குளிர்காலத்தில் ஜில்லு தண்ணீரில் குளிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Benefits of bathing with cold water in winter: பொதுவாக குளிர்ந்த காலநிலையில் சூடாக இருப்பதையே பலரும் விரும்புவோம். குளிப்பதற்குக் கூட சூடான நீரில் குளிப்பதற்கே முக்கியத்துவம் அளிப்பர். உண்மையில், குளிர்ந்த காலநிலையில் சூடான நீருக்குப் பதிலாக, குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குளிர்ச்சியான காலநிலையில் போது குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
குளிர்காலத்தில் ஜில்லு தண்ணீரில் குளிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Is it good to bath with cold water in winter: குளிர்காலம் வந்துவிட்டாலே பெரும்பாலானோர் குளிப்பதற்குத் தயங்குவர். இதனால் தினமும் குளிப்பதைத் தவிர்த்து விடுகின்றனர். எனினும், பருவத்தைப் பொருட்படுத்தாமல் குளிப்பது முற்றிலும் இன்றியமையாததாகவும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகவும் அமைகிறது. அவ்வாறு குளிக்க விரும்புபவர்கள் பலரும் குளிர்ந்த காலநிலையில் சூடான நீரில் குளிப்பதையே விரும்புவர். இது உண்மையில் உடலுக்கு நன்மை பயக்குமா என்று யோசித்ததுண்டா?

உண்மையில், குளிர்ந்த சூழ்நிலையின் போது நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்கும் வகையில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதன் படி, குளிர்காலத்தில் குளிப்பது தசை பதற்றத்தை நீக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்த மற்றும் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், நாள்தோறும் குளிப்பது உடலில் இருந்து நச்சுகளை நீக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது வெந்நீரைக் காட்டிலும் மிகவும் பயனுள்ள தேர்வாக அமைகிறது. இதில் குளிர்ந்த காலநிலையில் குளிர்ந்த நீரில் ஏன் குளிக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வொர்க் அவுட் செஞ்ச பிறகு கண்டிப்பா குளிக்கணும்! ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு

பொதுவாக குளிர்ந்த நீரில் குளிப்பது, உடலை சூடாக வைத்திருக்க, இரத்தத்தை உறுப்புகளுக்கு நகர்த்த அனுமதிக்கிறது. ஆனால் வெந்நீரில் குளிப்பது, இரத்தத்தை தோலின் மேற்பரப்பை நோக்கி நகர்த்துகிறது. அதாவது குளிர்ந்த நீரின் விளைவுக்கு எதிர்மறையாக இது செயல்படுகிறது. எனவே குளிர்ந்த நீரில் குளிப்பது தமனிகளை வலிமையாக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இதன் மூலம் வாழ்நாள் முழுவதும் நீண்ட ஆரோக்கியத்துடன் காணப்படலாம்.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

பெரும்பாலும் குளிர்ச்சியான காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி சற்று குறைவாகவே காணப்படும். இந்நிலையில், குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த தேர்வாக அமைகிறது. இவ்வாறு குளிர்ந்த நீரில் குளிக்கும் போது, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் அதிக சதவீதம் மற்றும் அதிக வளர்சிதை மாற்ற விகிதத்தைக் கொண்டிருக்கும். ஏனெனில், இந்த குளிர்ச்சியான நீரில் குளிப்பது உடல் தன்னைத் தானே சூடாக்க முயற்சிக்கிறது. இதன் செயல்பாட்டில், வெள்ளை இரத்த அணுக்களை வெளியிட முனைகிறது. மேலும், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை அதிகரிக்கிறது.

தசை மீட்புக்கு

குளிர் காலங்களில் பெரும்பாலானோர் தசை வலியை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இந்நிலையில், தசை வலியை விரைவில் சமாளிப்பதற்கு குளிர்ந்த நீரில் குளிப்பது உதவும். ஏனெனில், இது சுருக்கம் போன்று செயல்படுகிறது. இவ்வாறு குளிர்காலத்தில் ஏற்படும் தசை வலியை விரைவில் சமாளிக்கவும், தசை மீட்புக்கும் குளிர்ந்த நீரில் குளிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ayurvedic Bathing Tips : நீங்கள் சரியான முறையில் குளிக்கிறீர்களா?.. எப்படி குளிக்கணும் என தெரியுமா?

சருமம், முடிக்கு ஏற்ற குளியல்

குளிர்ச்சியான காலநிலை மாற்றத்தின் போது, சருமம் மற்றும் முடியின் இயற்கையான ஈரப்பதங்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படலாம். இந்நிலையில், குளிர்ந்த நாட்களில் வெந்நீரில் குளிப்பது சருமம், முடிக்கு நீரிழப்பை ஏற்படுத்தி, வறண்டு போகச் செய்கிறது. இதனால், சரும எரிச்சல், வெடிப்புகள் தோன்றலாம். அதே போல, முடி சார்ந்த பிரச்சனைகளாக முடி உதிர்தல், பொடுகு பிரச்சனை போன்றவையும் ஏற்படலாம். இந்நிலையில் குளிர்ந்த நீரில் குளிப்பது துளைகளை இறுக்கி, இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. இது சருமம் மற்றும் உச்சந்தலையில் உள்ள துளைகளை அடைத்து, அழுக்கு உள்ளே செல்வதை தடுக்கிறது. இது தவிர, சருமம், முடியின் இயற்கை எண்ணெய்களும் அதிலிருந்து அகற்றப்படாது.

மன அழுத்தத்தை நிர்வகிக்க

குளிர்கால சோம்பல் ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனை விரைவில் நிர்வகிக்க குளிர்ந்த நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இது ஒருவரின் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. இந்த குளிர்ந்த நீரில் குளித்து விட்டு வரும் போது, மிகவும் நிம்மதியான உணர்வைச் சந்திக்கலாம்.

குளிர்காலத்தில் யார் குளிர்ந்த நீர்க்குளியலைத் தவிர்க்க வேண்டும்?

குளிர்ந்த காலநிலையில் குளிர்ச்சியான நீரில் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும் சிலர் இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை குறைவாகக் கொண்டிருப்பவகள், குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், குளிர்ந்த நீரானது சளி, இருமல், தொண்டையில் எரிச்சல், நிமோனியா மற்றும் காய்ச்சல் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே இவர்கள் குளிர்ந்த நீரைத் தேர்ந்தெடுக்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

மேலும், காய்ச்சல், இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் குளிர்ந்த நீர் குளியலைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: குளிக்கும்போது உங்கள் தலைமுடி உதிர்கிறதா?… அதைத் தடுக்க இந்த 4 விஷயங்கள் போதும்!

Image Source: Freepik

Read Next

Low energy causes: உஷார்! நீங்க செய்ற இந்த பழக்கங்கள் உங்க எனர்ஜி லெவலைக் குறைக்கும்

Disclaimer