Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Diabetes management: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் இதை செய்தால் போதும்!!

What Is The Best Way To Maintain Blood Sugar Level: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை தொடர்ந்து அதிகரிப்பது நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, இரத்த சர்க்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உங்கள் சில பழக்கவழக்கங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம். இவை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். இந்நிலையில், ஊட்டச்சத்து நிபுணர் இஷிகா குப்தா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையைப் பகிர்ந்துள்ளது. அதில், இரத்த சர்க்கரையை இயற்கையாக கட்டுக்குள் வைக்க சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Diabetes: ஏன் காலையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது? உண்மை இங்கே!

இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க இயற்கை வலிகள்

காலை உணவில் புரோட்டீனை சேர்த்துக் கொள்ளுங்கள்

நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவை சாதாரணமாக வைத்திருக்க உதவும் புரதம் நிறைந்த காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள். புரோட்டீன் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது, இது உணவுக்குப் பிறகு இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது.

கார்போஹைட்ரேட்டுக்கு முன் காய்கறிகளை சாப்பிடுங்கள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க, உணவில் கார்போஹைட்ரேட் எடுக்கும் முன் காய்கறிகளை சாப்பிடுங்கள். நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால், குளுக்கோஸ் மெதுவாக இரத்த ஓட்டத்தில் வெளியிடப்படுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Missed Diabetes Medication Effects: சர்க்கரை நோயாளிகள் மாத்திரை எடுக்காமல் இருந்தா என்ன ஆகும் தெரியுமா?

வழக்கமான உடற்பயிற்சி

தசைகளை அதிகரிக்க, உங்கள் வழக்கமான பயிற்சிகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் தசைகளை அதிகரிக்கும். தசைகளை வலுப்படுத்துவது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சாப்பிட்ட பிறகு நடக்கவும்

செரிமானத்திற்கு உதவ உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடை பயிற்சி செய்யுங்கள். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். உடல் செயல்பாடு, குறிப்பாக சாப்பிட்ட பிறகு, தசைகள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ள உதவுகிறது. இதனால், இரத்த சர்க்கரை அளவை குறைக்கும்.

நன்றாக தூங்குங்கள்

தூக்கமின்மை இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் இன்சுலின் உணர்திறன் ஆகியவற்றில் தலையிடலாம். எனவே, ஒவ்வொரு நாளும் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். போதுமான தூக்கம் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் ஈடுபடும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் இன்சுலின் எதிர்ப்பை தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Puffed Rice For Diabetes: சுகர் இருந்தா பொரி சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா?

உணவுடன் 1 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை உணவுடன் உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும். உங்கள் சாலட்டில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கலாம். இந்த பழக்கங்களை உங்கள் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

Pic Courtesy: Freepik

Read Next

Yoga Mudra for Diabetes: சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும் டாப் 5 யோகா முத்திரைகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content