Health benefits of taking amla moringa shots daily: அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள், மூலிகைகள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. அவ்வாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஆம்லா என்றழைக்கப்படும் இந்திய நெல்லிக்காய் மற்றும் முருங்கைக்காய் இரண்டு சூப்பர்ஃபுட்களும் பெரிதும் பங்களிக்கிறது. இவை இரண்டுமே பாரம்பரிய இந்திய மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படக்கூடியதாகும். இவை இரண்டுமே தனித்தனியாக உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் வகையில் அமைகிறது.
இதில் நெல்லிக்காய் ஆனது வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்ததாகும். அதே சமயம் முருங்கைக்காயில் புரதம், தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளது. இதை தினசரி மருந்தாக வழக்கமாக சாறு அல்லது அடர் வடிவத்தில் எடுத்துக் கொள்ளும் போது, அவை ஒரு சக்திவாய்ந்த இயற்கை சப்ளிமெண்ட்டை வழங்குகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஆம்லா முருங்கை ஷாட்களை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கொளுத்தும் வெயிலில் உடல் சூட்டைத் தணிக்க இந்த ஒரு மேஜிக் ட்ரிங் குடிங்க
தினமும் ஆம்லா முருங்கை ஷாட் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
செரிமானத்தை மேம்படுத்துவதற்கு
நெல்லிக்காய் உட்கொள்வது செரிமான நொதிகளின் சுரப்பை ஊக்குவிக்கிறது. மேலும் இது வயிற்று அமிலத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. அதே சமயம், முருங்கையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால், இது குடல் ஒழுங்குமுறை மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. தினசரி உட்கொள்ளலின் மூலம் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
முக்கிய கட்டுரைகள்
வீக்கத்தைக் குறைப்பதற்கு
முருங்கை மற்றும் நெல்லிக்காய் இரண்டுமே சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இவற்றை ஒன்றாக இணைத்து சாப்பிடுவது நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய், மூட்டு வலி மற்றும் சில புற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
சிறந்த நச்சு நீக்கியாக
ஆம்லாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கவும், சுகளை வெளியேற்றவும் உதவுகிறது. அதே சமயத்தில் முருங்கை ஒரு இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. குறிப்பாக, சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இதைத் தொடர்ந்து உட்கொள்வது ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் கன உலோகங்களை அகற்ற உதவுகிறது. இது ஒட்டுமொத்த நச்சு நீக்கத்தை ஊக்குவிக்கிறது.
முடி வளர்ச்சியை அதிகரிக்க
இந்திய நெல்லிக்காயில் அதிகளவிலான இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், இவை முடியின் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது. மேலும் இது பொடுகைக் குறைக்கவும், முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. முருங்கைக்கீரையில் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் போன்ற தாதுக்கள் உள்ளது. இவை உச்சந்தலையை வளர்த்து, அடர்த்தியான மற்றும் வலுவான முடியை ஊக்குவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Amla Juice : நெல்லிக்காய் சாறுடன் இந்த ஒரு பொருளைக் கலந்து குடித்தால் இவ்வளவு நல்லதா?
இதய ஆரோக்கியத்திற்கு
ஆம்லாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் LDL (கெட்ட) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், முருங்கை வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இந்தக் கலவையை உட்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதயம் தொடர்பான நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்த இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. மேலும் முருங்கைக்காயில் வைட்டமின் ஏ, இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவற்றைக் கொண்டிருப்பதால், இது நோயெதிர்ப்பு இன்றியமையாதவையாகும். மேலும் நெல்லிக்காய் மற்றும் முருங்கையின் ஷாட் குடிப்பது உடல் தொற்றுநோய்களை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது.
சரும ஆரோக்கியத்திற்கு
ஆம்லாவில் உள்ள வைட்டமின் சி உடலில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது. முருங்கையில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் குர்செடின் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது காலப்போக்கில் வடுக்கள், முகப்பரு மற்றும் நிறமிகளை அழிக்க உதவுகிறது.
ஆம்லா முருங்கை ஷாட் எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இருப்பினும் வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தாலோ அல்லது கர்ப்பமாக இருந்தாலோ சுகாதார வழங்குநரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு இதை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Amla shots benefits: தினமும் வெறும் வயிற்றில் ஆம்லா ஷாட் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Image Source: Freepik