$
Mustard Oil Foot Massage Benefits: மசாஜ் செய்வது உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மையைத் தருகிறது. இதில் எந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம் என்பதை சந்தேகத்திற்குரிய ஒன்று. அந்த வகையில் கடுகு எண்ணெயைக் கொண்டு உள்ளங்கால்களில் மசாஜ் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மையைத் தருகிறது.
ஏன் கடுகு எண்ணெய்?
நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய் வகைகளில் கடுகு எண்ணெய் சிறப்பு வாய்ந்தது. இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் நிறைந்த மூலமாகும். கடுகு எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட், பாலிஅன்சாச்சுரேட்டட் போன்ற அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும், இதில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற நிறைவுற்ற கொழுப்புகளும் காணப்படுகின்றன.
இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இது இயற்கையாகவே சருமத்தை ஈரப்பதமாக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த கடுகு எண்ணெயை உள்ளங்கால்களில் மசாஜ் செய்வது அல்லது தேய்ப்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் கடுகு எண்ணெயை உள்ளங்கால்களில் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், கடுகு எண்ணெயை மசாஜ் செய்வதற்கான சரியான நேரம் மற்றும் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

உள்ளங்கால்களில் கடுகு எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள்
கடுகு எண்ணெயைக் கொண்டு உள்ளங்கால்களில் மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
பெண்கள் ஆரோக்கியத்திற்கு
கடுகு எண்ணெயைக் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, அசாதாரண இரத்த ஓட்டம் போன்ற பிரச்சனைகளை நீக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
இரத்த ஓட்ட மேம்பாட்டிற்கு
கடுகு எண்ணெய் மசாஜ் செய்வது, உடலில் கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது. இவ்வாறு மசாஜ் செய்வதன் மூலம் முழு உடலிலும் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுகிறது.
மன ஆரோக்கியத்திற்கு
பாதங்களில் கடுகு எண்ணெய் மசாஜ் செய்வது மன அழுத்தம், பதற்றம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. இது மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைக்க உதவுகிறது.
வயிறு ஆரோக்கியத்திற்கு
உள்ளங்கால்களை மசாஜ் செய்வது வாத தோஷத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வாயு, வீக்கம், அஜீரணம் போன்றவற்றை போக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
நல்ல தூக்கத்திற்கு
கடுகு எண்ணெய் கொண்டு உள்ளங்கால்களை மசாஜ் செய்வது தூக்கமின்மையைப் போக்குவதற்கான சிறந்த வழியாகும். இரவு தூங்கும் முன் உள்ளங்காலில் மசாஜ் செய்வது வருவதன் மூலம் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியைத் தருகிறது.

எந்த நேரத்தில் எப்படி செய்யலாம்?
ஆயுர்வேதத்தில், உள்ளங்கால்களை இரவு தூங்கும் முன்னரே மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும்.
- முதலில் கடுகு எண்ணெயைச் சூடாக்கி, வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- மசாஜ் செய்யும் முன்பாக கால்களை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
- பின், இந்த எண்ணெயைக் கொண்டு இரவு தூங்குவதற்கு 30 முதல் 40 நிமிடங்களுக்கு முன்னதாக, பாதங்களில் மசாஜ் செய்யவும்.
இந்த முறையில் மசாஜ் செய்வது வருவதன் மூலம் மேலே கூறப்பட்ட நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health Tips: மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இத தினமும் செய்யுங்க.
Image Source: Freepik