி அதில் தேவைப்படுமாயின் தேன் அல்லது இந்துப்பு கலந்து பருகலாம் அல்லது அப்படியே வேண்டுமானாலும் பருகலாம்.
  • இந்த கஷாயத்தை சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி ஏற்படும் காலங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
  • இவ்வாறு வீட்டிலேயே தயார் செய்யப்படும் கஷாயத்தை 3 முதல் 5 நாள்கள் மட்டும் தேவையின் அடிப்படையில் எடுத்துக் கொள்ளலாம். அதே போல, மழைக்காலங்களில் வாரத்தில் ஒரு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியைப் பெறலாம்.

இந்த கஷாயத்தை ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம். அதே சமயம், மிதமான சூட்டில் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை பருகும் போதும், பருகிய உடனேயும் உடலிலிருந்து வியர்வை வெளியேறலாம். இவ்வாறு கஷாயத்தை அருந்துவது காய்ச்சலை சீரடைகிறது.

இவ்வாறு தயார் செய்யப்பட்ட கஷாயத்தை அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனினும், நாள்பட்ட மற்றும் தீவிரமான பிரச்சனைகளுக்கு மருத்துவரை அணுகுவது சிறந்தது.

இந்த பதிவும் உதவலாம்: Whooping Cough Remedies: உங்க குழந்தைக்குத் தொடர்ச்சியான இருமலா? இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Betel Leaf Oil: சருமம், முடி பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் மந்திர எண்ணெய்! ஈஸியான முறையில் இப்படி செய்யுங்க

Disclaimer