Whooping Cough Remedies: உங்க குழந்தைக்குத் தொடர்ச்சியான இருமலா? இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Whooping Cough Remedies: உங்க குழந்தைக்குத் தொடர்ச்சியான இருமலா? இந்த வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

இதில் வூப்பிங் இருமலின் அறிகுறியாக குழந்தைகளுக்கு நீண்ட காலமாக இருமல் இருப்பதுடன், இருமலின் போது விசித்திரமான ஒலிகளை எழுப்பலாம். இது முக்கியமாக சுவாச மண்டலத்தைப் பாதிக்கக் கூடிய பாக்டீரியா ஆகும். இந்த இருமல் முதலில் சாதாரணமாகத் தொடங்கி, பின்னர் படிப்படியாக தீவிரமடைந்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இது காய்ச்சல், சோர்வு, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழல் உண்டாகலாம். இந்த அறிகுறிகளைக் குழந்தைகளுடம் கண்டால் உடனையாக மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. இந்த வூப்பிங் இருமலிலிருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் ஓரளவு நிவாரணம் பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux: இரவில் ஆசிட் ரிஃப்ளக்ஸால் அவதியா? உடனே இதெல்லாம் செய்யுங்க

குழந்தைகளுக்கு ஏற்படும் வூப்பிங் இருமல் நீங்க வீட்டு வைத்தியம்

சிறு குழந்தைகள் கக்குவான் இருமலால் பாதிப்படைகின்றனர். இதில் குழந்தைகளைப் பாதிக்கும் வூப்பிங் இருமலிலிருந்து நிவாரணம் அளிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் சிலவற்றைக் காணலாம்.

துளசி

துளசியின் பயன்பாடு வூப்பிங் இருமலுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. துளசியில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வது பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு 10-12 அளவிலான துளசி இலைகளை அரைத்து வைத்து, பின் சிறிதளவு தேன் சேர்த்து சிறு மாத்திரைகளாக செய்யவும். குழந்தைக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 மாத்திரைகளைக் கொடுக்கலாம்.

பாதாம்

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமலை போக்க பாதாம் சிறந்த தீர்வாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 3 முதல் 4 பாதாம் பருப்பை ஓரிரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின் காலையில் பாதாமின் தோலை அகற்றி, பிறகு ஒரு பல் பூண்டு மற்றும் சர்க்கரை மிட்டாயைச் சேர்த்து அரைக்க வேண்டும். இதிலிருந்து சிறிய உருண்டைகளை உருவாக்கலாம். இதில் குழந்தைக்கு ஒரு நாளைக்கு 3 முதல் 4 மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும்.

பூண்டு

கக்குவான் இருமலைக் குணப்படுத்த பூண்டு ஒரு சிறந்த தேர்வாகும். இதில் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. இதற்கு 2 முதல் 3 பூண்டு பற்களை நசுக்கி சாறாக எடுத்துக் கொள்ளவும். பின் இதில் தேன் சேர்த்து குழந்தையை நாக்கில் வைக்கவும். பூண்டு தேன் கலவையை குழந்தைக்கு ஒரு நாளைக்கு இரு முறை கொடுப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Asthma Home Remedies: ஆஸ்துமாவை நிர்வகிக்க சூப்பர் வீட்டு வைத்தியம் இங்கே…

மஞ்சள்

மஞ்சள் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் தொடர் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் அளவிலான வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். இதன் மூலம் இருமல், சளி போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

அத்திவாசிய எண்ணெய்

குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமலிலிருந்து நிவாரணம் பெற அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். அதன் படி, மிளகுக்கீரை போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் பெப்பர்மின்ட் போன்ற அத்தியாவசிய எண்ணெயைச் சேர்த்து, கக்குவான் இருமலால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முதுகு மற்றும் மார்பில் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

Essencial Oil Benefits

நீரேற்றமாக வைப்பது

குழந்தைகளை நீரேற்றமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் குழந்தைகளை போதுமான நீரேற்றத்துடன் வைப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன் சளி, இருமல் போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக அமைகிறது.

இவ்வாறு, குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலிலிருந்து விடுபட இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். எனினும், தொற்று தீவிரமாக இருக்கும் போதோ அல்லது குழந்தைகளுக்கு புதிதாக பொருள்களைச் சேர்க்கும் போதோ மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Oil Massage: வயிற்று வலிக்கு இந்த எண்ணெய்ல மசாஜ் பண்ணுங்க. டக்குனு குணமாகிடும்

Image Source: Freepik

Read Next

Back Acne Remedies: முதுகு பருக்களால் அவதியா? ஒரே இரவில் பருக்களைக் குறைக்க இதுல ஒன்னு யூஸ் பண்ணுங்க!

Disclaimer