
$
Can Working Too Much Cause Heart Problems: இன்றைய நவீன வாழ்க்கையில் மக்கள் அதிக வேலை அழுத்தத்தை சந்திக்கின்றனர். மற்றொருவருடன் ஒப்பிட்டு, அதிகமான அளவில் பணம் சேர்க்கவும், புகழ் பெறவும் பெரும்பாலும் நீண்ட நேரம் வேலை செய்கின்றனர். ஆனால், அதிக நேரம் வேலை செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆம். ஒருவர் அதிக நேரம் வேலை செய்வதால் இதயம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
ஏனெனில், நீண்ட நேரம் வேலை செய்வது மன அழுத்தத்தை அதிகரிப்பதுடன், தூக்க நேரத்தையும் குறைக்கிறது. அதே சமயம், மக்கள் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதில் அக்கறை காட்டுவதில்லை. இவை அனைத்துமே இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகளாகும். அதிக நேரம் வேலை செய்வதால் இதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்து லக்னோவில் உள்ள கேர் இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸின் மருத்துவர் டாக்டர் சீமா யாதவ், எம்.டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Dehydration Causes: நீரிழப்பால் இதயத்துடிப்பு அதிகமாகுமா? நிபுணர் தரும் விளக்கம்
நீண்ட நேரம் வேலை செய்வது இதயத்திற்கு ஏன் ஆபத்தானது?
நீண்ட நேரம் வேலை செய்வது, இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) 2021 அறிக்கையின்படி, 2016 ஆம் ஆண்டில் சுமார் 7,45,000 பேர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக மரணமடைந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏனெனில், அதிகப்படியான வேலை மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இந்த மன அழுத்தத்தால் இதயத்தில் மோசமான விளைவுகள் ஏற்பட நேரிடும். இதில் பெரும்பாலும் ஆண்களே அதிகம் பாதிப்படைகின்றனர். இது தவிர, நீண்ட நேரம் வேலை செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம்.

நீண்ட நேரம் வேலை செய்வதிலிருந்து இதயத்தை பராமரிப்பது எப்படி?
வேலை மற்றும் இதயம் இரண்டையும் சரியான முறையில் கவனித்துக் கொள்ள முடியும். இதற்கு செய்ய வேண்டிய குறிப்புகளைக் காணலாம்.
சரிவிகித உணவு
சமச்சீரான உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலும், உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் சேர்க்க வேண்டும். அதே சமயம் அதிக கொழுப்புள்ள உணவுகள், நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை உட்கொள்வதைத் தவிர்ப்பதும் அவசியமாகும். மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Clogged Arteries Prevention: இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் தமனி அடைப்பு! இதைத் தடுக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க
வேலையுடன் ஓய்வு
எந்த அளவு வேலை செய்கிறோமோ, அதற்கு ஏற்ற அளவு ஓய்வு எடுத்துக் கொள்வது முக்கியமாகும். ஆனால், ஓய்வில்லாமல் வேலை செய்வது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை கிடையாது. எனவே வேலைகளுக்கு இடையே குறுகிய இடைவெளி எடுத்துக் கொள்வது நல்லது.
போதுமான உறக்கம்
நீண்ட நேரம் மற்றும் அதிகப்படியான வேலை காரணமாக, மக்கள் தங்கள் தூக்க நேரத்தை குறைத்துக்கொள்கின்றனர். ஆனால் இது அதிகப்படியான மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது மனநிலை மற்றும் உடல்நிலை இரண்டையும் பாதிப்பதாக அமைகிறது. எனவே இதய ஆரோக்கியத்தைப் பாதிக்க குறைந்து 7 மணி நேரம் தூங்குவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

புகைப்பிடிப்பதிலிருந்து விலகி இருத்தல்
அதிக வேலை காரணமாக மக்கள் அதிகளவிலான மன அழுத்தத்தைச் சந்திக்கின்றனர். இதனைத் தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த மக்கள் புகையிலையை உட்கொள்கின்றனர். ஆனால், புகையிலையை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கும் என மக்கள் கூறுகின்றனர். உண்மையில் புகையிலை மன அழுத்தத்தை குறைக்காது. மாறாக, இது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். எனவே புகையிலையிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும்.
இந்த வகை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், நீண்ட நேரம் வேலை செய்வதிலிருந்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Health Seeds: இதய அடைப்பைத் தடுக்க நீங்க சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான விதைகள்!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version