$
Is Puffed Rice Healthy For Diabetics: இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக நீரிழிவு நோய் உள்ளது. ஏனெனில் இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை சீர்குலைப்பதுடன் அன்றாட வாழ்வைப் பாதிக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உணவு முறையைக் கையாள்வதாகும்.
அந்த வகையில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பொரி சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். பொரி அதிக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த தின்பண்டமாகும். பொரி கலோரிகள், மிகக் குறைந்த கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனினும், நீரிழிவு நோயாளிகள் பொரி எடுத்துக் கொள்வது நல்லதா என்பது குறித்து குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar For Diabetes: சர்க்கரை நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை சாப்பிடுவது நல்லதா?
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு?
நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு முறையில் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது. மேலும் உணவின் கிளைசெமிக் குறியீட்டைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும். உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவைத் தேர்வு செய்ய வேண்டும்.

பொரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
பொரி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
இரத்த அழுத்தக் கட்டுப்பாடு
பொரி உண்பது இரத்த அழுத்த அளவை இயல்பாகவும், பராமரிக்கவும் உதவும் சிறந்த உணவுத் தேர்வாகும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி அளவிலான நபர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிப்பது, நீரிழிவு சிகிச்சையின் முக்கிய பகுதியாகும்.
செரிமானத்தை மேம்படுத்த
பொரி சாப்பிடுவது சிறந்த சிற்றுண்டி தேர்வாகும். இவை வயிறு மற்றும் குடலில் உள்ள உணவுத் துகள்களை உடைக்க உதவக்கூடிய செரிமான தூண்டுதல் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் மூலம் குடல் வழியாக அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவும் செரிமான சாறுகளின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இது வயிற்று வாயுவை அகற்ற உதவுகிறது. இதனுடன் வயிற்றுப்புண், அஜீரணம், வீக்கம் வயிற்றுப்போக்கு, வாயு பிடிப்புகள் போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த பழங்களை சாப்பிடலாம்
எடை இழப்புக்கு உதவ
பொரி சாப்பிடுவது உடல் எடை இழப்புக்கு ஏற்ற உணவாக அமைகிறது. ஏனெனில் பொரியில் குறைந்தளவு கலோரிகள் மற்றும் குறைவான எடையைக் கொண்டிருக்கிறது. உடல் எடை இழப்பு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துவதுடன், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கலாம்.

நீரிழிவு நோயாளிகள் பொரி சாப்பிடலாமா?
- பொரியில் அதிகளவு மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொரி பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனெனில் இவை இரத்த சர்க்கரை அளவை மோசமாக பாதிக்கலாம்.
- அதே சமயம், இனிப்புகள் அல்லது சர்க்கரை கொண்ட உணவுகளுடன் இணைத்த பொரியை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
- நீரிழிவு நோயாளிகள் பொரி சாப்பிடவேக் கூடாது என்பதல்ல. உடல் ஆரோக்கியத்திற்கு பொரி சாப்பிடும் அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிர்மறையாக பாதிப்பதைத் தவிர்க்கலாம்.
- உகந்த ஆரோக்கியத்திற்கு, பொரி எடுத்துக் கொள்வதை 2 முதல் 3 கப் வரை வைத்திருக்கலாம். இது இரத்த சர்க்கரை அளவை கடுமையாக உயர்த்தாது.
- பொரி உட்கொள்ளும் போது மசாலா மற்றும் பிற பொருள்களை மிதமாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதிகளவிலான சோடியம் அளவை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தானதாகும்.
பொரி உட்கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆரோக்கியமானது அல்ல. இது குறைந்த ஊட்டச்சத்து உள்ளடக்கம் மற்றும் அதிகளவு கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனினும் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் பொரி உட்கொள்பவராக இருப்பின் குறைந்தளவு எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Missed Diabetes Medication Effects: சர்க்கரை நோயாளிகள் மாத்திரை எடுக்காமல் இருந்தா என்ன ஆகும் தெரியுமா?
Image Source: Freepik