குழந்தைகளுக்கு எப்போதும் கூடுதல் கவனிப்பு தேவை. உடல் ரீதியாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் பெரியவர்கள் போல் குழந்தைகளால் தங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்ல முடியாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய டீஹைட்ரேஷன் பிரச்சனையும் ஒன்று.
சிறியவர், பெரியவர் என அனைவரின் உடலிலும் நீர்ச்சத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சிறுநீர் கழிக்கும் போது மட்டுமின்றி, சுவாசம், அழுகை மற்றும் வியர்வை மூலமாகவும் தோலில் இருந்து உடலில் உள்ள தண்ணீர் ஆவியாகிறது.
முக்கிய கட்டுரைகள்
எனவே தண்ணீரோ அல்லது வேறு ஏதேனும் திரவமோ குழந்தையின் உடலில் இல்லை என்றால் அது டீஹைட்ரேஷன் பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: அடடா!!.. மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?
நீரிழப்பை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் இது உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் சீர்குலைக்கக்கூடியது. பல சமயங்களில் மூளை பாதிப்பு மற்றும் மரணம் கூட ஏற்படலாம். எனவே உங்கள் குழந்தை போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறதா? இல்லையா? என்பதை கண்காணிக்கவும்..
பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் நீரிழப்பு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. குறிப்பாக குழந்தைகளால் உடலில் அதிக அளவிலான தண்ணீரை சேமித்து வைக்க முடியாது என்பதால், பெரியவர்களை விட அதிக நீரிழப்புக்கு ஆளாகிறார்கள். பல சமயங்களில் குழந்தைகள் தண்ணீர் சரியாகக் குடிக்க விரும்பாததால் அவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.
டீஹைட்ரேஷனுக்கான பிற காரணங்கள் என்ன?
- காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை ஆகியவை டீஹைட்ரேஷன் ஏற்படக் காரணமாகும்.
- குறைவான அளவு திரவங்களை உட்கொள்ளுதல், அதிக வெப்பநிலை.
- வயிற்றுப் பிரச்சனைகள், வாந்தி அல்லது குழந்தை தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது.
சிறுநீர் கழித்தல் குறைவது, சிறுநீர் நிறம் மாறுதல், உதடுகளில் வெடிப்பு, உலர்ந்த சருமம் ஆகியவை குழந்தைகளிடம் ஏற்படும் நீரிழப்பிற்கான அறிகுறிகளாகும்.
குழந்தைக்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள்:
உங்கள் பிள்ளைக்கு மேற்கூறிய பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், அவரை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். குழந்தைக்கு பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டவுடன், மருத்துவர் சில பரிசோதனைகளை செய்யலாம்.
- முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனை
- இரத்த வேதியியல் சோதனை
- சிறுநீர் சோதனை
- மார்பு எக்ஸ்ரே
- ரோட்டா வைரஸ் தொற்று சோதனை
- மல பரிசோதனை
உங்கள் பிள்ளை டீஹைட்ரேனனுக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்?
டீஹைட்ரேஷனின் ஆரம்ப கட்டங்களில் வீட்டிலேயே சிகிச்சையளிக்கப்படலாம். உங்கள் குழந்தைக்கு நீரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது,
இதையும் படிங்க: கண் பார்வையை மேம்படுத்த உதவும் முக்கியமான 5 யோகாசனங்கள்!
1) குழந்தைக்கு ரீஹைட்ரேஷன் தயாரிப்புகளை கொடுக்கலாம்.
2) அதிக சூப், திரவ பானங்களை கொடுக்கலாம்
3) குழந்தைக்கு நீரிழப்பு ஏற்படுவதை தடுக்க வாழைப்பழம், அரிசி, ஆப்பிள் மற்றும் டோஸ்ட் ஆகியவற்றை கொடுக்கலாம்.
4) குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம்.
Image Source: Freepik