Mushroom coffee: மஸ்ரூம் காஃபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Health benefits of drinking mushroom coffee: காபி என்பது காபிக் கொட்டை மட்டுமல்லாமல் மற்ற சில பொருள்களுடனும் கலந்து தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு காபியில் காளான்களைத் தூள் வடிவில் பயன்படுத்தப்படலாம். இதில் காளான் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Mushroom coffee: மஸ்ரூம் காஃபி குடிப்பதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

Is drinking mushroom tea good for you: நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்ததும் காபி, டீ மற்றும் பால் போன்ற பானங்களையே விரும்பி அருந்துவர். அவ்வாறு அன்றாடம் எடுத்துக் கொள்ளும் காபியானது காஃபினைத் தவிர மற்ற சில பொருள்களுடன் கலந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. காபியில் தேங்காய் பால், வெண்ணெய், எலுமிச்சை, நெய் போன்றவையும் சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இந்த பொருள்களைத் தனித்தனியே அவரவர்களுக்கு விருப்பமான வகையில் சேர்த்து காபியைத் தயார் செய்யலாம்.

அதன் படி, மற்றொரு தனித்துவமான விருப்பமாக மருத்துவ காளான்கள் அமைகிறது. இதை காபியுடன் இணைப்பது பல்வேறு நன்மைகளைத் தருகிறது. காளான் காபி என்றழைக்கப்படும் இந்த பானம் உடல் எடையை குறைக்கவும், ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தவும் மற்றும் தளர்வை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. காளான் காபி என்பது காளான்களை நேரடியாக பயன்படுத்துவது அல்ல. இந்த வகை காபியைத் தயார் செய்ய, பொதுவாக மருத்துவ காளான்கள் தூள் வடிவில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cardamom Coffee: காபியில் ஒரு ஏலக்காயை தட்டிப்போட்டு குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?

காளான் காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காளான் காபி என்பது காபிக் கொட்டை மற்றும் மருத்துவ காளான்களின் பவுடர் போன்றவற்றின் கலவையாகும். இதில் காளான் காபி (Mushroom Coffee) குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

ஆற்றல் அளவை அதிகரிக்க

காளான் காபியில் கார்டிசெப்ஸ் இருந்தால், அது உடலில் ஆக்ஸிஜன் பயன்பாட்டை மேம்படுத்தி ஆற்றல் மட்டங்களை மேம்படுத்துகிறது. ஆய்வு ஒன்றில் சோர்வு மற்றும் பலவீனத்திற்கு கார்டிசெப்ஸ் ஒரு சிறந்த தீர்வாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பங்கேற்பாளர்களின் ஆற்றலை அதிகரிக்க உதவியதாகக் கூறப்படுகிறது. மேலும், காபியில் காஃபினும் உள்ளது. இது மைய நரம்பு மண்டல தூண்டுதலாகும். இவை உடல் சோர்வை எதிர்த்துப் போராடவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.

கவலையைக் குறைக்க

சில காளான்கள் தளர்வை ஊக்குவிக்கவும், பதட்டத்தை குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆராய்ச்சி ஒன்றில் தினசரி காபி நுகர்வு கவலையின் அபாயத்துடன் தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டது. ஆனால், ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஆய்வில் காளான் பவுடரைப் பயன்படுத்துவது சோர்வு மற்றும் பதட்டத்தைக் கணிசமாகக் குறைத்ததாகக் கூறப்படுகிறது.

அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க

காளான்களை அன்றாட உணவில் சேர்ப்பது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்பட்டது. 2024 ஆம் ஆண்டு நரம்பியல் மற்றும் உயிரியல் நடத்தை விமர்சனங்களில் வெளியிடப்பட்ட பகுப்பாய்வு ஒன்றில், நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் முதியவர்களின் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த காளான்கள் உதவுவதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்டது. காபியின் நுகர்வு அறிவாற்றல் வீழ்ச்சியைத் தடுக்க உதவுவதாகக் கூறப்படுகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கு

சில காளான் வகைகளில் அதிகளவிலான பீட்டா-குளுக்கன்கள் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்துகளாகும். இந்த பீட்டா குளுக்கன்கள் உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களை செயல்படுத்தி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் உகந்த ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric coffee benefits: மஞ்சள் கலந்த காபி குடிப்பதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த

மருத்துவ காளான்களில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆராய்ச்சி ஒன்றில், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட காளான்களில் சாகாவும் உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக நாள்பட்ட அழற்சியானது இதய நோய், மற்றும் மூட்டுவலி போன்ற பல்வேறு சுகாதார நிலைமைகளுடன் தொடர்புடைய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இந்நிலையில் காளான் காபி அருந்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

சிறந்த தூக்கத்திற்கு

வழக்கமான காபியுடன் ஒப்பிடுகையில், இந்த வகை காபியானது குறைந்த காஃபினைக் கொண்டதாகும். இந்த பானம் காபி மற்றும் காளான் தூள் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். எனவே காஃபின் வழக்கமான காபியில் இருப்பதை விட இதில் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக, மாலையில் குறைந்த அளவு காஃபின் உட்கொள்ளல் நல்ல இரவு தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

காளான் காபி செய்யும் முறை

மஸ்ரூம் காபியானது வழக்கமான பிளேக் காபி அல்லது பாலுடன் அதே முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பானமாகும்.

  • முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு கப்பில் ஊற்ற வேண்டும்.
  • இதில் 1:1 என்ற விகிதத்தில் காஃபின் மற்றும் காளான் பவுடரைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இந்தக் கலவையில் வரும் மண்ணின் சுவை பிடிக்கவில்லை எனில், காலை காபியில் சிறிது பால் சேர்த்து அருந்தலாம்.

குறிப்பு

காளான் காபி அருந்துவது இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனினும், வேறு சில பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த வகை காபியை எடுத்துக் கொள்ளும் முன்பாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Mushroom Coffee: சர்க்கரை நோயால் அவதியா? ஒரே மாதத்தில் குணமாக தினமும் இந்த டீயை குடியுங்க!

Image Source: Freepik

Read Next

Suraikaai Payasam: பால் பாயாசம் சாப்பிட்டிருப்பீங்க... எப்போதாவது சுரைக்காய் பாயாசம் சாப்பிட்டிருக்கீர்களா?

Disclaimer