Health Benefits Of Quinoa For Diabetes: இந்த பதிவும் உதவலாம்: இன்றைய மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக நீரிழிவு நோயும் அமைகிறது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் உள்ளது. நீரிழிவு நோயை நிர்வகிக்க ஆரோக்கியமான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். நீரிழிவு நோயை நிர்வகிக்க சரியான உணவுகளைக் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏனெனில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகள் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கிறது. அந்த வகையில் நீரிழிவு நோயாளிகள் உடல் ஆரோக்கியத்திற்கு குயினோவாவை உட்கொள்ளலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு குயினோவா மிகுந்த நன்மை பயக்கும். குயினோவாவில் உள்ள குறைந்த கிளைசெமிக் குறியீடுகள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. எனினும் சரியான அளவில் சரியான நேரத்தில் குயினோவாவை உட்கொள்வது அவசியமாகும். இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு குயினோவா தரும் நன்மைகள் மற்றும் அதை எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Rajma for Diabetes: நீரிழிவு நோயாளிகள் கிட்னி பீன்ஸ் சாப்பிடலாமா?
நீரிழிவு நோயை நிர்வகிக்க குயினோவா எவ்வாறு உதவுகிறது?
குயினோவா ஆனது தனித்துவமான ஊட்டச்சத்து கலவைக்காக அறியப்பட்ட ஒரு தானியமாகும். இது உயர் இரத்த சர்க்கரை அளவைக் கையாள்வதற்கு சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த
குயினோவா போன்ற நார்ச்சத்து நிறைந்த தானியமானது வகை 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்த தேர்வாகும். ஏனெனில், அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் குயினோவாவை உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்தவும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு
குயினோவா ஆனது ஒப்பீட்டளவில் குறைந்த ஜிஐ அளவீட்டைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது. மேலும், இது சிறந்த கிளைசெமிக் கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது. கூடுதலாக, உணவில் இன்சுலின் ஸ்பைக்கைக் குறைக்க குயினோவா உதவுகிறது.
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த
குயினோவாவில் மெக்னீசியம் என்ற மேக்ரோ-மினரல்கள் நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குளுக்கோஸை திறம்பட பயன்படுத்தி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய்க்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ப்ரட் வகைகள் என்னென்ன தெரியுமா?
உயர்தர புரதம்
குயினோவா ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்களுடன் கணிசமான அளவு புரதங்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்குவதன் மூலம், நார்ச்சத்து போன்ற குறைந்த இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. மேலும், இதில் உள்ள அதிகரித்த் அளவிலான பிளாஸ்மா அமினோ அமிலங்கள், குறிப்பாக லுசின், முழு உடல் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.
உடல் எடையிழப்புக்கு
குயினோவாவில் நிறைந்துள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி, உடலின் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்கிறது. இவை உடல் எடையிழப்புக்கு உதவுகிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணியாக அமையும் உடல் எடை அதிகரிப்பைத் தவிர்க்கலாம்.
நீரிழிவு நோய்க்கு குயினோவாவை எப்படி எடுத்துக் கொள்ளலாம்?
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற முறையில் குயினோவாவை உட்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அதே சமயம், அடிப்படையான முறையில், குயினோவாவைத் தயார் செய்ய, ஒரு கப் குயினோவாவை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை சாலட்டின் ஒரு பகுதியாக சேர்த்து உட்கொள்ளலாம். சாலட்டில் புதிய காய்கறிகள், கீரை அல்லது காலே போன்ற நறுக்கிய இலை கீரைகள், பாதாம், நறுக்கிய கொட்டைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். இது குயினோவாவை உட்கொள்வதற்கான சிறந்த மற்றும் ஆரோக்கியமான வழியாகக் கருதப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: சுகர் லெவல் டக்குனு குறைய இலவங்கப்பட்டையுடன் இந்த ஒரு பொருள் சேர்த்துக்கோங்க!
Image Source: Freepik