Morning Drink For Diabetic Patient: இன்றைய நவீன காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பொதுவான நோயாக மாறிவிட்டது. நீரிழிவு நோயைப் பொறுத்த வரை உணவு முறைகளில் கவனம் கொள்வது மிக முக்கியமானதாகும். இதன் மூலம் மட்டுமே இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். உணவு முறைகளுடன் சில ஆரோக்கியமான வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கலாம்.
குறிப்பாக காலை நேரங்களில் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள் மற்றும் பானங்களில் சர்க்கரை நோயாளிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எந்தவொரு உணவுப் பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் சுகாதார நிபுணரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது மிக நல்லது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Fruits: சர்க்கரை நோயாளிகள் பயமில்லாம இந்த பழங்களை சாப்பிடலாம்
சர்க்கரை நோயாளிகளுக்கான காலை பானங்கள்
நீரிழிவு நோயாளிகள் காலை நேரத்தில் இந்த ஆரோக்கியமான பானங்களை அருந்துவது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
மெத்தி நீர்
நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மையை வெந்தய நீர் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் செரிமான செயல்முறையை மெதுவாக்குகிறது. இவை கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உறிஞ்சுதலை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதற்கு சிறந்த வழியாக வெந்தயத்தை நீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளலாம். வெந்தயத்தை முந்தைய நாள் இரவிலேயே நன்கு ஊறவைத்து, அடுத்த நாள் காலையில் அந்த நீரைக் குடிக்கலாம்.
கிரீன் ஸ்மூத்தி
பச்சை இலை, பச்சை காய்கறிகள், தேங்காய் தண்ணீர், போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் கலப்பு பானமே கிரீன் ஸ்மூத்தி ஆகும். பொதுவாக கீரை, முட்டைக்கோஸ், காலார்ட் கீரைகள், புதினா, செலரி, போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஏன் கிரீன் ஸ்மூத்தி நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது தெரியுமா? இது குறைந்தளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் அளவையும், ஊட்டச்சத்து மிக்கதாகவும் காணப்படுகிறது. மேலும், இது நீரேற்றமிக்க பானமாகும்.
ஆம்லா ஜூஸ்
இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் ஆம்லா சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் நச்சுக்கள் சேர்வதைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, ஆம்லா சாற்றில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளைக் குறைக்கிறது. மேலும் இது இயற்கையாகவே இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar For Diabetes: சர்க்கரை நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை சாப்பிடுவது நல்லதா?
பாகற்காய் சாறு
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் சாறு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் இயற்கையாகவே இன்சுலின் போன்று செயல்படக்கூடிய கலவை நிறைந்துள்ளது. இதை தினமும் அருந்தி வருவதன் மூலம் மருந்து உட்கொள்வதைக் குறைக்கலாம். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க பாகற்காய் சாறு சிறந்த தேர்வாக அமைகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினந்தோறும் பாகற்காய் சாறு அருந்தலாம்.
கற்றாழை சாறு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கற்றாழை சாறு சிறந்த தேர்வாகும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் குறியீட்டைக் கொண்டுள்ளது. உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வேகமாக காயத்தைக் குணமாக்கவும், சிறுநீரக நோயைத் தடுக்கவும் உதவுகிறது. கற்றாழை சாறு அருந்துவது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து, இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது.
இதில் கொடுக்கப்பட்டுள்ள பானங்கள் அனைத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு உதவும் வகையில் அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Morning Drinks For Diabetics: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவு குறைய காலையில் இந்த ஜூஸ் குடிங்க
Image Source: Freepik