Health benefits of eating pepper powder in winter: அன்றாட உணவில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள், மூலிகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக, குளிர்ந்த காலநிலையில் நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும் விதமாக உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. இந்த காலத்தில் சூடான மற்றும் வசதியான உணவுகளையே அதிகம் விரும்புவர். இந்த சுவை உணர்வுகள் நம்மை மகிழ்விப்பது மட்டுமல்லாமல், உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
சிலர், இந்த பருவகாலத்தில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன், இஞ்சி மற்றும் மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்ப்பதில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இதில் பெரும்பாலும் கருப்பு மிளகு புறக்கணிக்கப்படும் ஒன்றாக அமைகிறது. கருப்பு மிளகு ஆனது அதன் மருத்துவப் பயன்கள் மற்றும் தனித்துவமான சுவை காரணமாக பண்டைய காலங்களில் கருப்பு தங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பாக, குளிர்ந்த காலத்தில் ஏற்படும் குளிர் மற்றும் இருமல் தொடர்பான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இதில் குளிர்காலத்தில் கருப்பு மிளகு எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Peppermint for period cramps: மாதவிடாய் வலியை நொடியில் குணமாக்கும் பெப்பர்மின்ட்! எப்படி யூஸ் பண்ணலாம்
குளிர்காலத்தில் உணவில் கருப்பு மிளகு பவுடர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடையிழப்பை ஆதரிக்க
கருப்பு மிளகு உட்கொள்வது உடல் எடையைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் இதில் பைபர்ன் உள்ளது. இந்த பைபரின் ஆனது புதிய கொழுப்பு செல்கள் உற்பத்தியைத் தடுக்கவும், உடல் பருமனைத் தடுக்கவும் உதவுகிறது. இவ்வாறு கொழுப்பு செல் உற்பத்தியைத் தடுப்பது மற்றும் உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை அதிகரிப்பது போன்றவை குளிர்காலத்தில் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது. இது மேம்பட்ட செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
மலச்சிக்கலைத் தடுப்பதற்கு
கருப்பு மிளகு உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கலைத் தவிர்ப்பதற்கும் உதவக்கூடிய ஒரு சிறந்த மசாலாவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, குளிர்காலத்தில் இது சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில், இந்த கால கட்டத்திலேயே பலரும் வாயு, வீக்கம் போன்றவற்றால் அவதியுறுகின்றனர். இதற்கு கருப்பு மிளகு உட்கொள்வது உணவை உடைப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது.
வயிற்றை சுத்தப்படுத்துவதற்கு
கருப்பு மிளகு உட்கொள்ளல் நச்சுத்தன்மைக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது. இதில் உள்ள பைபரின் ஆனது ஒரு சிறந்த உட்புற சுத்தப்படுத்தியாகச் செயல்படுகிறது. உணவில் கருப்பு மிளகைச் சேர்த்துக் கொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது நச்சுகளை நீக்கும் நொதிகளை ஊக்குவிக்க உதவுவதுடன், டிஎன்ஏ சேதத்தையும் குறைக்கிறது. மேலும் கருப்பு மிளகில் உள்ள கேப்சைசின் போன்ற அழற்சி எதிர்ப்பு கொண்ட வேதிப்பொருள் மூட்டு வலி மற்றும் விறைப்புத் தன்மையைப் போக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Peppermint for sore throat: தொண்டை வலி காணாமல் போக இந்த காஃபின் இல்லாத டீ குடிங்க
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
கருப்பு மிளகில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலின் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த மசாலாவில் ஆண்டிமைக்ரோபியல் குணங்கள் உள்ளது. இவை உடலில் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது.
புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க
கருமிளகை உட்கொள்வது புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள குறிப்பிடத்தக்க ஆல்கலாய்டு மூலப்பொருளான பைபரின் ஆனது பல வீரியம் மிக்க நோய்களில் கட்டி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கருப்பு மிளகில் கரோட்டினாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவு உள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், வயதான எதிர்ப்புப் பண்புகளையும் கொண்டுள்ளது. மேலும் இது புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
குளிர்காலத்தில் அன்றாட உணவில் கருப்பு மிளகு சேர்த்து உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Black Pepper: குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் கருப்பு மிளகு சாப்பிடலாமா?
Image Source: Freepik