Doctor Verified

Heart Diseases Prevention: உங்களுக்கு இதய நோய் வரவே கூடாதா? அப்ப நீங்க இத ஃபாலோ பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Heart Diseases Prevention: உங்களுக்கு இதய நோய் வரவே கூடாதா? அப்ப நீங்க இத ஃபாலோ பண்ணுங்க

இந்த பிரச்சனைகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இதய தசைக்கு சரியான அளவு ரத்தம் கிடைக்காததாகும். எனினும் இன்றைய வாழ்க்கை முறையில் சில ஆரோக்கியமான உணவு முறைகளைக் கையாள்வதன் மூலம் இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க முடியும். மாரடைப்பு, கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு இதய நோய்களின் அபாயத்தைத் தவிர்க்க உதவும் வழிகள் குறித்து ஃப்ளட்டர்ஃபிளை நிறுவனத்தின் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய அமைப்பின் திட்டத் தலைவர் டாக்டர் மந்தன் மேத்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Supplements for Heart Health: உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த வைட்டமின்களை சேர்த்துக் கொள்ளுங்கள்!!

இதய நோய் வராமல் தடுக்க உதவும் குறிப்புகள்

மருத்துவரின் கூற்றுப்படி, “சரியான உணவை உட்கொள்வதன் மூலமும், மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

வழக்கமான உடற்பயிற்சி

இதய நோய் வராமல் தடுக்க உதவும் மிக முக்கியமான தேர்வாக அமைவது தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதாகும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடலின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், இதயமும் வலுவடைகிறது. எனவே உடற்பயிற்சியுடன், பிடித்தமான செயல்களையும் வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் உடற்பயிற்சி செய்வது எடையைக் கட்டுப்படுத்துவதுடன், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர இதய பாதிப்புக்குக் காரணமாக விளங்கும் மன அழுத்தத்தையும் குறைக்கலாம்.

ஆரோக்கியமான உணவு உட்கொள்ளல்

பெரும்பாலும் இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக விளங்குவது ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக எண்ணெய் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதே ஆகும். எனவே இதய நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவை உட்கொள்ளலாம். அதன் படி, உணவில் காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இது தவிர, நீண்டகால இதய ஆரோக்கியத்திற்கு நட்ஸ், விதைகள் மற்றும் பருவகால பழங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனை உட்கொள்வதன் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைக்க முடியும். இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துதல்

இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்க, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அதன் படி, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது, உடற்பயிற்சி செய்வது மற்றும் வழக்கமான இரத்த சர்க்கரை சோதனைகளை செய்வது போன்றவற்றை வழக்கத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், அதிக சர்க்கரை உணவுகள் இரத்த நாளங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும் இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கலாம். எனவே இதய பாதிப்பிலிருந்து விடுபட நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Fish oil and Heart: மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்குமாம்? அதுவும் குறிப்பா இவங்களுக்குத் தான்

புகையிலையைத் தவிர்ப்பது

இதய நோய் வராமல் தடுக்க உதவும் மற்றொரு வழியாக அமைவது புகையிலை மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல் ஆகும். ஏனெனில், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். புகையிலை நுகர்வு நுரையீரலை சேதப்படுத்துவதுடன், இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும் இவை இரண்டும் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பலவீனப்படுத்துகின்றன. இதனால் இதய பாதிப்புக்கான காரணிகளை அதிகமாக்குகிறது. எனவே இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மது அருந்துதல் மற்றும் புகையிலையைத் தவிர்ப்பது நல்லது.

Osteoporosis-day-tips-to-keep-your-bone-healthy

மன அழுத்தத்தைக் குறைத்தல்

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க மன அழுத்தத்தை குறைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில், அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை பல மடங்கு அதிகரிக்கிறது. அதாவது அதிகப்படியான மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனை சுரக்கச் செய்யும். உடலில் இந்த ஹார்மோன் அதிகமாக இருப்பது, இரத்த அழுத்தம், வீக்கம், இரத்த சர்க்கரை, ட்ரைகிளிசரைடுகள், கெட்ட கொலஸ்ட்ரால் போன்றவற்றை அதிகரிக்கும். இதனால், தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. எனவே இதற்குக் காரணமாக விளங்கும் மன அழுத்தத்தைக் குறைக்க யோகா மற்றும் தியானம் மேற்கொள்ளலாம்.

மருத்துவரின் இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், இதய நோய் வராமல் தடுக்கலாம். இது தவிர, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைக் கையாள்வதன் மூலம் இதயத்தை நீண்ட காலமாக ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப அதிகம் வேலை செஞ்சிட்டே இருந்தா இதயத்துல பிரச்சனை கன்ஃபார்ம்! எப்படி தவிர்ப்பது?

Image Source: Freepik

Read Next

ரொம்ப அதிகம் வேலை செஞ்சிட்டே இருந்தா இதயத்துல பிரச்சனை கன்ஃபார்ம்! எப்படி தவிர்ப்பது?

Disclaimer