Early morning bath: மார்கழி மாதத்தில் விடியற்காலையில் குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Benefits of showering first thing in the morning: அன்றாட வாழ்க்கையில் குளிப்பது எல்லோருக்கும் வழக்கமான ஒன்று தான். ஆனால், எந்த நேரத்தில் குளிப்பது என்பது தான் எல்லோருக்கும் சந்தேகத்தை தருகிறது. ஒருவர் விடியற்காலையில் குளிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் விடியற்காலையில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
  • SHARE
  • FOLLOW
Early morning bath: மார்கழி மாதத்தில் விடியற்காலையில் குளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Is it good to bath early in the morning: நம் அன்றாட வாழ்க்கையில் உடலைப் பராமரிக்க நாம் பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளைக் கையாள்கிறோம். அந்த வகையில் தினமும் நாம் குளிப்பது நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகும். பொதுவாக குளிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்முறையாகும். இது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரக்கூடியதாகும். சிலர் தினமும் காலை வேளையில் குளிப்பர். சிலர் இரவு நேரத்தில் குளிப்பர். இன்னும் சிலர் காலை, மாலை என இரு வேளைகளிலும் குளிப்பர்.

உண்மையில் ஒருவர் விடியற்காலை நேரத்தில் குளிப்பது அதிகபட்ச நன்மைகளைத் தரும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பிரம்ம முகூர்த்த நேரமான விடியற்காலை நேரத்தில் எழுந்து குளிப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதன் படி, மார்கழி மாதத்தில் பலரும் விடியற்காலையில் எழுந்து, நீராடி கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. இது ஆன்மீகம் சார்ந்ததாக இருப்பினும், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான நன்மைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தினமும் விடியற்காலை நேரத்தில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Night Bath: இரவு நேரத்தில் குளிப்பதில் இவ்வளவு நல்லது இருக்கா?

விடியற்காலையில் எழுந்து குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க

விடியற்காலை நேரத்தில் எழுந்து குளிப்பது, உடலை புதிய வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்க தூண்டுகிறது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும், இந்த வெள்ளை அணுக்கள் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நமது உயிரியல் கடிகாரம் காரணமாக, விடியற்காலை நேர குளியலின் போது மட்டுமே இது நடைபெறுகிறது.

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

காலை நேரத்தில் குளிப்பது இயற்கையாகவே உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதாவது நம் உடலில் நீரை ஊற்றும் போது, இரத்தத்தை சருமத்தின் மேற்பரப்பில் விரைய வைக்கிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. நல்ல இரத்த ஓட்டம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. சீரான இரத்த ஓட்டம், உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு உதவுகிறது. அதே சமயம், உடலில் நல்ல சுழற்சி இல்லாத போது, பாதகமான நிலைமைகள் ஏற்படலாம். அதாவது உயர் இரத்த அழுத்தம் மற்றும் வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. இதனைத் தவிர்க்கவே, காலை நேரத்தில் குளிப்பது மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இருமல் நிவாரணத்திற்கு

ஏற்கனவே இருமல், சளி போன்ற பிரச்சனைகளைக் கொண்டிருந்தவர்கள், காலையில் குளிப்பது சற்று நிவாரணம் அளிக்கும் சிறந்த வழிகளில் ஒன்றாகும். எனவே, சளி அல்லது இருமலுடன் போராடும் போது, தூங்கும் போது இரவு முழுவதும் குவிந்திருக்கும் சளி அனைத்தும் தொண்டை வலி போன்றவை மிகவும் விரும்பத்தகாத அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது. இந்நிலையில், காலை நேரத்தில் சூடான குளியலை எடுத்துக் கொள்வது சளியைத் தளர்த்தி சில நிமிடங்களில் அசௌகரியத்தை நீக்குகிறது. மேலும், இதிலிருந்து வெளியேறும் நீராவி, தேவையற்ற பொருட்களை தளர்த்தவும், சைனஸ்களை அழிக்கவும் உதவுகிறது. மிகச் சிறந்த நன்மைகளைப் பெற, நறுமண ஷவர் ஜெல் மற்றும் யூகலிப்டஸ் எண்ணெய்களைப் பயன்படுத்தி குளிக்கலாம். இது தசை வலியை நீக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: சாதாரண நீர் Vs சுடு தண்ணீர்: குளிப்பதற்கு எந்த தண்ணீர் நல்லது?

சரும ஆரோக்கியம்

பொதுவாக, சரும ஆரோக்கியத்தில் குளியல் மிகவும் சாதகமான விளைவுகளைத் தருகிறது. எனினும், விடியற்காலையில் குளிப்பது சருமத்திற்கு இன்னும் சில கூடுதல் நன்மைகளைத் தருகிறது. இவை சருமத்தின் இயற்கையான எண்ணெயைச் சமன் செய்து முகப்பருவைக் குறைக்கிறது. எனவே சரும ஆரோக்கியத்தில் காலை குளியல் மிகவும் நேர்மறையான விளைவைத் தருகிறது.

மன அழுத்தம் மற்றும் பதட்டம் நீங்க

மக்கள் பெரும்பாலானோர் அதிகாலையில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற உணர்வை அனுபவிக்கின்றனர். ஆனால், இது அன்றைய நாளில் அதிகளவிலான மன அழுத்தத்தைச் சந்திக்கும் சூழலை ஏற்படுத்தலாம். இந்நிலையில், மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு, காலை குளியல் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. குறிப்பாக, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த குளியல் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனைப் பெற உதவுகிறது. இவ்வாறு மூளையில் ஆக்ஸிஜன் இருப்பது நாள் முழுவதும் மனதை சீராக வைப்பதுடன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் ஜில்லு தண்ணீரில் குளிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

 

Image Source: Freepik

Read Next

வார்ம் வாட்டரில் கால்களை நனைக்கும் முன் இதை செய்யுங்க! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

Disclaimer