Rajma for Diabetes: நீரிழிவு நோயாளிகள் கிட்னி பீன்ஸ் சாப்பிடலாமா?

  • SHARE
  • FOLLOW
Rajma for Diabetes: நீரிழிவு நோயாளிகள் கிட்னி பீன்ஸ் சாப்பிடலாமா?


Is Rajma Good For Diabetic Patient: இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதனால் பலருக்கும் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதில் நீரிழிவு நோயால் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோயானது மருந்து மற்றும் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியாத நோயாகும். ஆனால், நீரிழிவு நோய்க்கு சரியான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களின் உதவியுடன் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

அந்த வகையில், நீரிழிவு நோய்க்கு ராஜ்மா ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் மக்கள் செய்ய முதல் விஷயம் பல்வேறு வகையான உணவுமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. அதன் படி, நீரிழிவு நோய்க்கு கிட்னி பீன்ஸ் ஆரோக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு நிறைந்துள்ளதால், இவை நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும். கூடுதலாக, கிட்னி பீன்ஸில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பியுள்ளது. இவை எளிய கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவுகளை விட சிறந்தவை.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Symptoms: சர்க்கரை நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!

நீரிழிவு நோயாளிகளுக்கு ராஜ்மா தரும் நன்மைகள்

கிட்னி பீன்ஸ் என்றழைக்கப்படும் ராஜ்மா உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் கிட்னி பீன்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதைக் காண்போம்.

அதிக புரதம்

நீரிழிவு நோயாளிகள் போதுமான அளவு புரதத்தை தொடர்ந்து உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், புரத உட்கொள்ளல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில், ராஜ்மா உணவுப் புரதத்தின் கொழுப்பு-இல்லாத மூலமாகும். ஒரு கப் அளவிலான ராஜ்மாவில் தோராயமாக 14 கிராம் அளவிலான் புரதம் நிறைந்துள்ளது. இவ்வாறு ராஜ்மா உட்கொள்வது முழுமை உணர்வைத் தந்து நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரையை சீராக்கலாம்.

குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ்

கிட்னி பீன்ஸ் 29 கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இதில் குறைந்த அளவிலான கிளைசெமிக் இண்டெக்ஸ் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை சர்க்கரையின் வெளியீட்டை மெதுவாக்க உதவுகிறது. இது நீண்ட நேரம் முழுதாக வைத்திருக்கவும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் நீரிழிவு அறிகுறிகளை நிர்வகிக்கவும் உதவுகிறது.

பொட்டாசியம் நிறைந்த கிட்னி பீன்ஸ்

நீரிழிவு நோயாளியாக இருப்பின், அவர்களுக்கு இதய நோய் வரும் அபாயம் கட்டாயம் இருந்திருக்கும். அதன் படி, ராஜ்மாவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. து இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதுடன், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க உதவுகிறது. மேலும், இது பொட்டாசியம் சோடியத்தின் தாக்கத்தைக் குறைக்கிறது. இவை நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Vegetables for Diabetes: சர்க்கரை மளமளவென குறைய இந்த 5 காய்கறிகளை சாப்பிடுங்க!

அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த ராஜ்மா

பீன்ஸில் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளது. அதன் படி, சுமார் 100 கிராம் ராஜ்மா ஆனது 6.4 கிராம் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்களின் கலவையாக உள்ளது. இந்த அளவிலான நார்ச்சத்துக்கள் இரத்த குளுக்கோஸ் அளவை உறுதிப்படுத்த உதவுகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த கிட்னி பீன்ஸ்

கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளில் கிட்னி பீன்ஸ் சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவான-வெளியீட்டு கார்போஹைட்ரேட் என்றும் அழைக்கப்படும நல்ல வகைகளைக் குறிக்கிறது. இது தவிர, ராஜ்மா அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டுகள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் லீன் புரோட்டீன் போன்றவற்றின் வெற்றிகரமான கலவையாகக் கருதப்படுகிறது. இவை அனைத்துமே பசியைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் ராஜ்மா ஆனது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும், வேறு சில பிரச்சனைகளைக் கொண்டிருப்பின், மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Herbal Drinks: கிடுகிடுவென சர்க்கரையைக் குறைக்கும் சூப்பர் மூலிகை பானங்கள் இதோ!

Image Source: Freepik

Read Next

Guava Leaves For Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும் கொய்யா இலை. எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Disclaimer