கக்குவான் இருமலால் குழந்தைகள் மரணம்! காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
கக்குவான் இருமலால் குழந்தைகள் மரணம்! காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா?

இது குறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் நோய்த்தடுப்பு இயக்குனரான டாக்டர் மேரி ராம்சே அவர்கள் கூறுகையில் “இந்த வூப்பிங் இருமலுக்கு எதிராக தடுப்பூசி போடுவது சிறந்த தற்காப்பாகக் கருதப்படுகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகளைச் செலுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது” எனக் கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் ஒவ்வொரு தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு கக்குவான் இருமல் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்கு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Care In Monsoon: மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது? இதோ சில டிப்ஸ்!

குழந்தைகளுக்கு கக்குவான் இருமல் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

முதலி குழந்தைகளுக்குக் கக்குவான் இருமல் ஏற்படுவதறான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

முதல் கட்ட அறிகுறிகள்

இது முதல்நிலை அறிகுறிகளாகும். இதில் குழந்தைகள் பொதுவாக சளி போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றன. இந்நிலையானது ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கும். இதில் லேசான காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல் போன்ற சுவாச பிரச்சனை அடங்கிய அறிகுறிகள் தோன்றலாம்.

இரண்டாம் கட்ட அறிகுறிகள்

இந்த கட்ட அறிகுறிகளில் ஒன்று முதல் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வூப்பிங் இருமல் அதன் ஒரிஜினல் வடிவத்திற்குத் திரும்புகிறது. இதில் அறிகுறிகள் கொஞ்சம் தீவிரமடையலாம். இந்நிலையில் குழந்தைகளுக்குப் பொதுவாக இருமல் அதிகம் இருக்கலாம். சில சமயங்களில் இருமலுடன் சேர்ந்து வாந்தி வரலாம். இதனால், குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள்.

மூன்றாம் கட்ட அறிகுறிகள்

இந்த கட்டத்தில் குழந்தைகள் குணமடையத் தொடங்குவர். இதில் இருமல் மற்றும் பிற அறிகுறிகளும் குறையத் தொடங்கலாம். இந்நிலை ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை நீடிக்கிறது. இது இருமலை உண்டாக்கலாம். ஆனால், குழந்தைக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டால் மட்டுமே இருமல் உண்டாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Bedwetting Behavior: குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை நிர்வகிக்க மருத்துவர் தரும் விளக்கம்

குழந்தைகளுக்கு கக்குவால் இருமல் ஏற்படுவதற்கான காரணங்கள்

பொதுவாக நோய்த்தொற்றுக்கள், பாக்டீரியாக்களின் காரணமாகவே இருமல் ஏற்படுகிறது. இந்த கக்குவான் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியா ஆனது போர்டெடெல்லா பெர்டுசிஸ் பாக்டீரியா எனப்படுகிறது.

  • ஒரு குழந்தைக்கு ஏற்கனவே நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பின், அவர்களைத் தொடுவது, அவர்கள் சாப்பிட்ட உணவைச் சாப்பிடுவது, அவர்கள் இருமல் அல்லது தும்மலின் போது பரவும் நீர்த்துளிகள் போன்றவற்றால் இந்த கக்குவால் இருமல் ஏற்படும்.
  • இவ்வாறே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவுகிறது. அதிலும் குறிப்பாக, தடுப்பூசி போடப்படாத மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட குழந்தைகள் போன்றவர்களே இந்த நோய்த்தொற்றுக்களால் எளிதில் பாதிப்படைகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Waterborne Diseases: குழந்தைகளை எளிதில் தாக்கும் நீர் மூலம் பரவும் நோய்கள்! தடுக்கும் முறைகள் இங்கே

குழந்தைகளில் வூப்பிங் இருமலுக்கான சிகிச்சை முறைகள்

குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கப்பட்டிருப்பின், தொற்று கட்டுக்குள் வந்து இருமலிலிருந்து நிவாரணத்தை அளிக்கும். நோயுற்ற குழந்தையைப் பராமரிக்கும் நபரும் ஆண்டிபயாடிக் உட்கொள்ளலை மேற்கொள்ளலாம்.

  • நல்ல சுத்தமான காற்று மற்றும் வெளிச்சம் உள்ள அறையில் குழந்தையை வைக்க வேண்டும்.
  • வீட்டிலேயே குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டும்.
  • வீட்டில் உள்ள தூசி, புகை போன்றவற்றை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியமாகும்.
  • மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் வழங்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு சுகாதார பரிப்பை கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் படி, அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கை கழுவுவதை வழக்கமாக்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு இருமல் அல்லது தும்மலின் போது வாயை மூடிக் கொண்டு செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற முறைகளின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமலை எளிதில் சரி செய்ய முடியும். ஆனால், இதற்கு வீட்டிலேயே குழந்தைகள் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இவர்களுக்கு மருந்து கொடுப்பதுடன், ஆரோக்கியமான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைக் கொடுக்கலாம். இதன் மூலம் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகி நோய்த்தொற்றுக்களை சமாளிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Newborn Cold Reducing Tips: புதிதாக பிறந்த குழந்தைக்கு சளி மற்றும் இருமலைக் குறைக்க இதெல்லாம் ஃபாலோப் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Waterborne Diseases: குழந்தைகளை எளிதில் தாக்கும் நீர் மூலம் பரவும் நோய்கள்! தடுக்கும் முறைகள் இங்கே

Disclaimer