உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருக்கிறதா? அல்லது ஆரோக்கியமாக சாப்பிட்டு போதுமான ஓய்வு எடுத்தாலும் சோர்வாக உணர்கிறீர்களா? திடீர் எடை இழப்பு? மங்கலான பார்வை? அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுகிறதா?... இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது. ஏனெனில் இவை நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளாகும்.

நீரிழிவு நோய் என்பது இன்று பலரையும் அச்சுறுத்தக்கூடியதாக மாறியுள்ளது. இந்த பரம்பரை நோயில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த நோய் இருந்தால், நீங்கள் விரும்பியதை சாப்பிடுவது கடினம். இரத்த குளுக்கோஸ் அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
காயங்கள் எதுவாக இருந்தாலும்.. எந்த ஒரு தொற்று நோயும் விரைவில் குணமாகாது. நாளுக்கு நாள் கண் பார்வையும் குறையும். இப்படி ஒன்றல்ல.. பலவிதமான பிரச்சனைகள் சர்க்கரை நோயாளிகளை பந்தாடுகிறது. அதனால்தான் இந்த நோய் வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக உணவில் கவனமாக இருப்பது, அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதும் முக்கியமானது.
சர்க்கரை நோய் எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில் இயற்கையாகவே சர்க்கரை அல்லது குளுக்கோஸ் சிறிய அளவில் உள்ளது. இந்த சர்க்கரை நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஆனால் சர்க்கரை அளவு ஒரு குறிப்பிட்ட அளவைக் கடக்கும்போது அது 'ஹைப்பர் கிளைசீமியா'வுக்கு வழிவகுக்கிறது. இது உயர் இரத்த சர்க்கரை என்று அழைக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள உறுப்புகள் சேதமடைகின்றன.
மேலும் பல உடல் பிரச்சனைகள் ஏற்படும். உணவின் அளவை குறைத்து, உடற்பயிற்சி செய்வதோடு, சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான சிகிச்சை பெறாவிட்டால், நிலை கைமீறிப் போகும் அபாயம் உள்ளது.
பின்வரும் அறிகுறிகளால் சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறியலாம்...
சோர்வாக இருப்பது:
போதுமான அளவு ஓய்வு எடுத்து ஆரோக்கியமாக சாப்பிட்டாலும் சோர்வாக உணர்கிறீர்களா?, வேலை செய்யும் போது சலிப்பாக உணர்கிறீர்களா? நிச்சயமாக, இது நீரிழிவு நோய் எச்சரிக்கை. சர்க்கரை நோய் தாக்கினால், அதிகம் வேலை செய்யாவிட்டாலும் விரைவில் சோர்வடைந்து விடுவார்கள்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்:
உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகங்களால் சர்க்கரையை சரியாக வடிகட்ட முடியாது. இதனால் சிறுநீரில் சர்க்கரை சேரும். இதன் விளைவாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.
வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழித்தாலோ அல்லது அந்தரங்க உறுப்புகளில் அரிப்பு ஏற்பட்டாலோ கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும்.
திடீர் எடை குறைவு:
சிலருக்கு சர்க்கரை நோய் வந்தால் திடீரென எடை குறையும். உங்கள் உடல் ஆற்றலுக்காக குளுக்கோஸை திறமையாகப் பயன்படுத்தாததே இதற்குக் காரணம். இதனால் உடலில் கொழுப்பு உருகத் தொடங்குகிறது. இருப்பினும், பெரும்பாலான மக்களுக்கு இந்த அறிகுறி இல்லை. சிலருக்கு நீரழிவு நோயின் போது எடை அதிகரிக்கவும் கூடும்.
கண்பார்வையை பாதிக்கும்:
அதிக சர்க்கரை அளவு கண்பார்வையையும் பாதிக்கும். நீரிழிவு நோய் முன்னேறும்போது, முழுமையான பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. உங்கள் பார்வையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும்.
Image Source: Freepik