How To Take Ginger For Diabetes In Tamil: இன்றைய நவீன காலத்தில், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் மக்கள் பல வகையான நோய்களை பெறுவதற்கான ஆபத்து அதிகரித்துள்ளது. இதில் நீரிழிவு பிரச்சனையும் அடங்கும். இன்று சிறிய வயதினரும் நீரிழிவு நோயால் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உணவுமுறையில் செய்யும் சில மாற்றங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றின் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம். மேலும், சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடனும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் நீரிழிவு நோயாளிகளுக்கு இஞ்சி தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இஞ்சி எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Raw Tomato Benefits: பச்சை தக்காளி சாப்பிட்டா சர்க்கரை அளவு குறையுமா?
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் இஞ்சி
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இஞ்சியைப் பயன்படுத்தலாம். இதற்கு இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் மற்றும் ஷோகோல் என்ற இரண்டு மொலக்கூறுகளே காரணமாகும். இவை இரண்டும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது உடலில் இன்சுலினை திறம்பட பயன்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.
மேலும், இஞ்சியில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது நீரிழிவு நோயால் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதன் மூலம் நீரிழிவு நோயுடன் மற்ற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவாக இருக்கும். இஞ்சியை எடுத்துக் கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையைக் குறைத்து இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கிறது.
நீரிழிவு நோய்க்கு இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது எப்படி?
நேரடியாக உட்கொள்வது
இஞ்சியை நீரிழிவு நோயாளிகள் நேரடியாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு சிறு துண்டு இஞ்சியை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதன் சாறை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?
இஞ்சி மிட்டாய்
சர்க்கரை நோயாளிகள் இஞ்சி மிட்டாயை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு முதலில் இஞ்சியை நன்கு அரைக்க வேண்டும். பின் சிறிது தேன் சேர்த்து மிட்டாய் செய்யலாம். இவ்வாறு செய்த இஞ்சி மிட்டாயை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வருவதன் மூலம் நீரிழிவு நோயை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளுடன்
பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் தயார் செய்யும் போது உணவில் இஞ்சியை மசாலாப் பொருள்களாக சேர்த்துக் கொள்வது நன்மை தருகிறது. இது நாம் எடுத்துக் கொள்ளும் உணவை ஆரோக்கியமாக மாற்றுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோய் உட்பட பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
இஞ்சி தேநீர்
இஞ்சி தேநீர் செய்து அருந்துவது நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு ஒரு கப் நீரை கொதிக்க வைக்க வேண்டும். பின் சிறிது இஞ்சியை நசுக்கி கொதிக்கும் நீரில் சேர்த்து பிறகு தேநீரை வடிகட்டலாம். மேலும் இதில் எலுமிச்சை மற்றும் சிறிது தேன் சேர்த்து அருந்தலாம்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வது நீரிழிவு நோய், இதய நோய் என பல்வேறு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. எனினும், இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பின், மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு இஞ்சியை எடுத்துக் கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Moringa For Diabetes: நீரிழிவு நோய்க்கான சூப்பர் ஃபுட் இதோ! எப்படி சாப்பிடணும் தெரியுமா?
Image Source: Freepik