Doctor Verified

குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்பட என்னென்ன காரணங்கள் இருக்கு தெரியுமா? பெற்றோர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Most common causes of dehydration in children: உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லாத காரணங்களால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதில் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்பட என்னென்ன காரணங்கள் இருக்கு தெரியுமா? பெற்றோர்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்


Common signs of dehydration in children: பொதுவாக கோடைக்காலம் வந்துவிட்டாலே பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் குழந்தைகளுக்கு மட்டும் விதிவிலக்கா. உண்மையில், கோடைக்காலம் வந்துவிட்டால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவ்வாறு, கடுமையான வெப்பத்திலும், கடுமையான சூரிய ஒளியிலும் இருப்பது சில நேரங்களில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படலாம். எனவே இதைத் தவிர்க்க, தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் குழந்தைகள் பெரும்பாலும் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர்.

குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் இருக்க எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை அறிய போதுமான புரிதல் அவர்களுக்கு இருக்காது. எனவே, இது போன்ற சூழ்நிலையில், பெற்றோர்கள் அவர்களிடம் கவனம் செலுத்துவது முக்கியமாகும். குழந்தைகளில் நீர்ச்சத்து குறைபாட்டிற்குப் பின்னால், போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது காரணமாக இருக்கலாம். மேலும் இதற்குப் பின்னால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல காரணங்கள் இருக்கலாம். குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து இல்லாததை புறக்கணிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது அவர்களின் பிரச்சினையை இன்னும் அதிகரிக்கலாம்.

இதில் டெல்லியில் உள்ள அகர்வால் ஹோமியோபதி கிளினிக்கின் டாக்டர் பங்கஜ் அகர்வால் அவர்கள் குழந்தைகளில் நீர்ச்சத்து குறைபாட்டிற்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: உஷார்! நீங்க தினமும் செய்யும் இந்த 5 தவறுகள் சிறுநீரகக் கற்கள் அபாயத்தை ஏற்படுத்தும்

குழந்தைகளில் நீர்ச்சத்து குறைபாட்டிற்கான காரணங்கள்

உடல் வெப்பநிலை அதிகரிப்பு

பொதுவாக, குழந்தைகளின் உடல் வெப்பநிலை பல மடங்கு அதிகரிக்கிறது. இது காய்ச்சல் அல்லது அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்படலாம். குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பின், அவர் நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இதைத் தவிர்க்க, குழந்தைகளின் உடல் வெப்பநிலையை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

வாந்தி

குழந்தைகளில் நீர்ச்சத்து குறைபாட்டிற்கு வாந்தி முக்கிய காரணமாகும். உண்மையில், குழந்தைகள் வாந்தி எடுக்கும்போது, அவர்களின் உடலில் சேமிக்கப்படும் நீர், உணவு மற்றும் திரவம் வாந்தியாக வெளியேறுகிறது. இது குழந்தைகளை நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல், அவர்களின் உடல் பலவீனம் மற்றும் சோம்பலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வாந்தி ஏற்படும்போது, உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இவை நீர்ச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கக்கூடும்.

அதிக மருந்துகளை எடுத்துக்கொள்வது

பல நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் காரணத்திற்காக அதிக மருந்துகளை அளிக்கின்றனர். இதனால், அவர்களின் உடலில் திரவம் மற்றும் நீர் பற்றாக்குறை ஏற்படக்கூடும். பல நேரங்களில் அதிகப்படியான மருந்துகளின் காரணமாக, அவர்கள் அதிகளவு சிறுநீர் கழிக்கலாம். இது உடலில் நீர்ச்சத்தைக் குறைப்பதுடன், பலவீனம் மற்றும் சோம்பலுக்கு வழிவகுக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தண்ணீரை எப்போதெல்லாம் மற்றும் எவ்வளவு குடிப்பது உடலுக்கு நல்லது தெரியுமா?

வயிற்றுப்போக்கு

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு இருப்பின், அவர்கள் நீரிழப்பு நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, குழந்தை வாந்தி எடுத்தாலோ அல்லது வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டாலோ, தண்ணீருடன் உப்பும் உடலில் இருந்து குறையத் தொடங்கும். இது நீரிழப்புக்கு வழிவகுக்கலாம் என மருத்துவர் கூறுகிறார். மேலும் வயிற்றுப்போக்கு உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. எனவே குழந்தைகளை நீரிழப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

சூரிய ஒளியின் வெளிப்பாடு

பல நேரங்களில் குறிப்பாக, கோடைக்காலத்தில் மக்கள் தங்கள் குழந்தைகளை கொளுத்தும் வெயிலில் வெளியே அழைத்துச் செல்கின்றனர். இதனால், அவர்களின் உடல் கொளுத்தும் வெயிலில் வெளிப்பட்டு, வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் வெயிலில் அல்லது வெப்பத்தில் நீண்ட நேரம் வெளிப்படுவதால் நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற சூழ்நிலையில், குழந்தை நீரிழப்புக்கு ஆளாக நேரிடலாம்.

இவை அனைத்துமே குழந்தைகளுக்கு நீரிழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் இருக்கலாம். எனவே இதை பெற்றோர்கள் தெரிந்து கொண்டு, குழந்தைகளை நீரேற்றமாக வைப்பது குறித்து கையாள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: இவர்கள் எல்லாம் மறந்து கூட வெந்நீர் குடிக்கக்கூடாது? வெந்நீர் குடிப்பதன் தீமைகள் இங்கே!

Image Source: Freepik

Read Next

குழந்தைகளுக்கு ஏற்படும் முகப்பரு புள்ளிகளை நீக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்

Disclaimer