Fri Sep 11, 2026 | 11:45 PM IST

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தேன் நெல்லிக்காய்! எப்படி சாப்பிடுவது?

Benefits of eating honey amla: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். அதன் படி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், விதைகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவையாகும். அதிலும் இரண்டு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்களை ஒன்றிணைத்து உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். அந்த வகையில் நெல்லிக்காய், தேன் இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய வலிமை மிக்க ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியம் மிகுந்தவையாகும்.

இந்திய நெல்லிக்காய் என்றழைக்கப்படும் ஆம்லாவை தேனுடன் சேர்த்து உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். தினமும் காலையில் நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து உட்கொள்வது செரிமான ஆரோக்கியம் உட்பட உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. தேனுடன் நெல்லிக்காய் சேர்ப்பது ஒரு பாரம்பரியமான பழமையான தீர்வாகக் கருதப்படுகிறது. இவை உண்மையிலேயே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் தேனில் ஊறவைத்த ஆம்லாவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை இருக்கா?

நெல்லிக்காயை தேனில் ஊறவைத்து உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

எடை மேலாண்மைக்கு

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் ஆனது எடை மேலாண்மைக்கு சிறந்த தேர்வாகும். ஆம்லா ஆனது குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இது வயிறு நிறைந்த முழுமை உணர்வைத் தருகிறது. இதன் மூலம் அதிகப்படியான உணவைக் குறைக்க உதவுகிறது. அதே போல, தேனை மிதமான அளவில் பயன்படுத்தும் போது உணவுகள் மற்றும் பானங்களை இனிமையாக்க சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளுக்கு ஆரோக்கியமான மாற்றாக அமைகிறது. இது மறைமுகமாக எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்த

நெல்லிக்காய் உட்கொள்வது அதன் செரிமான பண்புகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இது சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதறுகிறது. இதை தேனுடன் சேர்த்து உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்திற்கான நன்மைகளைத் தருகிறது. இதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளைப் போக்கலாம். இந்த இயற்கையான கலவையானது ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

தேன் மற்றும் நெல்லிக்காய் கலவையானது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. இதில் ஆம்லாவில் உள்ள கலவைகள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. கூடுதலாக, தேனை மிதமான அளவில் எடுத்துக் கொள்வது இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவை இரண்டையும் சேர்த்து உட்கொள்வது இதய பாதிப்பைத் தவிர்க்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை உட்கொள்வதன் ஆரோக்கிய நன்மைகளில் ஒன்றாக அதன் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகும். ஆம்லாவில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் நன்கு அறியப்பட்ட ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். மேலும் தேனில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் ஆம்லாவை இணைப்பது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits: முழு நெல்லிக்காயை இப்படி சாப்பிட்டால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்!

சரும ஆரோக்கியத்திற்கு

தேன், நெல்லிக்காய் இரண்டுமே சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதற்கு ஆம்லாவில் உயர் வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதே காரணமாகும். இவை சரும ஆரோக்கியத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவை இளமை மற்றும் ஒளிரும் சருமத்தைத் தருகிறது. அதே போல, தேனில் உள்ள இயற்கையான ஈரப்பதமூட்டும் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் சருமத்தின் பொலிவை மேம்படுத்தவும், பல்வேறு சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

சுவாச ஆரோக்கியத்திற்கு

ஆம்லாவில் நிறைந்துள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஆனது தேனில் உள்ள இனிமையான விளைவுகளுடன் இணைந்து சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை சளி, இருமல் மற்றும் ஆஸ்துமாவின் அறிகுறிகள் போன்ற சுவாச பிரச்சனைகளை தணிக்கவும், நிவாரணம் அளிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

எப்படி உட்கொள்வது?

இது போன்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் தேன் நெல்லிக்காயைப் பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். நெல்லிக்காயைப் பொடி செய்து தேனுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தினமும் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். எனினும், வேறு ஏதேனும் நோய் அல்லது உடல்நலப் பிரச்சனைகள் இருப்பின் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரை அணுகி பயன்பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Murabba Benefits: தேனில் ஊறவைத்த நெல்லிக்காயில் இத்தனை நன்மைகளா?

Image Source: Freepik

Read Next

வறுத்த அல்லது ஊறவைத்த கொண்டைக்கடலை… எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content