$
Best Food To Prevent Clogged Arteries: பொதுவாக இதய ஆரோக்கியம் என்பது அதில் உள்ள ஒவ்வொரு தனித்தனி உறுப்புகளின் ஆரோக்கியத்தைப் பொறுத்து அமையும். அந்த வகையில் இதயத்தில் உள்ள தமனிகள் இதய செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த தமனியில் அடைப்பு ஏற்படுவதால், பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த தமனி அடைப்பானது பெருந்தமனி தடிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
தமனி அடைப்பு ஒரு நாள்பட்ட சுகாதார நிலையாகும். இதில் கொழுப்பு நிறைந்த வைப்பு, தமனிகளில் குவிந்து இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் ஒரு கடுமையான நிலையை உருவாக்குகிறது. இதன் காரணமாக, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற பல்வேறு உடல்நல அபாயங்கள் ஏற்படலாம். மரபியல், வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள், மற்றும் உணவு போன்ற பல காரணிகளால் தமனி அடைப்புகள் ஏற்படுகிறது. இதில் தமனி அடைப்புக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கும் ஆரோக்கியமான உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Arteries Clogged Foods: தமனிகள் அடைப்பைத் தடுக்க உதவும் உணவுகளின் வகைகள்
தமனி அடைப்பைத் தடுக்க உதவும் உணவுகள்
ஒரு நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தமனி அடைப்பைத் தடுக்கவும், இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் முடியும். இதில் தமனிகளில் ஏற்படும் அடைப்பைத் தடுக்க உதவும் உணவுகளைக் காண்போம்.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் தமனி அடைப்பைத் தடுக்கலாம். அதன் படி, உணவில் கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவிஸ் சார்ட் போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். இதில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இந்த பச்சை இலை காய்கறிகளில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், இரத்த அழுத்தத்தைக் குளிர்விக்க உதவுகிறது. இதன் மூலம் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது.

அவகேடோ
வெண்ணெய்ப்பழம் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. இந்த கொழுப்புகள் ஆரோக்கியமான இதயத்திற்கு இன்றியமையாத உறுப்பாகும். இந்த கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கெட்ட எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், எச்டிஎல் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் தமனி அடைப்பு அச்சுறுத்தல் குறைக்கப்படுவதுடன், நாள்பட்ட இதய நிலைகளும் தடுக்கப்படுகிறது.
பூண்டு
பூண்டு ஒரு சிறந்த ஆயுர்வேத மூலிகையாகக் கருதப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. மேலும், பல நூற்றாண்டுகளாக மருத்துவக் கலவைகளில் சிறப்பு நன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பூண்டை வழக்கமாக எடுத்துக் கொள்வது கொழுப்பின் அளவைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இரத்தத்தில் உறைவதைத் தவிர்க்கவும் உதவுகிறது. இதனால் தமனி அடைப்பு தடுக்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Fish oil and Heart: மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்குமாம்? அதுவும் குறிப்பா இவங்களுக்குத் தான்
கொழுப்பு நிறைந்த மீன்
சால்மன், மத்தி மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்களில் அத்தியாவசிய கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதாவது ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் மீன்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் வீக்கத்தைக் குறைக்கவும், ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தமனி அடைப்புக்கு உதவும் சிறந்த காரணியாகும்.
முழு தானியங்கள்
இதய ஆரோக்கியத்திற்கு செய்யக்கூடிய மற்றொரு சிறந்த உணவாக முழு தானியங்கள் உள்ளது. அதன் படி, உணவில் நல்ல அளவு முழு தானியங்களான நார்ச்சத்துக்கள் நிறைந்த மற்றும் சத்தான ஓட்ஸ், குயினோவா மற்றும் பிரவுன் ரைஸ் போன்றவற்றைச் சேர்க்கலாம். இந்த வகை முழு தானியங்களை உட்கொள்வது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் திறம்பட உதவுகிறது. இது தமனி அடைப்பைத் தடுப்பதில் அவசியமாகிறது.

நட்ஸ்
இதய அடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றைத் தடுக்க தினசரி உணவில் சில நட்ஸ் வகைகளைச் சேர்க்கலாம். அதன் படி, அன்றாட வாழ்வில் பாதாம், பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகளைச் சேர்க்கலாம். இவை இதயத்திற்கு உகந்த நார்ச்சத்துக்கள், கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. நட்ஸ் வகைகளில் உள்ள இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கொலஸ்ட்ராலை நிர்வகிக்கவும், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தமனி அடைப்பு அபாயங்களைக் குறைக்கவும் உதவுகிறது.
பெர்ரி
ராஸ்பெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் அவுரிநெல்லிகள் போன்ற பெர்ரி வகைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உடலில் கொலஸ்ட்ராலைத் தடுக்கவும், வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவும் பழங்களில் பெர்ரியும் ஒன்று. இந்தப் பண்புகள் நிறைந்த பழங்கள் தமனிகளில் பிளேக் உருவாவதைக் குறைக்கிறது.
தினசரி உணவில் இந்த உணவுகளைச் சேர்ப்பது தமனி அடைப்புக்கு எதிராக ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. எனினும், இதய ஆரோக்கியத்திற்கான சிறந்த முடிவுகளுக்கு அடிக்கடி உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Heart Health Seeds: இதய அடைப்பைத் தடுக்க நீங்க சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான விதைகள்!
Image Source: Freepik