Whooping Cough என்பது தொடர் இருமல் என்பதாகும். இதை கக்குவான் இருமல் என்றும் அழைக்கப்படுவதுண்டு. கக்குவான் இருமலின் தொழில்நுட்ப பெயர் பெர்டுசிஸ் ஆகும். இது பலரும் சந்திக்கக் கூடிய ஒரு வகை நோயாகும். இருப்பினும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் தீவிர நிலையை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
வூப்பிங் இருமல் என்பது எளிதில் தொற்றக் கூடிய நோயாகும். இது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக இது குழந்தைகளுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தும். சில சமயங்களில் இது தீவிரநிலையை சந்திக்க வைக்கும். கக்குவான் இருமல், பெர்டுசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது, இது எளிதில் தொற்றக்கூடிய சுவாச பாதை தொற்று நோயாகும்.
இந்த நோய் Bordetella pertussis என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த தொற்று ஒரு கட்டுப்பாடற்ற, கடுமையான இருமலை ஏற்படுத்துகிறது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) படி, இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு முன்பு இதனால் இறப்புக் கூட ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வூப்பிங் இருமல் கக்குவான் இருமல் தொடர் இருமல் பிரச்சனையின் அறிகுறிகள்
இந்த நோயின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெறுவது அவசியம். நோய்த்தொற்று ஏற்பட்ட பிறகு அறிகுறிகள் தோன்றுவதற்கு 5 முதல் 10 நாட்கள் ஆகும். ஆரம்ப அறிகுறிகள் லேசானவையாக இருக்கும். குறிப்பாக சாதாரண ஜலதோஷம் போல் தோன்றும்.
கக்குவான் இருமல் ஆரம்ப அறிகுறிகள்
மூக்கு ஒழுகுதல்
இருமல்
காய்ச்சல்
மூக்கடைப்பு
சிவந்த மற்றும் நீர் நிறைந்த கண்கள்
ஒரு வாரமோ இரண்டு நாட்களிலோ அறிகுறிகள் மோசமடையலாம்
வூப்பிங் இருமலின் தீவிர அறிகுறிகள்
கடுமையான நீடித்த இருமல்
இருமலுக்குப் பிறகு ஊப் சத்தம்
வாந்தி
மிகுந்த சோர்வு
மூச்சு விடுவதில் சிரமம்
வூப்பிங் இருமல் எப்படி பரவுகிறது?
வூப்பிங் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் காற்றில் பரவும். பாதிக்கப்பட்ட நபர்கள் இருமும் அல்லது தும்மல் போது, அவர்கள் தொற்று பரவக்கூடிய சிறிய பாதிக்கப்பட்ட துகள்களை வெளியிடுகிறார்கள்.
இது நேரடி தொடர்பு மூலமாகவும் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் அதே சுவாச இடத்தைப் பகிர்வதன் மூலமாகவும் பரவலாம்.
தொடர் இருமல் வைத்தியங்கள்
வூப்பிங் இருமலைத் தடுக்க தடுப்பூசி போடுவது மிகவும் பயனுள்ள வழியாகும். இதே தடுப்பூசி தான் குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. தொடர் இருமல் ஆரம்பத்திலேயே சில வீட்டு வைத்தியங்கள் மூலம் சரிசெய்யலாம் என்றாலும் பிரச்சனை தீவிரமாகும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்வதே நல்ல வழியாகும்.
Image Source: FreePik