Health benefits of indoor plants: நாம் பெரும்பாலான நேரங்களை வீட்டுக்குள்ளேயே செலவிடுகிறோம். எனவே உட்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அதன் படி, செடி வளர்ப்பது ஒரு நல்ல யோசனையாகும். எனினும், இன்றைய பிஸியான காலகட்டத்தில் சிலரால் வெளிப்புற தோட்டத்தை வைத்திருக்கவோ அல்லது பராமரிக்கவோ முடியாது. இது போன்ற சூழ்நிலையில், நாம் வாழும் இடத்தை உயர்த்திக் கொள்ளும்போது இயற்கையோடு நம்மை இணைத்துக் கொள்வதற்கான வழியைத் தேட வேண்டும். அந்த வகையில் உட்புறத் தோட்டம் சிறந்த தேர்வாகும்.
இதன் காரணமாக, இன்று பலரும் உட்புறத் தோட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். நவீன அழகியல் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றின் கலவையான வாழ்க்கை முறையின் தேர்வாக உட்புறத் தோட்டம் அமைகிறது. உட்புற தாவரங்களை அலங்கரிப்பது மட்டுமல்லாமல், தாவரங்களை கவனித்துக்கொள்வதற்கும், வீட்டில் நீண்ட காலத்திற்கு அழகாக இருப்பதை உறுதி செய்யவும் பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த உட்புறத் தோட்டம் அழகுடன் கூடிய பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: அதிக ஸ்கிரீன் டைமால் கண்களுக்கு பாதிப்பா? எப்படி தவிர்ப்பது?
உட்புறத் தோட்டம் தரும் ஆரோக்கிய நன்மைகள்
பசுமை உள்ள இடங்களில் வாழ்வதும், வேலை செய்வதும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மைச் சுற்றி தாவரங்களை வைத்திருப்பது நம்மை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உட்புற தாவரங்களை வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
நோய்களிலிருந்து விரைவில் குணமாக
பூக்கள் அல்லது தாவரங்களைப் பார்ப்பது காயங்கள் மற்றும் நோய்களிலிருந்து விரைவில் மீட்க உதவுவதாக சில ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2002 ஆராய்ச்சி ஆய்வின் மதிப்பாய்வில் குறிப்பிட்டதன் படி, தாவரங்களை பார்க்காதவர்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு வகையானஅறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்கள், அதிலிருந்து மிக வேகமாக குணமடைந்ததாகவும், குறைவான வலி நிவாரணையே தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு
வசிக்கும் இடத்திலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ தாவரங்கள் இருப்பின், அவை சூழலில் அமைதியாக, நிதானமாக மற்றும் வசதியாக உணர வைப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளது. இதில் உட்புறத் தோட்டக்கலை ஒரு நபரின் மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. அதே சமயம், கணினி அடிப்படையிலான வேலை காரணமாக இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே, தாவரங்களுடன் இணைவது உடலியல் மற்றும் உளவியல் மன அழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: இத மட்டும் தினமும் ஃபாலோ பண்ணுங்க! எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்
கவனத்தை மேம்படுத்த
ஒரு சில வீடுகளில் அல்லது அவர்கள் இருக்கும் இடங்களில் உண்மையான தாவரங்கள் அல்லது மலர்களை விட, செயற்கை செடிகளை வளர்க்கத் தேர்வு செய்கின்றனர். எனினும், செயற்கையான தாவரங்களை விட உண்மையான தாவரங்கள் ஆனது அதன் மீதான கற்றல் மற்றும் செறிவூட்டலை அதிகரிக்க உதவுகிறது. எனவே செயற்கை தாவரங்களை விட, இயற்கைத் தாவரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், கவனத்தை மேம்படுத்தலாம்.
வேலை திருப்தியை அதிகரிக்க
நாம் பூங்காவின் பார்க்கும் அழகிய காட்சிகள் நம் மனநிலையை மேம்படுத்துவதாக இருக்கும். ஆனால், ஒரு தொட்டியில் செடி வைத்திருப்பது, அதை நாமே பராமரிப்பது மனநிலையை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பணியிடத்தில் தாவரங்கள் இல்லாத நபர்களுடன் ஒப்பிடுகையில், பணியிடத்தில் தாவரங்களை வைத்திருப்பது பணியில் திருப்தி அளிப்பதாகவும், அர்ப்பணிப்பை பெரிதும் மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
உட்புறத் தோட்டம் அமைவது இவ்வாறு உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனவே அனைவரும் வீட்டில் உட்புறத் தோட்டங்களை வளர்ப்போம். பல்வேறு ஆரோக்கிய நலன்களைப் பெறுவோம்.
இந்த பதிவும் உதவலாம்: Mind Control Tips: அலைபாயும் மனதை அமைதிப்படுத்த இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க
Image Source: Freepik