
$
Breakfast For Diabetes Patients: சர்க்கரை நோய் இன்று பெரிதளவு மக்களை பாதிக்கக் கூடிய முற்றிலும் குணப்படுத்த முடியாத ஒன்றாகும். இது இளம் வயதினர்களையும் தாக்கக் கூடியதாக அமைகிறது. இந்த சர்க்கரை நோயானது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஏற்ற இறக்க நிலையாகும். எனவ இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க, அதற்கு ஏற்றாற்போல் உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கையாள்வது அவசியம் ஆகும்.
காலை உணவு
ஒவ்வொருவருக்கும் காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் பெரிதும் கவனத்தில் கொள்ள வேண்டிய உணவு நேரம் காலை நேரம் ஆகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவை நேரம் தவறாமல் எடுத்துக் கொள்வது அவசியமாகும். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலை உணவாக என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்லலாம் என்ற சந்தேகம் எழும். இதில், சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டிய ஆரோக்கியமான காலை உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Hand Symptoms: உங்க கைகளில் இந்த அறிகுறிகள் இருக்கா? இது நீரிழிவு நோயாக இருக்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கான காலை நேர உணவுகள்
ராகி ஊத்தாப்பம்
ஊத்தாப்பம் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு வழக்கமான ஊத்தாப்பத்தை விட, ராகி ஊத்தாப்பம் சிறந்த தேர்வாக அமையும். ஏனெனில் ராகியில் அதிகளவு நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே ராகியுடன் விருப்பமான காய்கறிகளைச் சேர்த்து ஊத்தாப்பம் செய்து சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.

சோயா தோசை
தோசை என்றாலே பெரும்பாலானோர்க்கு விருப்பமானதாக அமையும் ஒன்று. வழக்கமான தோசைக்குப் பதில், சோயா தோசையை எடுத்துக் கொள்வது சிறந்த நன்மைகளைத் தரும். சோயா தோசையில் அதிக புரோட்டீன்கள் மற்றும் குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் உள்ளன. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியம் மிகுந்த காலை உணவாகை அமையும்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetic Foot Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய நீரிழிவு பாத நோய் அறிகுறிகள்
சன்னா சுண்டல்
வெள்ளை நிற சுண்டல் சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புத உணவுப் பொருளாகும். இதில் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளன. எனவே, சர்க்கரை நோயாளிகள் எந்த தயக்கமுமின்றி வெள்ளை சன்னா என்ற வெள்ளை நிற சுண்டலை தங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், இதை ஒரு நாளைக்கு ½ கப்பிற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது பிரச்சனையை உண்டாக்கலாம். காலை நேரத்தில் வெள்ளை சன்னாவை வேக வைத்து, வெங்காயம் சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ளலாம்.

பச்சைப்பயறு தோசை
சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உணவுகளில் பச்சைப்பயறு தோசையும் அடங்கும். இதில் அதிகளவிலான புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் பெரிதும் நன்மை தருகின்றன. எனவே சர்க்கரை நோயாளிகள் பச்சைப் பயறு தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Hyperglycemia Symptoms: ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகளும், சிகிச்சை முறைகளும்
ஓட்ஸ் இட்லி
உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்கள், தற்போது பெரும்பாலும் ஓட்ஸையே விரும்பி எடுத்துக் கொள்கின்றனர். இது சர்க்கரை நோயாளிக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது. காலை உணவில் வழக்கமான இட்லிக்குப் பதிலாக, ஓட்ஸ் மற்றும் சில காய்கறிகளைக் கொண்டு ஓட்ஸ் இட்லி தயாரித்து சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

கோதுமை தோசை
தானிய வகையான கோதுமையில் குறைந்தளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளன. எனவே, இவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது. குறிப்பாக கோதுமையில் தயாரிக்கப்படும் தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களைத் தரும். இந்த தோசைக்கு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து தயாரித்து அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: High Blood Sugar Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ உங்களுக்கு உயர் இரத்த சர்க்கரை வியாதி தான்.
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version