கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டைத் தணிக்க இந்த ஒரு மேஜிக் ட்ரிங் குடிங்க

can we drink gooseberry juice in summer: கோடைக்காலத்தில் ஆம்லா சாறு அருந்துவது உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இதற்கு இதில் உள்ள பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களே காரணமாகும். இதில் கோடை வெப்பத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்கவும், பல்வேறு நன்மைகளைப் பெறவும் ஆம்லா சாறு தரும் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டைத் தணிக்க இந்த ஒரு மேஜிக் ட்ரிங் குடிங்க

Health benefits of drinking amla juice during summer: கோடைக்காலம் அனைவருக்கும் மிகவும் அசௌகரியத்தைத் தரக்கூடிய காலமாகும். அதிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. பொதுவாக இந்த காலகட்டத்திலேயே உடலுக்கு நீரிழப்பு, சோர்வு மற்றும் வெப்பம் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த அதிகரித்து வரும் வெப்பநிலையானது நம் உடலைப் பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடும். இதிலிருந்து விடுபட பலரும் அதிக சர்க்கரை கலந்த பானங்களையே அதிகம் குடிக்க விரும்புகின்றனர். எனினும், இந்த குளிர்பானங்களுக்குப் பதிலாக வீட்டிலேயே தயார் செய்த சில ஆரோக்கியமான பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறையில், குறிப்பாக உணவில் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியமாகும். அதிகரித்து வரும் வெப்பநிலை நம் உடலை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடும் என்பதால், நீரேற்றத்தைத் தரும், புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சத்தான உணவுகள் மற்றும் பானங்களை நமது அன்றாட வழக்கத்தில் இணைக்கலாம். கோடைக்காலத்தில் உடலின் வெப்பநிலையைத் தணிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய மற்றும் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய ஒரு பானம் நெல்லிக்காய் சாறு ஆகும். கோடைக்காலத்தில் நெல்லிக்காய் சாற்றை ஏன் உட்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Nellikai Rasam: மணக்க மணக்க நெல்லிக்காய் ரசம்.. சளி இருமலை விரட்டும் அற்புத மருந்து.! இப்படி செஞ்சி பாருங்க..

கோடைக்காலத்தில் ஆம்லா சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

நீரிழப்பைத் தடுக்க

ஆம்லா சாற்றில் அதிகளவிலான நீர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், இதன் இயற்கை உப்புகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது தவிர, கோடை வெப்பத்தில் உடல் இழந்த தாதுக்களை மீட்டெடுக்கவும் இந்த பானம் உதவும். இதன் குளிர்ச்சியூட்டும் பண்புகள் வெப்பமான கோடை நாட்களில் உடலை அமைதிப்படுத்த உதவுகிறது. மேலும், இது வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

செரிமானத்தை ஆதரிக்க

கோடை காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக செரிமான பிரச்சினைகள் அடங்கும். ஏனெனில், அதிகப்படியான வெப்பம் செரிமானத்தைத் தொந்தரவு செய்து வீக்கம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். இந்நிலையில் ஆம்லா சாறு அருந்துவது செரிமானம் தொடர்பான பிரச்சினைகளைப் போக்கவும், சீரான செரிமானத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.

ஆற்றல் அளவை மேம்படுத்த

கோடை வெப்பத்தில் பெரும்பாலும் நீரிழப்பு ஏற்பட்டு தொடர்ந்து சோர்வை அனுபவிப்பர். இதற்கு நெல்லிக்காய் சாறு ஒரு சிறந்த தேர்வாகும். இந்த பானம் ஒரு சரியான ஆற்றல் ஊக்கியாக அமைகிறது. மேலும் ஆம்லா சாற்றை அருந்துவது உடலுக்கு இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. இது கோடைகால செயல்பாடுகளை அனுபவிக்க அனுமதிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு

ஆம்லா சாறு வைட்டமின் சி ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இதை அருந்துவது உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதன் வலுவான நோயெதிர்ப்பு பண்புகளின் காரணமாக, உடலுக்கு வெப்பமான மாதங்களில் ஏற்படக்கூடிய பல்வேறு தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஆம்லா சாற்றில் இந்த ஒரு பொருளைச் சேர்த்து வெறும் வயிற்றில் குடிச்சி பாருங்க! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

சருமத்தைப் பாதுகாப்பதற்கு

கோடை காலத்தில் சருமம் சூரிய வெளிச்சத்தின் காரணமாக பெரிதும் பாதிக்கப்படலாம். மேலும், நீரிழப்புக்கும் வழிவகுக்கிறது. இந்நிலையில் ஆம்லா சாறு ஒரு சிறந்த பானமாக அமைகிறது. இதில் அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை கோடைக்காலத்தில் ஏற்படும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும், இந்த பருவம் முழுவதும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

கோடை வெப்பம் மிகவும் தீவிரமாக இருப்பதால் வரவிருக்கும் காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகும். இதற்கு கவனமாக உணவு தேர்வுகளை மேற்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் நெல்லிக்காய் சாறு தவிர, உங்கள் உடலை ஊட்டமளித்து உற்சாகப்படுத்த, நீரேற்றம் தரும் உணவுகள் மற்றும் லேசான உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், போதுமான தண்ணீர் உட்கொள்ளல் மற்றும் பிற புத்துணர்ச்சியூட்டும் கோடை பானங்களை உட்கொள்வதன் மூலம் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: உலர்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவது பல நன்மைகளை அள்ளித் தரும்.!

Image Source: Freepik

Read Next

Vitamin D குறைபாட்டை வேகமாக குணமாக்க இந்த பானங்களை குடிக்கவும்..

Disclaimer