How To Use Mustard Oil For Babies: குழந்தைகளின் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க பெற்றோர்கள் தங்களால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒன்றாகவே வளரும் குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதும் அடங்கும். ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை மசாஜ் செய்வது, அவர்களின் மனம் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தும் என மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், சிறு குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் போது, பெற்றோர்கள் எந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்ற குழப்பம் வரும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக கடுகு எண்ணெயில் மசாஜ் செய்யலாம். ஆனால், கடுகு எண்ணெய் பயன்படுத்துவதை சிலர் விரும்ப மாட்டார்கள். இதில், குழந்தைகளுக்கு கடுகு எண்ணெய் தடவி மசாஜ் செய்வது சரியா என்பது குறித்துத் தோல் பராமரிப்பு நிபுணர் தீபிகா தாக்கூர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Ghee Benefits For Babies: குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னதெரியுமா?
குழந்தைகளுக்கு கடுகு எண்ணெயில் மசாஜ் செய்வது சரியா?
தீபிகா தாக்கூர் அவர்களின் கூற்றுப்படி, சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மசாஜ் செய்ய கடுகு எண்ணெய் சிறந்ததாகும். ஏனெனில் இந்த எண்ணெயில் 60% அளவிலான மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, இந்த எண்ணெய் பெரும்பாலான தோல் வகைகளுக்குப் பொருந்தும். எனினும், அதிக உணர்திறன் கொண்ட சருமம் உள்ளவர்களுக்கு கடுகு எண்ணெய் ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
கடுகு எண்ணெய் மசாஜ் செய்வதன் நன்மைகள்
குழந்தைகளுக்குக் கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்த
குழந்தைகளுக்குக் கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. கடுகு எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது.
பூச்சிகளை விலக்கி வைப்பது
சிறு குழந்தைகள் பெரும்பாலும் கொசு மற்றும் பூச்சி கடியால் பாதிக்கப்படுவர். குறிப்பாக குளிர்காலத்தில் குழந்தைகள் அடிக்கடி கொசுக் கடியால் பாதிக்கப்படுவதை பார்த்திருப்போம். இந்த நிலையில் கடுகு எண்ணெய் மசாஜ் பூச்சிக்கடியிலிருந்து தப்பிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Sapota Benefits For Babies: இது தெரிஞ்சா இனி உங்க குழந்தைக்கும் சப்போட்டா கொடுப்பீங்க
தொற்று நிவாரணியாக
கடுகு எண்ணெய் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். இவை சிறு குழந்தைகளின் சருமத்திற்கு ஏற்படும் நோய்த் தொற்றுக்களைக் குறைக்க உதவுகிறது.
உடலுக்கு வெப்பத்தைத் தர
குளிர்காலத்தில் சிறு குழந்தைகளை சூடாக வைத்திருக்க இந்த எண்ணெய் சிறந்த தேர்வாகும். குளிர்காலத்தில் கடுகு எண்ணெயுடன் பூண்டு சேர்த்து சமைத்து சிறு குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது.
இவ்வாறு குழந்தைகளின் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். எனினும், குழந்தைகளின் சருமம் உணர்திறன் மிக்கது என்பதால் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு பயன்படுத்துவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Nail Polish Side Effects: உங்க குழந்தைக்கு நெயில் பாலிஷ் போடுறீங்களா.? இது தெரியாம போடாதீங்க.
Image Source: Freepik