Mustard oil for heart health: கடுகு எண்ணெய் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா?

Is mustard oil good for cholesterol patients: இதய ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அது மட்டுமல்லாமல், உணவுப் பொருள்களைத் தயார் செய்யத் தேவைப்படும் எண்ணெயும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அவ்வாறு இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் நன்மை பயக்குமா என்பது குறித்து காணலாம். 
  • SHARE
  • FOLLOW
Mustard oil for heart health: கடுகு எண்ணெய் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா?


Is mustard oil safe for heart patients: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை அடங்கும். இது தவிர, நம் அன்றாட உணவில் தேர்ந்தெடுக்கும் எண்ணெய் வகைகளும் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பைத் தரக்கூடியதாக அமைகிறது. குறிப்பாக, இதய ஆரோக்கியத்திற்கு உகந்த எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் உணவுப்பொருள்களில் ஒன்றான கடுகு இல்லாமல் சில உணவு வகைகள் முழுமையடையாது. ஆனால், இது ஏன் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் அதன் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து யோசித்ததுண்டா?

ஆம். சிறிய அளவிலான கடுகு உடல் ஆரோக்கியத்திற்கு பலதரப்பட்ட நன்மைகளைத் தருகிறது. அதன் படி, கடுகு கொண்டு தயாரிக்கப்படும் கடுகு எண்ணெய் உண்மையில் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். கடுகு ஆனது ஆக்ஸிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. கடுகு எண்ணெய் ஆனது சைனசிடிஸ், சளி, தடுக்கப்பட்ட மூக்கு, தோல் மற்றும் முடிக்கு போன்றவற்றிற்கு நன்மை தருகிறது. ஆனால், இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருமா என்பது கேள்விக்குள்ளானது. இதில் இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Fish For Heart: இதய நோயாளிகள் மீன் சாப்பிடலாமா? வாரம் இருமுறை மீன் சாப்பிடுவதன் நன்மைகள்!

இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் தரும் நன்மைகள்

பொதுவாக பதப்படுத்தப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் அல்லது பாமாயிலை விட கடுகு எண்ணெய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கடுகு எண்ணெய் தரும் நன்மைகளைக் காணலாம்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

கடுகு எண்ணெயில் ஒமேகா-3 கொழுப்பு அமிலத்தின் ஒரு வகையான ஆல்பா-லினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதால், இது இதய நோயாளிகளுக்கு பெரிதும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் வழக்கமான கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், பிளேட்லெட்டுகளின் ஒட்டும் தன்மையைக் குறைக்கிறது. மேலும், இது பக்கவாதம், அரித்மியா மற்றும் மாரடைப்பு அபாயங்களைக் குறைக்க உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள்

கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்து காணப்படுகிறது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த இரண்டு அமிலங்களுமே HDL கொழுப்பை அதிகரிப்பதற்கும், எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கும் உதவுகிறது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு உதவும் கொழுப்புகள் என அழைக்கப்படுகிறது.

இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த

கடுகு எண்ணெயில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவுகிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற நோய்களைத் தடுக்கலாம்.

ஆக்ஸிஜனேற்றிகள்

இந்த எண்ணெயில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இது ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி, செல்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது இரத்த நாளங்கள் மற்றும் இதய திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்கிறது. கூடுதலாக, இதில் அதிகளவிலான வைட்டமின் ஈ உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Heart: உங்க இதயம் ஆரோக்கியமாக இருப்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்!!

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

கடுகு எண்ணெயை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே, இது இதயம், செல்கள் மற்றும் திசுக்கள் போதுமான அளவு ஆக்ஸிஜனைப் பெறுவதையும், ஆக்ஸிஜனை மாற்றுவதற்கான முழு செயல்முறையும் சரியாகச் செயல்படுவதையும் உறுதி செய்கிறது. இல்லையெனில் இது மோசமான இரத்த ஓட்டம் அடைப்புகள் மற்றும் இதய பாதிப்புகளை விளைவிக்கலாம்.

கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த

ஆய்வுகளில் கடுகு எண்ணெய் ஒட்டுமொத்த கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, எல்டிஎல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்கவும், அதே சமயத்தில் எச்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமான அளவை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும், இது தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைக் குறைத்து, சீரான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் மேம்பட்ட இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

இவ்வாறு கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வழிகளில் மிகுந்த நன்மை பயக்கும். எனினும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், எந்தவொரு உணவுப்பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன்பாக மருத்துவர் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Cooking Oil: இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும் சமையல் எண்ணெய் எது?

Image Source: Freepik

Read Next

Winter heart attack: குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் வருவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள்!

Disclaimer