Amla juice with black pepper benefits: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு அன்றாட வாழ்க்கையில் வெறும் வயிற்றில் சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக்கூடிய பானங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு இயற்கையான மருந்தாகவும் செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காலையில் வெறும் வயிற்றில் ஆம்லா சாறு அருந்து ஒரு சூப்பர் உணவாகக் கருதப்படுகிறது. ஆனால், வெறும் ஆம்லா சாறு மட்டும் எடுத்துக் கொள்ளாமல் அதில், சில ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களைச் சேர்த்து எடுத்துக் கொள்வதும் நன்மை பயக்கும்.
அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் உதவும் மசாலாக்களில் கருப்பு மிளகு சிறந்த தேர்வாக அமைகிறது. இதை ஆம்லா சாறுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது ஒரு சக்தி வாய்ந்த பானமாகக் கருதப்படுகிறது. இந்த தனித்துவமான கலவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதை விட அதிகமாக செய்கிறது. இது மனதை கூர்மைப்படுத்தவும், உடலிலிருந்து நச்சுக்களை நீக்கவும், ஹார்மோன்களை கூட சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இதில் தினமும் வெறும் வயிற்றில் ஆம்லா சாறுடன் கருமிளகு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Buttermilk Recipe: ஆம்லா மோர் மசாலா ரெசிபி! பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு ரெசிபி போதும்!
ஆம்லா சாறுடன் கருமிளகு சேர்த்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கன உலோகங்களை நீக்குவதற்கு
பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் நச்சுகள் போன்றவற்றால் காலப்போக்கில் கன உலோகங்கள் உடலில் சேரக்கூடும். இந்நிலையில் ஆம்லா சாறு அருந்துவது ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இது தீங்கு விளைவிக்கும் பொருட்களுடன் பிணைக்கப்பட்டு அதை வெளியேற்றுகிறது. மேலும், கருப்பு மிளகு நச்சு நீக்கும் சேர்மங்களின் உயிர் கிடைக்கும் தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இந்த பானம் அருந்துவது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்த ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க
நெல்லிக்காய் சாறு ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகும். இவை கவனம், நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மூளைக்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. கருப்பு மிளகானது இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதன் மூலம் இந்த விளைவை மேலும் அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சீராக கிடைப்பதை உறுதி செய்யலாம். இந்த பானம் அருந்துவது ஒரு இயற்கையான மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், நாள் முழுவதும் விழிப்புடனும் கூர்மையாகவும் இருக்க உதவுகிறது.
பற்களை வலுப்படுத்துவதற்கு
கருப்பு மிளகுடன் ஆம்லா சாறு அருந்துவது உடலின் உட்புற ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், வாய்வழி சுகாதாரத்திற்கும் மிகுந்த நன்மை பயக்கும். நெல்லிக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்ல உதவுகிறது. இதன் மூலம் ஈறு, தொற்று மற்றும் துவாரங்களைத் தடுக்கலாம். இதில் சேர்க்கப்படும் கருப்பு மிளகு பல்வலி மற்றும் ஈறு உணர்திறன் போன்றவற்றிற்கு வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. மேலும் இது சுவாசத்தை புத்துணர்ச்சியூட்டுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla juice at night: தினமும் இரவில் ஆம்லா சாறு குடிப்பதால் என்னாகும் தெரியுமா?
ஹார்மோன்களை சமநிலைப்படுத்த
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மனநிலை மாற்றங்கள், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் எடை அதிகரிப்புக்கு கூட வழிவகுக்கலாம். நெல்லிக்காய் சாறு அருந்துவது தைராய்டு செயல்பாட்டை சீராக்க உதவுகிறது. மேலும், இது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. கருப்பு மிளகு உட்கொள்வது ஹார்மோன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. இது ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்க
நெல்லிக்காயில் உள்ள அடாப்டோஜெனிக் பண்புகள் மன அழுத்தத்தை மிகவும் திறம்பட சமாளிக்க உதவுகிறது. இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலின் அளவைக் குறைத்து, மனதை அமைதியாகவும், நிம்மதியாகவும் வைக்க உதவுகிறது. அதே போல, கருப்பு மிளகு உட்கொள்ளல் மகிழ்ச்சி ஹார்மோன்கள் எனப்படும் செரோடோனின் மற்றும் டோபமைன் உற்பத்தியைத் தூண்டி, நேர்மறையான மனநிலையை ஊக்குவிக்கிறது. இது பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் குறைக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Amla chia seeds water: தினமும் ஆம்லா ஜூஸ் உடன் சியா விதை தண்ணீர் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?
Image Source: Freepik