வெற்றி என்பது தானாக வருவதில்லை. அதற்கு அதிக உழைப்பு தேவை. சில தியாகங்கள் செய்ய வேண்டும். கொஞ்சம் பழகிக்கொள்ள வேண்டும். குறிப்பாக சில பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். ஆம்,கொஞ்சம் ஒழுக்கத்தை கடைபிடித்தால் வெற்றி பெறலாம்.
இருப்பினும், நாம் அறியாமல் பின்பற்றும் சில பழக்கவழக்கங்கள் வெற்றியில் இருந்து நம்மைத் தடுத்து நிறுத்துகின்றன. இந்தப் பழக்கங்கள் நம்மை எவ்வளவு பாதிக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அத்தகைய பழக்கங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
இதை முதல்ல நிறுத்துங்க:
சமூக ஊடகங்களை அதிகமாகப் பயன்படுத்துவது நல்லதல்ல. சோசியல் மீடியா நமக்கே தெரியாமல் நமது நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் அவசியமாக முடிக்க வேண்டிய வேலைகளைக் கூட கிடப்பில் போட்டுவிடுகிறோம்.
மேலும் இது பார்வை மற்றும் மனநல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. ஆன்லைனில் இருப்பதை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு, ஆஃப்லைன் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
கற்றுக்கொள்ள தயங்காதீர்கள்:
வாழ்க்கையில் எதையாவது கற்றுக்கொள்வது எப்போதும் முக்கியம். பலர் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. இது வெற்றிக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைகிறது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும்.
நோ நெகட்டீவ்:
எந்த ஒரு விஷயத்தைப் பற்றி சிந்திக்கும் போதும், எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுவதை முதலில் ஒதுக்கி வையுங்கள். ஏனெனில் ஒரு செயலை ஆரம்பிக்கும் போதே, “என்னால் முடியாது” என்று நினைப்பது உங்கள் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே எப்போது பாசிட்டிவான மற்றும் ஆக்டிவான மனநிலையில் இருங்கள். இது உங்கள் மனநிலையை வலுப்படுத்துவதோடு, உங்களுடைய இலக்குகள் மற்றும் லட்சியங்களை அடைய உறுதுணையாக இருக்கும்.
நேர மேலாண்மை:
நேர மேலாண்மையும் மிக முக்கியம். நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க திட்டமிடுங்கள். இதனால் பணிகள் விரைவாக முடிக்கப்படுவதோடு, இறுதி நேர அவசரத்தால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தில் இருந்தும் தப்பிக்க உதவும்.
யதார்த்தமற்ற இலக்குகள்:
நமது இலக்குகள் எப்போதும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அதிக எதிர்பார்ப்புகளுடன் நம்பத்தகாத இலக்குகளை அமைக்காதீர்கள் மற்றும் அவை நிறைவேறாதபோது அவற்றைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். நீங்கள் எவ்வளவு செய்ய முடியும் என்பதைத் தீர்மானித்து, வெற்றிபெற எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
Image Source: Freepik