Ragi for Diabetes: நீரிழிவு நோயாளிகள் ராகியை இப்படி எடுத்துக்கிட்டா சர்க்கரை அளவு டக்குனு குறைஞ்சிடும்

  • SHARE
  • FOLLOW
Ragi for Diabetes: நீரிழிவு நோயாளிகள் ராகியை இப்படி எடுத்துக்கிட்டா சர்க்கரை அளவு டக்குனு குறைஞ்சிடும்


Ragi Benefits For Diabetes: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களால் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் எழுகின்றன. இதில் ஒன்றாக சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒன்றாக நீரிழிவு நோய் அமைகிறது. நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை சரியான முறையில் எடுத்துக் கொண்டாலும் மோசமான உணவுப்பழக்கத்தால் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புண்டு. இதில் சர்க்கரை நோயாளிகள் ராகி எடுத்துக் கொள்ளலாமா என்பது குறித்து காணலாம்.

ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ராகியில் நிறைந்துள்ளன. ராகியில் வைட்டமின் பி1, பி3, பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. மேலும், இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் கரையும் நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், இவை நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

இவை இரத்தத்தில் மிக மெதுவாக குளுக்கோஸை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. சர்க்கரை நோய்க்கு ராகி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது நீரிழிவு நோயை நிர்வகிப்பதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Sesame For Diabetes: இரத்த சர்க்கரையை சட்டென குறைக்க கருப்பு எள் தரும் மகிமைகள்

சர்க்கரை நோயாளிகள் ஏன் ராகி சாப்பிடணும்?

நீரிழிவு நோயாளிகள் ராகி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நலன்களைத் தருகிறது. சர்க்கரை நோயாளிகள் ஏன் ராகி எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்துக் காண்போம்.

அதிக நார்ச்சத்துக்கள்

ராகியில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக கரையக் கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது குளுக்கோஸ் உறிஞ்சுதல் அளவை மெதுவாக்குவதால் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்க உதவுகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

ராகி குறைந்த கிளைசெமிக் குறியீடு அளவைக் கொண்டுள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு ராகி மிகுந்த நன்மை பயக்கும்.

எடை கட்டுப்பாட்டிற்கு

ராகியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் எடையைக் கட்டுப்டுத்த உதவுகிறது. நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணம் உடல் எடை அதிகரிப்பு ஆகும். எனவே உடல் எடையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவைக் குறைக்கலாம். இதன் நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Avoid Foods For Diabetes: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் தொடக் கூடாத உணவுகள்!

டைப் 2 நீரிழிவு நோய்க்கு

ராகியில் மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள், புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இதில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் படிப்படியாக இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோயில் ஏற்படும் இன்சுலின் சுரப்பை எதிர்க்க உதவுகிறது.

ராகியை எப்படி எடுத்துக் கொள்வது?

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ராகியை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அதன் படி காலை உணவாக ராகி கஞ்சி, ராகி தோசை, ராகி அடை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவுகளில் ராகி ரொட்டி, சப்பாத்தி, உப்புமா, முளைகட்டிய ராகி சாலட் போன்ற வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். இரௌ நேரத்தில் ராகி சூப் மற்றும் ராகி கிச்சடியை சாப்பிடலாம்.

இந்த வழிகளில் ராகியை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதுடன், சர்க்கரை நோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனினும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உணவுமுறையைக் கையாள வேண்டியது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Papaya For Diabetes: பப்பாளி சாப்பிட்டா சர்க்கரை அளவு கூடுமா? குறையுமா? என்னனு தெரிஞ்சிக்கோங்க

Image Source: Freepik

Read Next

Avoid Foods For Diabetes: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் தொடக் கூடாத உணவுகள்!

Disclaimer