ஒரு சிட்டிகை கருப்பு மிளகு பவுடருடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Benefits of eating honey with black pepper: தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் மிளகு பவுடர் கலந்து சாப்பிடுவது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவிலான தேனுடன், ஒரு பின்ச் மிளகு சேர்த்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஒரு சிட்டிகை கருப்பு மிளகு பவுடருடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Honey with black pepper benefits: அன்றாட வாழ்வில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக, காலையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள், பானங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவை நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கவும், புத்துணர்ச்சியைத் தரவும் உதவுகிறது. அவ்வாறு காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான பொருள்களில் தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் அடங்கும்.

இவை இரண்டுமே ஆரோக்கியமான மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும். இவை ஆயுர்வேதத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேனுடன் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது பல கடுமையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, செரிமானத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

தேனின் மருத்துவ குணங்கள்

தேனில் ஆரோக்கியமான வைட்டமின்கள், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், ப்ரீபயாடிக்குகள் மற்றும் ஆர்கானிக் அமிலம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தேன் மிகச்சிறந்த உணவுப்பொருளாகும். குறிப்பாக, இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சர்க்கரைக்குப் பதிலாக தேனைப் பயன்படுத்தினால்  உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் தெரியுமா?

கருமிளகின் மருத்துவ குணங்கள்

கருமிளகில் உள்ள பைபரின் செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைப்பது, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. இது ஆயுர்வேதத்தில் சிறந்த பொருளாகும். கருமிளகை வெறும் வயிற்றில் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

தேனுடன் கருமிளகு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேனுடன் 1 பின்ச் அளவிலான கருமிளகு சேர்த்து எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

எடையைக் குறைக்க

கருப்பு மிளகு உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. மேலும் தேனில் இயற்கையான சர்க்கரைகள் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்க வழிவகுக்கிறது. தினமும் காலையில் தேனுடன் கருமிளகு சேர்த்து சாப்பிடுவது உடலில் சேரும் கொழுப்பை படிப்படியாகக் குறைக்க உதவுகிறது. மேலும் இவை தொப்பை கொழுப்பைக் குறைக்கின்றன.

செரிமான ஆரோக்கியத்திற்கு

கருப்பு மிளகு வயிற்றில் நொதிகளின் சுரப்பை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் தேன் குடலை சுத்தப்படுத்த்துகிறது. இவை இரண்டையும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாயு, அஜீரணம், மலச்சிக்கல் அல்லது அமிலத்தன்மை பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இது வயிற்றை லேசாக வைத்திருக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெற

தேனில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. மேலும் கருப்பு மிளகில் பைபரின் என்ற பொருள் காணப்படுகிறது. இவை சுவாச மண்டலத்தைத் திறந்து தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. காலையில் இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து உட்கொள்வது சளி, இருமல் மற்றும் தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் தருகிறது. இது சளியை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இந்த கலவை குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: கிராம்பு மற்றும் தேனை ஒன்றாக சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?

மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற

கருப்பு மிளகில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. தேனுடன் சேர்த்து சாப்பிடுவது மூட்டு விறைப்பு, கீல்வாதம் மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இவை உடலுக்கு உள்ளிருந்து வெப்பத்தை அளிக்கவும், வலியைப் போக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த

தேன் மற்றும் கருப்பு மிளகு இரண்டுமே ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தொற்றுகள், பருவகால நோய்கள் மற்றும் ஒவ்வாமைகளைத் தடுக்க உதவுகிறது. இவை உடலின் செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கிறது. சோர்வாக உணரும் போது, இதை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.

எப்படி சாப்பிடலாம்?

காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் தேனில் ஒரு சிட்டிகை புதிய கருப்பு மிளகு தூள் கலந்து, தண்ணீர் சேர்க்காமல் மெதுவாக அருந்த வேண்டும். இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் 1-2 வாரங்களில் வித்தியாசத்தைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இஞ்சி மற்றும் தேன் ஒன்றாக சாப்பிடுவது எவ்வளவு நல்லது தெரியுமா.?

Image Source: Freepik

Read Next

ஃபுட் பாய்சனிங் வராம தடுக்க நீங்க செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோவ்

Disclaimer