Early Morning Wake Up: அதிகாலை நேரத்தில் எழும் பழக்கம் ஒருவரின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் என அனைத்திற்கும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியதாகவும், வாழ்க்கையில் நம்முடைய இலக்குகளை அடையக்கூடியதற்கும் சிறந்த வழியாகும். இந்த பரபரப்பான காலகட்டத்தில் சீக்கிரம் எழுவதைப் பழக்கமாக வைத்திருப்பது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இப்போது அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் பல்வேறு நலன்களைக் காணலாம்.
அதிகாலை எழுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஒருவர் அதிகாலைப் பொழுதில் எழுவதால் உடல் மற்றும் மன ரீதியாகப் பெறும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
நேரம் திட்டமிடுதல்
திட்டமிட்ட நேரத்தை விட முன்னதாக எழுவதால், ஏராளமான செயல்பாடுகளில் ஈடுபடலாம். அந்த நாளில் செய்ய வேண்டிய செயல்களைத் திட்டமிட்டு நேரத்தை செலவிடுவது நேரத்தை வீணடிப்பதைத் தடுக்கும். மேலும், சரியான நேரத்தில் செயல்களை முடிப்பதற்கான ஆற்றல் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Things Do Before Going To Bed: தூங்கும் முன் நீங்க கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே!
எடை மேலாண்மை
அதிக நேரம் தூங்குவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதும், உடல் எடையைப் பாதிக்கலாம். எனவே தினந்தோறும் சரியான நேரத்தில் திட்டமிட்டு எழும் பழக்கத்தை வைத்திருக்கும் போது உடல் எடையை சரியான முறையில் பராமரிக்கலாம்.
நல்ல இரவு தூக்கம்
அதிகாலை நேரத்தில் எழும் பழக்கம் கொண்டவர்கள், இரவில் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பர். அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பான உணர்வைத் தருவதுடன், இரவில் சீக்கிரமாக ஓய்வெடுப்பதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு சரியான நேரத்தில் தூங்கி எழுவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
சமச்சீரான உணவு
அதிகாலை நேரத்தில் எழுவது சமச்சீரான உணவைப் பேணுவதற்கு உதவி புரிகிறது. காலை உணவு என்பது ஒரு நாளின் முக்கியமான உணவாகும். இந்த காலை உணவை சுவையாகவும், ஆரோக்கியமாகவும் எடுத்துக் கொள்வது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இலக்கை அடைய
காலையில் சீக்கிரம் எழும் போது மன அழுத்தம் குறைவாகவும், புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். மேலும் அதிக நேரம் கிடைப்பதால் நமது இலக்கை விரைவில் அடைவதற்கான வழியைப் பெறலாம். எனவே, வாழ்க்கையின் இலக்குக்களை அடைவதற்கான வழிகளில் ஒன்றாக அதிகாலை எழும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம்.
உற்பத்தித் திறன் மேம்பாடு
அதிகாலையில் எழும் போது அதிக நேரம் கிடைக்கிறது. இது வேலையை திட்டமிட்டபடி செய்து முடிக்க பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் எழுவது தெளிவான மற்றும் அமைதியான மனதை வைத்திருக்க உதவும். இது ஒரு நாளைத் திட்டமிட்டபடி நடத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Meditation Benefits: உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தினமும் 20 நிமிடம் தியானம் செஞ்சா போதும்
Image Source: Freepik