What Are the Best Flour Options for Diabetes: செயலற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கங்களால் பெரும்பாலானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்ற கருத்து மாறி, தற்போது இளைஞர்கள், சிறுவர்கள் கூட நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது என்றாலும், சரியான உணவு பழக்கம் மூலம் கட்டுக்குள் வைக்கலாம்.
நாம் பெரும்பாலும் கோதுமை மாவு சப்பாத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என நினைக்கிறோம். பெரும்பாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு நாம் அதிகமாக கோதுமை ரொட்டி சாப்பிட கொடுப்போம். ஏனென்றால், முழு தானிய மாவு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு அது சிறந்த மாவு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? கோதுமை மாவைப் பயன்படுத்துவது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes management: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் இதை செய்தால் போதும்!!
முழு தானிய மாவில் நார்ச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. எனவே, இவை சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த மாவு எது என்பதை நாங்கள் கூறுகிறோம். இதை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (glycemic index) கொண்டுள்ளது, இது இரத்த சர்க்கரையை படிப்படியாக அதிகரிக்கிறது.
மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:
கம்பு மாவு - 400 கிராம்.
தினை மாவு (ராகி மாவு) - 100 கிராம்.
தண்டுக்கீரை விதை (ராஜ்கிரா மாவு) - 150 கிராம்.
பார்லி மாவு (ஜாவ் அட்டா) - 150 கிராம்.
கொண்டைக்கடலை மாவு - 100 கிராம்.
சோயாபீன் மாவு - 100 கிராம்.
சத்துமாவு செய்முறை:
தினை மாவு, பார்லி மாவு, சோயா மாவு, ராகி மாவு, ராஜ்கிரா மாவு மற்றும் உளுந்து மாவு ஆகியவற்றை ஒன்றாக சல்லடையில் சலிக்கவும். இவை அனைத்தும் நன்றாக கலந்ததும். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும். இந்த மல்டிகிரைன் மாவை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பின்னர் பயன்படுத்தவும்.
இந்த பதிவும் உதவலாம் : Diabetes and Yogurt: சர்க்கரை நோயாளிகள் தயிர் சாப்பிடக்கூடாது; ஏன் தெரியுமா?
இந்த மாவின் நன்மைகள் என்ன?

இந்த பலதானிய மாவு நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான மற்றும் சுவையான விருப்பமாகும். ஒட்டுமொத்தமாக, இந்த சுவையான மாவு இரத்த சர்க்கரையை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. எனவே, இந்த மாவில் நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி செய்து கொடுத்தால் மிகவும் நல்லது.
Pic Courtesy: Freepik