Fish oil and Heart: மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்குமாம்? அதுவும் குறிப்பா இவங்களுக்குத் தான்

  • SHARE
  • FOLLOW
Fish oil and Heart: மீன் எண்ணெய் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்குமாம்? அதுவும் குறிப்பா இவங்களுக்குத் தான்

மீன் எண்ணெய் மற்றும் மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸ் போன்றவை இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இதயப் பிரச்சனைகளின் வரலாறு இல்லாதவர்கள், மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸை தவறாக உட்கொள்பவர்களுக்கு ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அபாயம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Heart Health Seeds: இதய அடைப்பைத் தடுக்க நீங்க சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான விதைகள்!

இதய பாதிப்பை ஏற்படுத்தும் மீன் எண்ணெய்

BMJ-ல் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில் இதய பிரச்சனை இல்லாதவர்களும், மீன் எண்ணெயை தவறாக உட்கொள்பவர்களும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் பிரச்சனையை சந்திக்கின்றனர். ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என்பது ஒழுங்கற்ற மற்றும் அடிக்கடி விரைவான இதயத்துடிப்பு ஏற்படுகிறது. இது ஏட்ரியாவில் உள்ள குழப்பமான மின் சமிக்ஞைகள் காரணமாக நிகழ்கிறது.

இந்த தூண்டுதல்கள் வென்ட்ரிக்கிள்களில் தாக்கப்பட்டு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்கிறது. இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு சாதாரணமாக 60 முதல் 100 துடிப்புகள் வரை துடிக்கிறது. ஆனால், ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனில் இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 100 முதல் 175 துடிப்புகள் வரை இருக்கும்.

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனின் அறிகுறிகள் என்ன?

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் உடலில் ஏற்படும் சில அறிகுறிகளைக் காணலாம்.

  • நெஞ்சு வலி
  • களைப்பு
  • தலைச்சுற்று
  • மூச்சுத் திணறல்
  • பலவீனம்

மார்பு வலியுடன் கூடிய இந்த அறிகுறிகளை எவர் சந்திக்கிறாரோ, அவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Heart Attack: இதய நோயாளிகள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.. உயிருக்கே ஆபத்தாம்!!

BMJ Medicine இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 4,00,000-க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் ஹெல்த் டேட்டா ஹப் UK Biobank-ல் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அவர்கள் தங்களது உடல்நல பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் உணவு மற்றும் கூடுதலாக எடுத்துக் கொள்ளக்கூடியவை பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதில் அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்தினார்கள்.

இந்த ஆய்வில் வெளிவந்த தகவலின் படி, இதய நோய் வரலாறு இல்லாதவர்களுக்கும், மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸை தவறாமல் உட்கொள்பவர்களும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷனால் 13% பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், மீன் எண்ணெய் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக் கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும் போது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 5% அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதய பிரச்சனை இல்லாத பெண்கள் மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸை எடுத்துக் கொள்வதால் பக்கவாதம், இதய செயலிழப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படும் அபாயம் 6% அதிகம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான உணவுக்கு மாற்றாக இல்லை என்பதை எடுத்துரைக்கிறது. எனவே தனிப்பட்ட ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்துவதற்குப் பதில், ஆபத்தைக் குறைக்க உணவை முழுவதுமாக பராமரிப்பது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Exercise and Heart Attack: உடற்பயிற்சியின் போது திடீரென்று மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

Image Source: Freepik

Read Next

Heart Attack: இதய நோயாளிகள் மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது.. உயிருக்கே ஆபத்தாம்!!

Disclaimer