Amla pickle benefits: இந்த குளிருல உடல் சூடாக மட்டுமல்ல, ஹெல்த்தியாவும் இருக்க இந்த ஊறுகாயை சாப்பிடுங்க

Benefits of pickled amla: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு வழிகளில் ஆம்லா நன்மை பயக்கும். குறிப்பாக, குளிர்காலத்தில் உடலின் பல்வேறு பிரச்சனைகளைப் போக்குவதற்கு ஆம்லா உதவுகிறது. ஆம்லாவை நம் அன்றாட உணவில் இதில் குளிர்ந்த காலநிலையில் ஆம்லா ஊறுகாய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Amla pickle benefits: இந்த குளிருல உடல் சூடாக மட்டுமல்ல, ஹெல்த்தியாவும் இருக்க இந்த ஊறுகாயை சாப்பிடுங்க

Is amla pickle good for health: உடலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள நாம் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். குறிப்பாக, குளிர்காலம் வந்துவிட்டாலே, பல்வேறு நோய்த்தொற்றுக்களும் அதிகரிக்கும் காலமாக அமைகிறது. இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாகவே காணப்படும். இதனால் நோய்த்தொற்றுக்களின் தாக்குதலும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், உடலை ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் படி, உடலை ஆரோக்கியமாக வைக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆம்லா முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல நூற்றாண்டுகளாகவே, இந்திய குடும்பங்களில் பிரதானமாக இருக்கும் சூப்பர்ஃபுட் ஆகும். இது ஒரு கசப்பான, சுவையான மற்றும் சத்தான உணவாக இருப்பதுடன், இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் ஆம்லா உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: வீட்டிலேயே மணக்க மணக்க சுவையான ஆம்லா துவையல் ரெசிபியை இப்படி செஞ்சி பாருங்க!

ஆம்லா ஏன் மிகவும் நல்லது?

ஆம்லா ஆனது இந்திய நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய பழமாகும். இதில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இன்னும் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இதில் ஏராளமான ஆரோக்கிய பண்புகள் நிறைந்துள்ளதால், இது ஆயுர்வேதத்தில் மருத்துவ குணங்களுக்குப் பெயர் பெற்றதாகும்.

மேலும், ஆம்லா உட்கொள்ளல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சரும ஆரோக்கியம் மற்றும் முடி ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. ஆம்லாவை நம் அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம். அதன் படி, குளிர்காலத்தில் ஆம்லா ஊறுகாய் உட்கொள்வதால் என்ன வகையான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.

ஆம்லா ஊறுகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஆம்லா இயற்கையாகவே செரிமான சக்தி நிறைந்ததாகும். இதை உப்பு மற்றும் பிற மசாலாப் பொருள்கள் சேர்த்து செய்யப்பட்ட ஊறுகாயாக எடுத்துக் கொள்வது அதன் செரிமான நன்மைகளை அதிகரிக்கிறது. மேலும் ஊறுகாய் செய்யப்பட்ட நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் குளிர்ந்த காலத்தில் பொதுவான பிரச்சனையாக அமையும் மலச்சிக்கல்லைத் தடுக்கலாம்.

நெல்லிக்காயின் கசப்பான சுவை செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி, ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும், வளர்ச்சிதை மாற்ற மேம்பாட்டிற்கும் உதவுகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Seeds: நெல்லிக்காய் விடுங்க மக்களே! நெல்லிக்காய் விதை நன்மைகள் தெரியுமா?

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

ஆம்லா உட்கொள்ளலின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது அடங்கும். ஆம்லா ஊறுகாயில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது. குளிர்காலத்தில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்படும் போது, ஆம்லா ஊறுகாய் ஒரு பயனுள்ள தடுப்பு நடவடிக்கையாக அமைகிறது.

ஆய்வு ஒன்றில், வைட்டமின் சி பல்வேறு நோயெதிர்ப்பு செயல்பாடுகளைத் தூண்டுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது எனக் கூறப்படுகிறது. எனவே நெல்லிக்காய் ஊறுகாயை வழக்கமாக உட்கொள்வது சுவாசநோய்த்தொற்றுக்கள், காய்ச்சல், மற்றும் தொண்டை புண் போன்ற குளிர்கால பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

வீக்கம், வலியைக் குறைப்பதற்கு

குளிர்காலத்தில் அடிக்கடி மூட்டு வலி மற்றும் வீக்கம் அதிகரிக்கலாம். குறிப்பாக, குளிர்ந்த காலநிலையில் நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு அல்லது கீல்வாதம் போன்ற அசௌகரியத்தை அனுபவிப்பவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த உணவாக அமைகிறது. மேலும், ஆம்லாவில் உள்ள பாலிபினால்கள், ஃபிளவனாய்டுகள் போன்றவை வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலியைத் தணிக்கவும் உதவுகிறது.

ஆய்வில், நெல்லிக்காய் குறிப்பிடத்தக்க அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தசை மற்றும் மூட்டு வலிகளைப் போக்க உதவுகிறது. உணவில் நெல்லிக்காய் ஊறுகாய் சேர்ப்பது குளிர்காலத்தில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்திற்கு இயற்கையான நிவாரணத்தைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தேன் நெல்லிக்காய்! எப்படி சாப்பிடுவது?

சரும ஆரோக்கியத்திற்கு

பொதுவாக குளிர்ந்த காலநிலையில், பலரும் சரும வறட்சி பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அந்த வகையில், ஆம்லா ஊறுகாய் அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் நிறைந்ததால், சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வைட்டமின் சி ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்பதால், கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது சருமத்தை உறுதியாகவும், மீள்தன்மையுடனும் வைத்திருக்க உதவும் புரதமாகும்.

இது பொதுவாக குளிர்காலத்தில் ஏற்படும் சுருக்கங்கள், உலர்ந்த திட்டுகள் மற்றும் தோல் தொடர்பான பிற பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. ஆம்லாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃப்ரீரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது சரும செல்களை சேதப்படுத்தலாம் மற்றும் வயதாவதை துரிதப்படுத்தலாம். ஆம்லா நெல்லிக்காய் உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

முடியை பலப்படுத்துவதற்கு

ஆம்லா நெல்லிக்காய் உட்கொள்ளல் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறனுக்காக நன்கு அறியப்படுகிறது. இந்த ஆம்லா ஊறுகாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வலுவான, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். இதை மேற்பூச்சாகப் பயன்படுத்துவது முடி உதிர்வதைத் தடுக்கவும், உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

நெல்லிக்காய் ஊறுகாய் உட்கொள்வது முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இது வலுவான மற்றும் பளபளப்பான முடிக்கு வழிவகுக்கிறது. இது முன்கூட்டிய நரை, பொடுகு, வறட்சி மற்றும் குளிர் காலநிலையால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் ஆம்லா நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Juice Benefits: தினமும் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Chettinad Fish Fry: காரசாரமான செட்டிநாடு ஸ்டைல் மீன் வறுவல் செய்யலாமா?

Disclaimer