Low energy causes: உஷார்! நீங்க செய்ற இந்த பழக்கங்கள் உங்க எனர்ஜி லெவலைக் குறைக்கும்

Habits that can lower energy levels in body: ஒருவர் எல்லா நேரங்களிலும் அதிக ஆற்றலைக் கொண்டிருப்பது முடியாது. அதே சமயம், ஒருவர் எல்லா நேரங்களிலும் சோர்வாக இருப்பதாக உணர்வர். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். எனினும், எல்லா நேரங்களிலும் சோர்வாக உணர்வது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கலாம். எனவே, உடல் ஆற்றலைக் குறைக்கும் பழக்கங்களைக் கண்டறிந்து அதைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
  • SHARE
  • FOLLOW
Low energy causes: உஷார்! நீங்க செய்ற இந்த பழக்கங்கள் உங்க எனர்ஜி லெவலைக் குறைக்கும்

Why do i feel sleepy all day: அன்றாட வாழ்வில் நாம் சில சமயங்களில் ஆற்றல்மிக்கவராக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் சோர்வை சந்திக்கிறோம். இன்னும் சில நேரங்களில், சிலர் எல்லா நேரங்களிலும் சோர்வை உணர்வர். இது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் அன்றாட வாழ்க்கை முறையையும் பாதிக்கலாம். இவ்வாறு எல்லா நேரங்களிலும் சோர்வாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் பொதுவாக, காலை உணவைத் தவிர்ப்பது, நீரேற்றம் இல்லாதது, தூக்கமின்மை போன்ற பழக்கங்கள் அடங்கும்.

ஆனால், இந்தப் பழக்கங்கள் எவ்வாறு நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்பதை யோசித்திருக்கிறீர்களா? உண்மையில் ஒருவர் நிறைய வேலை செய்த பிறகு மட்டும் சோர்வை அடைவதில்லை. இது போன்ற அன்றாட பழக்கங்கள் அவர்களின் வாழ்க்கை முறையை பெரிதும் பாதிக்கிறது. எனவே உடலை சோர்வாக்கும் இந்த பழக்கங்களைத் தவிர்ப்பது நல்லது. இதில் உடல் ஆற்றலைத் தக்கவைக்க நாம் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: நாள் முழுவதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்கிறீர்களா? அப்போ இத ஃபாலோ பண்ணுங்க!

ஆற்றல் அளவைக் குறைக்கும் அன்றாட பழக்கங்கள்

போதிய நீர் அருந்தாமல் இருப்பது

நன்றாக உணவு எடுத்துக் கொண்ட போதிலும், போதிய நீரேற்றம் இல்லாமல் இருக்கலாம். இது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி சோர்வாகவும் மந்தமாகவும் உணர வைக்கிறது. ஏனெனில் நீரேற்றமாக இருப்பது, செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வது போன்ற செயல்களுக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே உடலை நீரேற்றமாகவும், ஆற்றலுடனும் வைத்திருக்க நாள் முழுவதும் தொடர்ந்து தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

காலை உணவை தவிர்ப்பது

இன்றைய பிஸியான காலகட்டத்தில் பலரும் காலை உணவைத் தவிர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர். ஆனால், காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர்ப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்கும், உற்சாகமாக இருப்பதற்கும் தேவையான ஆற்றலைப் பெற முடியாமல் போகலாம். இது தவிர, காலை உணவைத் தவிர்ப்பதால் சரியான ஊட்டச்சத்துக்களைப் பெறாமல் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இது அவர்களை மந்தமாக உணர வைக்கிறது. இதனைத் தவிர்க்க முழு தானியங்கள், புரதம் மற்றும் பழங்கள் நிறைந்த ஆரோக்கியமான காலை உணவு உடலுக்குத் தேவையான நீண்ட கால ஆற்றலை வழங்குகிறது.

அதிகமாக உட்காருவது

நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை உடல் சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல் மட்டங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே போதுமான உடல் செயல்பாடு இல்லாதது உடலில் இரத்த ஓட்டத்தை மெதுவாக்கி தசைகள் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்கிறது. இதனால் சோர்வாக உணரலாம். இந்நிலையில், நீட்சி அல்லது விறுவிறுப்பான நடைபயிற்சி போன்ற வழக்கமான இயக்கங்களைச் சேர்த்துக் கொள்வது, உடலை உற்சாகப்படுத்தி, சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி சோர்வாகவும் சோம்பேறியாகவும் உணர்கிறீர்களா? அப்போ இந்த ஸ்மூத்தியை குடியுங்க!

காஃபின் மீதான நாட்டம்

காஃபின் அருந்துவது உடனடி ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது எனக் கருதினாலும், அதை அதிகமாக உட்கொள்வது உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால், காலப்போக்கில் அதிகப்படியான காஃபின் உட்கொள்வதால் தூக்க ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம். இது இன்னும் உடலை சோர்வடையச் செய்யலாம். மிதமான அளவு காஃபினைக் கடைபிடித்து, நல்ல இரவு ஓய்வை உறுதி செய்ய வேண்டும்.

மோசமான தூக்கம்

மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக தூக்கமின்மை ஆகும். அதன் படி, சீரற்ற தூக்க அட்டவணைகள், படுக்கைக்கு முன் திரை நேரம், அல்லது சத்தமில்லாத சூழல் போன்றவை தூக்கத்தின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. இந்த தூக்கமின்மை காரணமாக, ஆற்றல், மனநிலை மற்றும் செறிவு போன்றவை பாதிக்கப்படலாம். எனவே ஒவ்வொரு இரவும் 7-9 மணி நேரம் தரமான தூக்கத்தை இலக்காக வைத்துக் கொள்ளலாம். சீரான தூக்க அட்டவணை, அமைதியான தூக்க வழக்கங்கள் போன்றவற்றின் மூலம் தூக்கமின்மையை எதிர்த்துப் போராடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Food for weakness: அடிக்கடி பலவீனமாக உணர்கிறீர்களா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Image Source: Freepik

Read Next

Home plants benefits: வீட்டில் செடி வளர்ப்பது நமக்கு என்னென்ன நன்மைகளைத் தரும் தெரியுமா?

Disclaimer