Doctor Verified

சைலன்ட் ஹார்ட் அட்டாக் வருவதை எப்படி தெரிந்து கொள்வது? இதோ நீங்க புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்

How to detect silent heart attack: இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாரடைப்பு மாறிவிட்டது. குறிப்பாக, அமைதியான மாரடைப்பு பிரச்சனையில் பல்வேறு அறிகுறிகள் தோன்றும். அதைப் புறக்கணிக்கக்கூடாது. இதில் அமைதியான மாரடைப்புக்கான அறிகுறிகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சைலன்ட் ஹார்ட் அட்டாக் வருவதை எப்படி தெரிந்து கொள்வது? இதோ நீங்க புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள்


How to know if you had silent heart attack: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக, இன்று இளம் வயதிலேயே மாரடைப்பு சார்ந்த பிரச்சனைகளை பலரும் எதிர்கொள்கின்றனர். எனவே தான் மாரடைப்பு பிரச்சனை தீவிரமானது என்று நாம் கருதுகிறோம். மேலும் தேவைப்படும் நேரங்களில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முன்கூட்டியே அதைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.

அப்போது தான், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அதனால் பாதிக்கப்பட்டாலும் நம்மால் அவர்களுக்கு உதவ முடியும். ஆனால், மாரடைப்பை விட அமைதியான மாரடைப்பு மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். அமைதியான மாரடைப்பைப் புறக்கணிப்பது சரியானதாக இருக்காது. இதைப் புறக்கணிப்பதால், இதயம் சேதமடையலாம். மேலும் இதய செயலிழப்பு அபாயமும் அதிகரிக்கிறது. இந்நிலையைத் தவிர்க்க, அமைதியான மாரடைப்பின் அறிகுறிகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

இது குறித்து, கிரேட்டர் நொய்டா வெஸ்டின் சர்வோதயா மருத்துவமனையின் இணை இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர் ஞானதி ஆர்.பி. சிங் அவர்கள் இது தொடர்பான சில அறிகுறிகளைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களே உஷார்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாம்

அமைதியான மாரடைப்பின் அறிகுறிகள்

சுவாசிப்பதில் சிரமம்

அமைதியான மாரடைப்பினால் சுவாசிப்பதில் சிரமம் உண்டகலாம். இதில் சுவாசிக்கும்போது வலி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த நிலை இன்னும் மோசமாவதைக் குறிக்கிறது. ஏனெனில் இது போன்ற சூழ்நிலையில் மக்கள் இந்த சுகாதார நிலையை நுரையீரல் பிரச்சனையுடன் தொடர்புபடுத்துகின்றனர். அதேசமயம், இது அமைதியான மாரடைப்பின் கவனிக்கப்படாத அறிகுறியாகும் என்பது உண்மையே ஆகும்.

மிகவும் சோர்வாக இருப்பது

எதாவது வேலை செய்த பிறகு நாம் சோர்வாக இருப்பது இயல்பான ஒன்று தான். ஆனால், எந்த வேலையும் செய்யாமலேயே சோர்வாக உணர்ந்தாலும், ஓய்வெடுத்த பிறகும் சோர்வு நீங்கவில்லை எனில், இந்த நிலை ஒரு போதும் புறக்கணிக்கக் கூடாத ஒன்றாக அமைகிறது. அமைதியான மாரடைப்பை ஏற்படும் அதிகப்படியான சோர்வு ஆனது நீரிழிவு நோயின் கண்ணுக்குத் தெரியாத அல்லது புரிந்துகொள்ளப்பட்ட அறிகுறியாகவும் அமைகிறது. குறிப்பாக இது பெரியவர்களில் காணப்படுகிறது.

தலைச்சுற்றல் 

அமைதியான மாரடைப்பு ஏற்படும்போது மக்கள் தலைச்சுற்றல் ஏற்படுவது குறித்தும் குறிப்பிட்டுள்ளனர். எனினும், குமட்டல், வியர்வை மற்றும் பதட்டம் போன்ற அறிகுறிகளும் அமைதியான மாரடைப்பு பிரச்சனையால் காணப்படக்கூடியதாகும். அதாவது அமைதியான மாரடைப்பு இருந்தபோதிலும், உடல் நிச்சயமாக சில சமிக்ஞைகளை அளிக்கிறது. இவற்றைப் புறக்கணிக்கக் கூடாது. இந்த சூழ்நிலையில், உடலின் அனைத்து சமிக்ஞைகளையும் நாம் புரிந்துகொள்வது அவசியமாகும். இந்த சமிக்ஞைகள் சரியாக இல்லை என்பதை உணர்ந்தா, விரைவில் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Silent Heart Attack: உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் வந்தா மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தம்!

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம்

அமைதியான மாரடைப்பினால் மார்பில் எரியும் உணர்வு ஏற்படலாம். பொதுவாக, மார்பில் எரியும் உணர்வு மிகவும் பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. அதாவது நாம் காரமான உணவை சாப்பிட்டிருந்தாலும் அல்லது இரவில் நன்றாகத் தூங்கவில்லை என்றாலும், மார்பில் எரியும் உணர்வு ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், மார்பில் எரியும் உணர்வு அமைதியான மாரடைப்புடன் அரிதாகவே தொடர்புடையதாகும். ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, அமைதியான மாரடைப்பு ஏற்படும்போது, மார்பில் எரியும் உணர்வு மேலும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

உடலின் மேல் பகுதியில் உள்ள பிரச்சனைகள்

அமைதியான மாரடைப்பு ஏற்படும் சமயத்தில், உடலின் மேல் பகுதியில் பிரச்சினைகள் தொடங்குகிறது. அதாவது தாடை, கழுத்து மற்றும் முதுகின் மேல் பகுதியில் வலி போன்றவை ஏற்படுகிறது. இதனுடன் தோள்பட்டைகளிலும் கடுமையான வலி உணரப்படுகிறது. சில சமயங்களில் இதுபோன்ற அறிகுறிகள் மற்ற நோய்களாலும் ஏற்படுகின்றன. எனவே தான், மக்கள் பெரும்பாலும் இவற்றைப் புறக்கணிக்கின்றனர்.

அமைதியான மாரடைப்பு ஏற்படும்போது, இந்த அனைத்து பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு பற்றி தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

Heart Surgery-க்கு பிறகு செய்யக்கூடாத தவறுகள்..

Disclaimer