Doctor Verified

Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு பற்றி தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

  • SHARE
  • FOLLOW
Silent Heart Attack: அமைதியான மாரடைப்பு பற்றி தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்

ஆனால் சில சமயங்களில் இதயத்தில் எந்த பிரச்சனையும் அல்லது அறிகுறிகளும் காணப்படாத போது மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. இது அமைதியான மாரடைப்பு என அழைக்கப்படுகிறது. இந்த அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்தும், அமைதியான மாரடைப்புக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் அப்பல்லோ மருத்துவமனையின் இதய நோய் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் நிரஞ்சன் ஹிரேமத் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Diseases Prevention: உங்களுக்கு இதய நோய் வரவே கூடாதா? அப்ப நீங்க இத ஃபாலோ பண்ணுங்க

அமைதியான மாரடைப்பு என்றால் என்ன?

ஹெல்த்லைனில் குறிப்பிட்ட படி, அமைதியான மாரடைப்பு ஏற்பட்டால் மக்கள் அதை நெஞ்செரிச்சல் மற்றும் காய்ச்சல் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால், இந்த அமைதியான மாரடைப்பிலும், சாதாரண மாரடைப்பைப் போலவே இதய தசைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

பெரும்பாலும், கரோனரி தமனியில் இரத்த ஓட்டம் ஓரளவு அல்லது முழுமையாகத் தடுக்கப்படும் போது இந்த அமைதியான மாரடைப்பு நிகழ்கிறது. இது இதயத்திற்கு ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை வழங்காமல், இதய தசை திசு சேதமடையத் தொடங்குகிறது. இதுவே தாக்குதல்களுக்கு வழிவகுக்கிறது.

அமைதியான மாரடைப்பு அபாயமானதா?

சாதாரண மாரடைப்பு என்றாலே அபாயகரமானதைக் குறிக்கிறது. அமைதியான மாரடைப்பு அபாயமானதா என்றால் ஆம். ஒருவருக்கு அமைதியான மாரடைப்பு இருப்பது இரண்டாவது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இது ஆபத்தானதைக் குறிக்கிறது. இவ்வாறு மீண்டும் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவது இதய செயலிழப்பு அபாயத்தை அதிகரிக்கலாம். எனினும், தற்போது இந்த அமைதியான மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளைக் கண்டறிய எந்த சோதனையும் இல்லை என்பதை மருத்துவர் எடுத்துரைக்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப அதிகம் வேலை செஞ்சிட்டே இருந்தா இதயத்துல பிரச்சனை கன்ஃபார்ம்! எப்படி தவிர்ப்பது?

அமைதியான மாரடைப்புக்கான சிகிச்சை முறை

இந்த அமைதியான மாரடைப்புக்கும் (Silent Heart Attack) சாதாரண மாரடைப்பின் போது அளிக்கப்படும் சிகிச்சையையே மருத்துவர்கள் அளிக்கின்றனர். அதன் படி, சரியான நேரத்தில் அடையாளம் காணப்படுவதன் மூலம் இந்த அமைதியான மாரடைப்புக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முடியும். இதில் மருத்துவர் அமைதியான மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு எந்தெந்த வழிகளில் சிகிச்சை அளிக்கின்றனர் என்பதைக் காணலாம்.

ACE தடுப்பான்கள்

ACE தடுப்பான்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இது இதயத்தின் மீதான அழுத்தத்தையும் குறைக்கிறது.

த்ரோம்போலிடிக்ஸ்

மாரடைப்பின் போது இரத்தக் கட்டிகளை உடைக்க இந்த சிகிச்சை முறை உதவுகின்றன.

ஸ்டேடின்கள்

இவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் பிளேக் உருவாவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.

பீட்டா-தடுப்பான்கள்

பீட்டா தடுப்பான்கள் என்பது தமனி அடைப்பு அல்லது இஸ்கெமியாவை தடுக்கக்கூடிய மருந்துகள் ஆகும்.

கார்டியாக் பைபாஸ் அறுவை சிகிச்சை

இது ஒரு திறந்த இதய அறுவை சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சை முறையில் இதயத்திற்கு இரத்தத்தை வழங்க புதிய பாதை உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த அறுவை சிகிச்சையின் போது உடலின் மற்றொரு பகுதியிலிருந்து இரத்த நாளம் (சிரை) எடுக்கப்படுகிறது.

கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்டிங்

இந்த வகை சிகிச்சை முறையில் உடலில் சிறிய கீறல்கள் ஏற்படும். இதன் மூலம் ஒரு சிறிய குழாய் நரம்பு வழியாக தமனி அடைப்புக்கு அனுப்பப்பட்டு, அகலப்படுத்தப்படுகிறது. பின் இதில் ஸ்டென்ட் பயன்படுத்தப்படுகிறது.

அமைதியான மாரடைப்பு எதனால் வருகிறது?

பொதுவாக புகைபிடித்தல், மது அருந்துதல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், மற்றும் முதுமை, உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இது போன்ற பிரச்சனைகளைக் குறைக்க முடியும். மேலும், உடலில் ஏற்படும் சிறிய எந்த வகையான அறிகுறிகளையும் புறக்கணிக்காமல், மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Fish oil and Heart: மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்குமாம்? அதுவும் குறிப்பா இவங்களுக்குத் தான்

Image Source: Freepik

Read Next

Heart Diseases Prevention: உங்களுக்கு இதய நோய் வரவே கூடாதா? அப்ப நீங்க இத ஃபாலோ பண்ணுங்க

Disclaimer