Is it okay to drink amla juice at night: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சில ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், நட்ஸ், விதைகள் போன்றவை உதவக்கூடும். அவ்வாறே உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பழங்களில் நெல்லிக்காயும் அடங்கும். ஆம்லா என்றழைக்கப்படும் இந்திய நெல்லிக்காய் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்படுகிறது.
இது பல ஆண்டுகளாகவே ஆயுர்வேதத்தில் பிரதானமாக இருந்து வருகிறது. ஆனால், இதை எந்த நேரத்தில் உட்கொள்வது என்பது சந்தேகத்தைத் தரக்கூடிய ஒன்றாகும். பெரும்பாலும் நெல்லிக்காயை பகல் நேரத்திலேயே அதிகம் சாப்பிடுவோம். அதே சமயம், இரவு நேரத்தில் உட்கொள்ளக்கூடாது எனவும் கூறுவர். எனினும், நெல்லிக்காய் சாற்றை இரவு நேரத்தில் அருந்துவது சில சமயங்களில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதில் இரவில் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தேன் நெல்லிக்காய்! எப்படி சாப்பிடுவது?
இரவில் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
எடை மேலாண்மைக்கு
எடையை நிர்வகிக்க விரும்புபவர்கள், ஆம்லா சாற்றை இரவு வழக்கத்தில் சேர்ப்பது ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும். ஆய்வு ஒன்றில், நெல்லிக்காய் சாறு அருந்துவது உடல் எடை மற்றும் உடல் கொழுப்பின் சதவீதத்தைக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆம்லாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. குறிப்பாக, மாலைப் பொழுதில் நெல்லிக்காய் சாற்றை சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
இரவு நேரத்தில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உயர் நார்ச்சத்துக்காக நன்கு அறியப்படும் ஒன்றாகும். இவை மலச்சிக்கலைத் தடுக்கவும் குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. எனவே படுக்கைக்கு முன் நெல்லிக்காய் சாறு அருந்துவது அஜீரணம் மற்றும் அசிடிட்டியைப் போக்க உதவுகிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
ஆம்லாவில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இவை உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வைட்டமின் சி சத்துக்கள் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்தி, நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இந்நிலையில் இரவில் நெல்லிக்காய் சாறு அருந்துவது உடலுக்கு நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை ஆதரிக்கத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற உதவுகிறது. குறிப்பாக, காய்ச்சல் அல்லது அதிக மன அழுத்தத்தின் போது, நோய்த்தொற்றுகளை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட நெல்லிக்காய் சாற்றை அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla Juice Benefits: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…
தூக்கத்தை மேம்படுத்த
ஆம்லா சாறு அருந்துவது சிறந்த தூக்க தரத்திற்கு பங்களிக்கிறது. மேலும், இதில் உள்ள அமைதியான பண்புகள் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பெரும்பாலும் நல்ல இரவு தூக்கத்திற்கு பதட்டம், மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆய்வு ஒன்றில், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அளவைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் நல்ல தூக்கத்தை மேம்படுத்தலாம். எனவே படுக்கைக்கு முன்னதாக நெல்லிக்காய் சாறு அருந்துவது தளர்வை ஊக்குவிக்கவும், விரைவாக தூங்கவும் வழிவகுக்கிறது.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த
இரவில் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் சரும ஆரோக்கியம் கணிசமாக மேம்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்கு இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களே காரணமாகும். இவை ஃப்ரீ ரேடிக்கல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஏனெனில் இது முன்கூட்டிய வயதான மற்றும் சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். நெல்லிக்காயைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு ஆம்லாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
நெல்லிக்காய் சாற்றை எப்படி உட்கொள்வது?
அளவு - முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரில் நீர்த்த ஒரு தேக்கரண்டி போன்ற சிறிய அளவுடன் நெல்லிக்காய் சாற்றைத் தொடங்கலாம். உடல் ஏற்றுக் கொண்ட பிறகு, படிப்படியாக அதிகரித்துக் கொள்ளலாம்.
எப்போது அருந்துவது - ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்சுவதற்கு அனுமதிக்க இரவில் குறைந்து 30 நிமிடங்களுக்கு முன் நெல்லிக்காய் சாற்றைக் குடிக்கலாம்.
சேர்க்க வேண்டியவை - கூடுதல் சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக நெல்லிக்காய் சாற்றை இஞ்சி அல்லது தேனுடன் கலந்து அருந்தலாம்.
இவ்வாறு நெல்லிக்காய் சாற்றை அருந்துவதன் மூலம் ஏராளமான உடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். எனினும், ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப இரவில் நெல்லிக்காய் சாற்றை அருந்துவதன் மூலம் சில உடல்நல பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Weight Loss: உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் போதும்.. ஆனா இப்படி சாப்பிடுங்க!
Image Source: Freepik