Foods To Avoid During Cough And Cold: காலநிலை மாற்றத்தின் போது காய்ச்சல், சளி மற்றும் இருமல் ஏற்படுவது சகஜம். குறிப்பாக நம்மில் சிலர் வறட்டு இருமலால் அவதிப்படுவோம். இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை வழங்கவில்லை என்றால், அது பெரிய இழப்பை ஏற்படுத்தலாம். அதாவது, நிமோனியா, இரத்த கசிவு போன்ற ஆபத்தான நோய்க்கு வழிவகுக்கும்.
எனவே, சளியுடன் கூடிய இருமல் அல்லது வறட்டு இருமல் இருக்கும் போது, ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சளி அல்லது இருமல் இருக்கும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். நம்மில் பலருக்கு இருமல் இருக்கும் போது என்ன சாப்பிட வேண்டும் என்பது தெரியும். ஆனால், என்ன சாப்பிட கூடாது என்பது தெரியாது. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வறட்டு இருமல் இருக்கும் போது எதை எல்லாம் சாப்பிடக்கூடாது?

பால் பொருட்களை தவிர்க்கவும்
வறட்டு இருமல் ஏற்பட்டால் பால் பொருட்களை உட்கொள்ளக் கூடாது. குறிப்பாக ஐஸ்கிரீம், சீஸ், பட்டர் அல்லது பால் குடிப்பது வறட்டு இருமலை அதிகரிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, ஐஸ்கிரீம் அல்லது குளிர்ந்த பால் குடிப்பதால் மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு பிரச்சனை அதிகரிக்கும். இருமல் இருந்தாலும் பால் பொருட்களை உட்கொண்டால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம்.
குளிர் பானம் அருந்துவதை தவிர்க்கவும்
சளி மற்றும் இருமல் ஏற்பட்டால் எந்த வித குளிர்பானம் அல்லது சர்பத்தையும் அருந்தக்கூடாது. இது, உங்கள் நிலையை மோசமாக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குளிர் பானங்கள் அல்லது சர்பத்தை குடிப்பதால் அவர்களின் உடல்நிலை மேலும் மோசமடையக்கூடும். குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவது கூட மார்பு கனம், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும்.
வறுத்த உணவுகளை சாப்பிட வேண்டாம்

சளி மற்றும் இருமலின் போது வறுத்த உணவுகளை சாப்பிட வேண்டாம். வறுத்த உணவுகளை எண்ணெயில், டீப் பிரை செய்யப்படுகிறது. இது உங்கள் இருமலை அதிகரிக்கலாம். உங்களுக்கு ஏற்கனவே வறட்டு இருமல் இருந்தால், அது இன்னும் மோசமாகும். எண்ணெய் அல்லது வெண்ணெயில் வறுத்த பொருட்களை சாப்பிடுவது அதிகப்படியான சளி உருவாவதற்கு வழிவகுக்கும்.
அதே சமயம் இருமலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் ஆரோக்கியமற்ற பொருட்களை சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகளில் இருந்து விலகி இருங்கள்
காரமான உணவுகளை சாப்பிடுவது சிலருக்கு இருமலைத் தூண்டும். உண்மையில், காரமான உணவுகள் அனைவருக்கும் சேராது. இந்நிலையில், நீங்கள் இருமலின் போது மிளகாய், சூடான இறைச்சி போன்ற காரமான உணவை சாப்பிட்டால், உங்கள் இருமல் நிலை மோசமடையக்கூடும். எனவே, இருமல் இருக்கும் போது காரமான உணவுகளை சாப்பிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
காஃபின் குடிப்பதை தவிர்க்கவும்

இருமல் இருக்கு போது நம்மில் பலர், காபி அல்லது டீயை அதிக அளவில் உட்கொள்வோம். ஆனால், காஃபினை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஏனென்றால், அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால், உடலில் நீர்ச்சத்து குறைகிறது. நீரிழப்பு தொண்டை புண் மற்றும் இருமல் அதிகரிக்கும்.
Pic Courtesy: Freepik