Drinks for Diabetics: இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 62 மில்லியனுக்கும் அதிகமான நோயாளிகளுடன் இந்தியா, உலகின் நீரிழிவு நோயாளிகளின் தலைநகரமாக மாறியுள்ளது. நீரிழிவு நோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன, இதில் மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் இந்தியாவில் அதிக நகரமயமாக்கலுடன் தொடர்புடையவை.

நீரிழிவு நோயை நிர்வகிப்பது என்பது சீரான உணவைப் பராமரிப்பது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிப்பது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் அல்லது இன்சுலின் எடுத்துக்கொள்வது ஆகியவை அடங்கும்.
முக்கிய கட்டுரைகள்
நீரழிவு நோயாளிகள் எடுத்துக்கொள்ளும் சில பானங்களும் அவர்களது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றனர். பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பாத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் பானங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.
சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவும் பானங்கள்:
1. வெந்தய தண்ணீர் (Methi seeds water):
வெந்தயத்தில் உள்ள குளுக்கோமன்னன் ஃபைபர் உள்ளிட்ட கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், உட்கொண்ட சர்க்கரைகளை குடல் உறிஞ்சுவதைத் தாமதப்படுத்துகிறது மற்றும் ஃபெனுக்ரேசின் மற்றும் ட்ரைகோனெலின் போன்ற ஆல்கலாய்டுகள் இரத்தச் சர்க்கரை குறைக்க உதவுகின்றன. மேலும் வெந்தயத்தில் உள்ள அமினோ அமிலமான 4-ஹைட்ராக்ஸிசோலூசின் (4-OH Ile) இன்சுலின் சுரப்பை ஊக்குவிக்கிறது.
2. கிலோய் மூலிகை தண்ணீர் (Giloy water):
கிலோய் என்பது மரங்களில் படரக்கூடிய ஒரு மூலிகைத் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் காணப்படும். நோயெதிர்ப்பு சக்தி மிக்க இந்த மூலிகை தாவரத்தில் ஆல்காய்டு சேர்மங்களில் ஒன்றான பெர்பெரின் உள்ளது. பல்வேறு ஆய்வு முடிவுகளின் படி, இந்த பெர்பெரின் ரத்த சர்க்கரை அளவை குறைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Green tea vs Coffee: காபியை விட கிரீன் டீ நல்லதா? - உண்மை இதோ!
3. இலவங்கப்பட்டை தேநீர் (Cinnamon Tea):
இலவங்கபட்டையில் உள்ள கிளைகோஜன், இரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க இன்சுலினைப் போல் செயல்படுகிறது.
4. வேம்பு தேநீர் (Neem Tea):
வேம்பு கலந்த இந்த கசப்பான தேநீரின் சுவை பிடிக்காமல் கூட போகலாம், ஆனால் இதில் உள்ள மருத்துவ நன்மைகள் மகத்தானது. வேம்பு இலைகளை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரானது, நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு, அழற்சி எதிர்ப்பு மருந்தாகவும் செயல்படுகிறது.
5. பாகற்காய் ஜூஸ் (Bitter Melon Juice):
பாகற்காய் நீரழிவு நோயாளிகளுக்கான வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில் இதில் இன்சுலின் மட்டுமின்றி பிற நீரழிவு எதிர்ப்பு ரசாயனங்களும் உள்ளன. இது டைப் 2 நீரழிவு நோயாளிகளுக்கு கூட சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
Image Soure: Freepik