Appendicitis in children: warning signs parents shouldn’t ignore: பொதுவாக, குடல் வால் என்பது பெரிய குடலுடன் இணைக்கப்பட்ட ஒரு சிறிய உறுப்பைக் குறிப்பதாகும். இந்த குடல்வாலில் அழற்சி ஏற்படும், வீங்கும் போது ஏற்படும் நிலையானது குடல் அழற்சி என்று அழைக்கப்படுகிறது. சில காரணங்களால், குடல் அழற்சி வெடித்தால், அது ஒரு தீவிரமான நிலையாகக் கருதப்படுகிறது. இதற்கு நோயாளிக்கு உடனடி மருத்துவ அவசரம் தேவைப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையைப் புறக்கணிப்பதும் ஆபத்தானதாகும்.
இருப்பினும், குடல் அழற்சி போன்ற ஒரு பிரச்சனையைப் பற்றி நாம் நினைக்கும் போது, பெரியவர்கள், நடுத்தர வயதுடையவர்கள் பற்றியே நாம் நினைக்கிறோம். ஆனால், இந்த வகையான நோயானது குழந்தைகளுக்கும் ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில், குழந்தைகளும் குடல்அழற்சி நிலையால் பாதிக்கப்படுகின்றனர். இதில் கேள்வி என்னவெனில், குழந்தைக்கு குடல் அழற்சி இருக்கிறதா என்பதை நாம் எவ்வாறு கண்டறிவது? குழந்தைகளுக்கு குடல் அழற்சி இருக்கும்போது சில அறிகுறிகள் காணப்படுகின்றன.
இதில் குழந்தைகளுக்கு ஏற்படும் குடல் அழற்சிக்கான சில அறிகுறிகள் குறித்து நொய்டா மேற்கு கிரேட்டரில் உள்ள சர்வோதயா மருத்துவமனையின் குழந்தை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அர்ச்சனா யாதவ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இதில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போன் கொடுப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?
குழந்தைகளில் குடல் அழற்சியின் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
பெரியவர்களாக இருந்தாலும் சரி, குழந்தைகளாக இருந்தாலும் சரி, குடல் அழற்சியின் ஆரம்ப அறிகுறிகள் பின்வருமாறு:
பசியின்மை
குடல் அழற்சி நோயின் காரணமாக குழந்தைகளுக்கு பசியின்மை பிரச்சனை ஏற்படலாம். உண்மையில், இது எவ்வாறு ஏற்படுகிறது தெரியுமா? குடல் அழற்சியின் வீக்கமானது, குழந்தைகளின் குடலில் சைட்டோகைன்களின் சுரப்பைத் தூண்டுகிறது. இது பசியை அடக்கும் ஒரு வகை புரதமாகும். அது மட்டுமல்லாமல், குடல் அழற்சியின் ஆரம்ப அறிகுறிகளில் குழந்தைகள் வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடலாம்.
வயிற்று வலி
வயிற்று வலி ஒரு சாதாரண பிரச்சனையாக இருப்பினும், இது மிகவும் பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. வயிறு தொடர்பான ஒவ்வொரு பிரச்சனையிலும் வயிற்று வலி ஏற்படக்கூடும். இதனால், வயிற்றுப்போக்கு, வீக்கம், வாயு போன்ற பல வகையான பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் பார்ப்போம். எனினும், குடல் அழற்சியில், வயிற்று வலி மிகவும் தீவிரமாக இருப்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் போகலாம். பொதுவாக குடல் அழற்சியால் ஏற்படும் வலியானது வயிற்றின் வலது பக்கத்தில் அதிகமாக உணரப்படும். மேலும், இந்த வலி காரணமாக, எந்த வகையான செயல்களை செய்வதிலும் சிரமங்கள் ஏற்படக்கூடும்.
வயிற்றில் எரியும் உணர்வு
பொதுவாக, குடல் அழற்சியானது நேரடியாக நெஞ்செரிச்சலை ஏற்படுத்தாது. ஆனால், இது வயிற்றில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. மேலும், வயிற்றில் வலி ஏற்படும் போதெல்லாம், இது தானாகவே அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியதாக அமைகிறது. இது நெஞ்செரிச்சலையும் ஏற்படுத்தும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இது தவிர, நமது உடல் தொற்று மற்றும் வீக்கத்திற்கு எதிர்வினையாற்றுகிறது. இதனால், வயிற்றில் எரியும் உணர்வு ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைக்கு சரியான முறையில் தான் உணவு கொடுக்கிறீங்களா? அப்ப இத என்னனு தெரிஞ்சிக்கோங்க
காய்ச்சல் ஏற்படுவது
குடல் அழற்சியில், குடல்வால் வீக்கம் ஏற்பட்டு, தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் எந்த வகையான தொற்றும் சரியான நேரத்தில் நிறுத்தப்படாவிட்டால், அது பரவக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது போன்ற நிலையில், காய்ச்சல், நடுக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனினும், குடல்வால் அழற்சியில் காய்ச்சல் தொடங்கினால், குடல்வால் வெடித்துவிட்டது என்றும், இப்போது குழந்தைக்கு விரைவில் மருத்துவரிடம் சிகிச்சை தேவை என்றும் பொருளாகும்.
குடல் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள்
குடல் அழற்சி பிரச்சனையின் காரணமாக, குழந்தைகளில் குடல் இயக்கங்களிலும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதில் கேள்வி என்னவெனில் இது ஏன் நிகழ்கிறது? உண்மையில், குடல் அழற்சியானது குடல் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது செரிமான அமைப்பில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, குழந்தைகளில் குடல் இயக்கத்தில் மாற்றங்கள் காணப்படுகின்றன
முடிவுரை
இவ்வாறு மேலே கூறப்பட்ட கருத்துக்களின் படி, குழந்தைகளுக்கும் குடல் அழற்சி வரலாம் என்றும், அது இது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய குடல் அழற்சிக்கான அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். தேவைப்பட்டால், குழந்தையை சரியான நேரத்தில் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம், அவர் சரியான நேரத்தில் சிகிச்சை பெற முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Child Stomach Cramps: குழந்தையின் வயிற்றுப்பிடிப்பு சீக்கிரம் சரியாக இதெல்லாம் செய்யுங்க.
Image Source: Freepik