Doctor Verified

Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Sleep Causing Diabetes: உஷார்! தூங்காம இருந்தாலும் சர்க்கரை நோய் வருமாம். எப்படி தெரியுமா?


இரவு வெகுநேரம் வரை விழித்திருப்பதில் ஆரம்பத்தில் எந்த அறிகுறிகளையும் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால், தொடர்ந்து குறைவான நேரத்தில் தூங்குவது சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தலாம். இதில் சரியாக தூங்காமல் இருப்பது எவ்வாறு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பாதிக்கிறது என்பது குறித்து மெடிகோவர் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சச்சின் நலவாடே அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Black Seed For Diabetes: சர்க்கரை அளவு டக்குனு குறைய உதவும் கருஞ்சீரகம். இப்படி எடுத்துக்கோங்க போதும்

தூக்கமின்மையால் நீரிழிவு நோய் ஏற்படுமா

மருத்துவரின் கூற்றுப்படி, சரியாக தூங்காமல் இருப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவைப் பாதிக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இன்சுலின் உதவுகிறது. மேலும், WebMD படி, தூங்கும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இந்த நிலை அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை நிகழலாம். ஆரோக்கியமான நபரில் இன்சுலின் கொழுப்பு, தசை மற்றும் கல்லீரல் செல்கள் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

அதே சமயம் குறைவான நேரத்தில் தூங்குபவர்கள் உடலில் ஹார்மோன்கள் தொந்தரவு இருக்கலாம். இது ஒரு நபரின் இரத்த சர்க்கரையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம். அதேசமயம், முன்னதாகவே ப்ரீ டயாபெட்டிக் நிலையில் உள்ளவர்கள் குறைவாக தூங்கினால், நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Puffed Rice For Diabetes: சுகர் இருந்தா பொரி சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா?

தூக்கமின்மை பிரச்சனையை எப்படி குறைக்கலாம்?

தூக்கமின்மை பிரச்சனை காரணமாக ஏற்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

  • இரவு தூங்கும் நேரம் மற்றும் எழுந்திருக்கும் நேரத்தை வைத்து நிலையான அட்டவணையைப் பின்பற்ற வேண்டும். முதலில் இதைப் பின்பற்றுவதில் சிக்கல் இருக்கலாம். நாளடைவில் பழக்கமாக மாறிவிடும்.
  • தூக்கமின்மை பிரச்சனையை சமாளிப்பதற்கு, தூங்கும் அறையில் மங்கலான விளக்குகளைப் பயன்படுத்தலாம். மேலும் தூங்கும் அறையை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.
  • தூங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக, இயற்கையான முறையில் சுவாசப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இது தூக்கம் வர உதவுகிறது.
  • தூங்கும் அறை வெப்பநிலையை சாதாரணமாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் தூக்கத்தில் தடை ஏற்படாமல் நிம்மதியாகத் தூங்கலாம்.
  • தூங்கும் முன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது இரவில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான உணவு முறையைக் கையாள்வது அவசியமாகும். நீரிழிவு நோயில் சர்க்கரை மற்றும் மாவில் செய்யப்பட்ட பொருள்களைச் சாப்பிட வேண்டாம்.

நீரிழிவு நோயில் சர்க்கரை, மாவில் போன்றவை கலந்த உணவுப் பொருள்கள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, தினந்தோறும் காலையில் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யலாம். இரத்த சர்க்கரை அளவு கணிசமாக அதிகமானால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Morning Drinks: சர்க்கரை டக்குனு குறையணுமா? வெறும் வயிற்றில் இதெல்லாம் குடிங்க

Image Source: Freepik

Read Next

Diabetes In Summer: கோடை காலம் முழுவதும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க இந்த விஷயங்களை இப்போதே செய்யுங்க!

Disclaimer