Mushroom Coffee Benefits in Diabetes: நீரிழிவு நோய் என்பது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் ஒரு நோயாகும். சர்க்கரை நோயாளியின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளை சரியாக கவனிக்கவில்லை என்றால் பிரச்சினை அதிகரிக்கும். எனவே தான், சர்க்கரை நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், அதாவது குறைந்த சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இந்த நோயில் இரத்த சர்க்கரை அதிகரிப்பதால், இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. இருப்பினும், நீரிழிவு நோயாளிகள் டீ மற்றும் காஃபி போன்றவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு காளான் காஃபி மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் காளான் காஃபி சாப்பிடுவதன் நன்மைகள் மற்றும் முறைகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Barley Water: சர்க்கரை அளவை சட்டென குறைக்க பார்லி தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்க!
நீரிழிவு நோய்க்கு காளான் காஃபி நல்லதா?

காளான் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் உடலை ஆரோக்கியமாகவும், பல நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீங்கள் சாதாரண காஃபிக்கு பதிலாக காளான் காஃபி குடிக்கலாம்.
ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி.திரிபாதி இது குறித்து கூறுகையில், “காளான் ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இதில், உள்ள வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Belly Fat: தொப்பை இருந்தால் சர்க்கரை நோய் வருமாம்.. தடுப்பு முறைகளை தெரிந்து கொள்ளுங்க!
நீரிழிவு நோயாளிகள் காளான் காஃபி குடிப்பது சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையையும் பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து, செலினியம், பொட்டாசியம், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள் காளானில் காணப்படுகின்றன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் கூடுதல் கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது. இது தவிர, 90 சதவீதம் நீர்சத்து காளானில் உள்ளது, இது கலோரிகளை கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது”.
நீரிழிவு நோயாளிகள் காளான் காஃபியை எப்படி சாப்பிடணும்?

காஃபி தூள் தவிர, காளான் தூள் காளான் காஃபி தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. வீட்டிலேயே எளிதாக செய்யலாம். காளான் காஃபியில் சர்க்கரைக்குப் பதிலாக தேன் சேர்க்கலாம். இது தவிர, இதில் இலவங்கப்பட்டை தூளும் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு நோயில், தினமும் காலையில் ஒரு கப் காளான் காஃபி குடிப்பது உடலுக்கு தனித்துவமான நன்மைகளை வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes Headache Oils: நீரிழிவு நோய் தலைவலிக்கு எந்தெந்த எண்ணெய்களை பயன்படுத்தலாம்?
காளான் காஃபியை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதை உட்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவர் அல்லது நிபுணரை அணுகவும். இது தவிர, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது அல்லது ஓடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.
Pic Courtesy: Freepik